என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தொடர் மழையால் மீண்டும் நிரம்பிய சிறுவாணி அணை
By
மாலை மலர்16 Aug 2018 6:24 AM GMT (Updated: 16 Aug 2018 6:24 AM GMT)

கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையோர பகுதியில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணை மீண்டும் நிரம்பியது.
கோவை:
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகிறது.
கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். இந்த அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 10-ந்தேதி நிரம்பியது. இதனால் நாள் ஒன்றுக்கு 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. எனவே நீர்மட்டம் மளமளவென குறைந்தது.
ஒரு வாரத்துக்கு முன்பு நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக அணையோர பகுதிகளில் கனமழை பெய்தது. எனவே நீர்வரத்து அதிகரித்து அணை மீண்டும் நிரம்பியது.
கனமழையால் சிறுவாணி அணைக்கு செல்லும் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அணைக்கு செல்ல முடியவில்லை.
கேரள அதிகாரிகள் அளித்த தகவலின்படியே அணை மீண்டும் நிரம்பிய விவரம் கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
மழை காரணமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இதனால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல இன்று 11-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
மேலும் தொடர் மழையால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்கோனா பகுதியில் 260 மில்லி மீட்டர் (26 சென்டி மீட்டர்) மழை பதிவானது. வால்பாறை பரம்பிகுளம் ஆழியாறு திட்ட பகுதியில் 186, வால்பாறை தாலுகா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-
பீளமேடு - 11.60, மேட்டுப்பாளையