என் மலர்

  நீங்கள் தேடியது "Siruvani Dam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
  • ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது

  கோவை,

  சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீராதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

  பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி, மார்ச் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது.

  அதைத்தொடர்ந்து ஏப்ரல்,மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் வந்தது.

  ஜூன் மாதத்தில் ஒரு அடிக்கும் குறைவாக சரிந்தது. இதனால், சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டன.

  இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருவதால், சிறுவாணி அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது.

  இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறுகையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 7 கோடி லிட்டரில் இருந்து 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்ப ட்டுள்ளது.

  பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது.
  • தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது.

  மேட்டுப்பாளையம்,

  கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. இந்த அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரளத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

  இந்த மாதம் முதல் வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம், 11 அடி என நிலையாக இருந்து வந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.

  சிறுவாணியில் நேற்று காலை நிலவரப்படி அடிவாரத்தில் 31 மி.மீ. மழையும், அணைப்பகுதியில், 27 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக நீர்மட்டம் 12.14 அடியாக உயர்ந்துள்ளது.

  இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. நல்ல மழையை எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.

  இதேபோல மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  நேற்றுமுன்தினம் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 80 அடி அணையில் நீர் இருப்பு இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 83.5 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

  அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினை நீங்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 நாட்களாக பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

  கோவை,

  கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்ப ட்ட நகரையொட்டிய கிரா மங்களுக்கு நீராதார மாக சிறுவாணி அணை விளங்கு கிறது. 49.50 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்ப ட்டு வந்தது.

  வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கட ந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் குறைந்தது.

  இந்நிலையில் கேரளத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக 15 மி.மீ முதல் 20 மி.மீ வரை மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ள்ளது.

  இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

  சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறை ந்தாலும் சிறுவாணியில் உள்ள பழமையான தடுப்ப ணையில் 3 அடிக்கு உள்ள தண்ணீர் மூலம் குடிநீர் விநியோகம் தடைபடாமல் வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டது. தற்போது கேர ளத்தில் பருவமழை தொ டங்கி யுள்ளதால் அணை யின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் பருவ மழை தீவிரமடைந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரி க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
  • வரும் நாட்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

  கோவை:

  சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளதால் வருகிற நாட்களில் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.

  49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

  பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

  மார்ச்சில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது. அதை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது.

  தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று நிலவரப்படி 2.85 அடியாக குறைந்தது.

  இதனால் குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து 3.60 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

  வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

  இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

  ஜூன் இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும்.

  பின்னர் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.

  மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டை போல பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை
  • கோவை மக்களின் குடிநீர் ஆதரமாக விளங்குகிறது

  கோவை,

  அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சரும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி வெளி யிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:-

  சிறுவாணி குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி பகுதி, 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராமங்கள் ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதாக துவங்கியுள்ளது. சிறுவாணி அணயின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் மழைநீரை 50அடி வரை தேக்கி வைக்க முடியும். தற்போதைய நிலையில் 45அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்புகள் இருந்தும், கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி உள்ளது. இதனால், அணையில் தற்போது 37அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் வரும் டிசம்பர் மற்றும் 2023 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சிறுவாணி அைணயில் 45அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.

  இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பற்றாக்குறையினை போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா முதல் மந்திரிக்கு கடிதம் எழுதினார்.
  • கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை திறந்து விட்டுள்ளது.

  சென்னை:

  அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சிறுவாணி அணையை நீராதாரமாகக் கொண்ட கோயம்புத்தூர் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூ.16.16 கோடி மதிப்பீட்டில் அரசாணை எண். 2343, நாள் 28.11.1976ல் 12.74 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

  தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே ஆன ஒப்பந்தத்தின் அடிப்படையில் 650 மில்லியன் கன அடி கொள்ளவுள்ள அணை மற்றும் நீர் புகுகிணறு ஆகியவை கேரள எல்லையில் தமிழக அரசின் நிதியில் அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையில் இருந்து வருடத்திற்கு 1300 மில்லியன் கன அடி (நாளொன்றுக்கு 101.40 மில்லியன் லிட்டர்) வழங்கப்பட வேண்டும்.

  கடந்த மூன்று ஆண்டுகளாக கேரள நீர்ப்பாசனத் துறையானது இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச நீர்மட்டத்தை 878.50 மீட்டருக்கு பதிலாக 877.00 மீட்டராகக் குறைத்து பராமரித்து வருகிறது. நீர்மட்டம் 1.50 மீட்டர் குறைந்ததால் 122.05 மில்லியன் கன அடி நீர் சேமிப்பு பற்றாக்குறை ஏற்பட்டது.

  கேரள நீர்ப்பாசனத்துறையால் நீர் எடுப்பு கோபுரத்தில் உள்ள வால்வு கட்டுப்படுத்தப்பட்டு வந்ததால், கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாள்தோறும் வழங்கப்படவேண்டிய 101.4 மில்லியன் லிட்டர் நீர் அளவு குறைந்து, 40 மில்லியன் லிட்டர் நீரை மட்டுமே வழங்கப்பட முடிந்தது.

  இந்த பிரச்சனை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல் மந்திரிக்கு 1.2.2022 அன்று கடிதம் எழுதினார்.

  கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பற்றாக்குறையினை போக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.06.2022 அன்று மீண்டும் கேரளா முதல் மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

  தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க, கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை திறந்து விட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, போதிய அளவு நீர் வழங்க இயலும்.

  கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இரு மாநிலங்களுக்கிடையே ஆன ஒப்பந்தத்தின்படி வேண்டிய நீர் வழங்கிய கேரளா முதல் மந்திரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை நகர மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரம் சிறுவாணி அணையாகும்.
  • கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் கோவை நகருக்கு நேற்று வரை 50 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கி வந்தனர்.

  கோவை:

  கோவை மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை உயர்த்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

  அந்த கடிதத்தில் கோவை நகர மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரம் சிறுவாணி அணையாகும். தற்போது, கோவை மாநகராட்சி பகுதிக்கு ஒரு நாளில் 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் சிறுவாணி அணையில் இருந்து வழங்கப்படுகிறது.

  கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக கடந்த 1973-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழகம்-கேரளா இடையில் போடப்பட்ட இந்த 99 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஜுலை 1-ந் தேதி முதல் அடுத்த ஜூன் 30-ந் தேதி வரை ஆண்டுக்கு 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீர் தரப்பட வேண்டும்.

  இந்நிலையில், கேரளாவின் நீர்ப் பாசனத்துறையானது, சிறுவாணி அணையின் அதிகபட்ச நீர் இருப்பு அளவை, ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நீர் இருப்பு அளவான 878.50 மீட்டருக்குப்பதில் 877 மீட்டராக தொடர்ந்து பராமரித்து வருகிறது. குறைக்கப்பட்ட அளவான 1.5 மீட்டரின் மூலம், 122.05 மில்லியன் கன அடி நீர் பற்றாக்குறையாகி உள்ளது. இது ஒட்டுமொத்த பற்றாக்குறை அளவில் 15 சதவீதமாகும். இது கோடைக்கால மாதங்களில் கோவையின் குடிநீர் தேவையை சமாளிப்பதில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

  கடந்த 6 ஆண்டுகளாக, ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 1.30 டி.எம்.சி.க்கு பதில், 0.484 டி.எம்.சி.யில் இருந்து 1.128 டி.எம்.சி. வரை மட்டுமே ஆண்டுதோறும் நீர் வழங்கப்படுகிறது. கோவை நகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில் அணையின் கொள்ளளவை 878.50 மீட்டராக உயர்த்த வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

  கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் கோவை நகருக்கு நேற்று வரை 50 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கி வந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கேரள அரசு மற்றும் நீர்பாசனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 7.30 மணிக்கு ஒப்பந்தப்படி கோவை நகருக்கு வழங்க வேண்டிய 101.40 எம்.எல்.டி. குடிநீரை திறந்து விட்டனர்.

  இதன் காரணமாக கோவை பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும்.
  • இந்த விஷயத்தில் கேரள முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

  சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் கேரள அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, ஏற்கனவே கடிதம் எழுதியிருந்ததாகவும், கேரள முதலமைச்சர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
  • சிறுவாணி அணையின் நீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

  கோவை:

  கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் நீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

  கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்ததால், அணையின் நீர்மட்டமானது 874 மீட்டர் வரை உயர்ந்தது.சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு பாதுகாப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டது.

  இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்ட வில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரிய தொடங்கியது.

  இந்த நிலையில் , தற்போது, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அணைக்கு செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த வாரத்தில் 870.10 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 871.20 மீட்டராக உயர்ந்துள்ளது.

  இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாள்களாக இடைவெளிவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பருவ மழை தொடரும் என்பதால், மெல்ல மெல்ல நீர் மட்டம் உயரும். அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

  கோவை:

  கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை இருந்து வருகிறது.

  இங்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளது. நேற்று காலை, 8 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 21 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அடிவாரத்தில் மழைப்பொழிவு இல்லை.

  ஆனாலும் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால் அணையில் 5 செ.மீ., நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று 18.5 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

  4-வது வால்வு மூடப்பட்டு இருப்பதால், 5 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது. அதில், 3.2 கோடி கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

  பருவ மழை தொடரும் என்பதால், மெல்ல மெல்ல நீர் மட்டம் உயரும். அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo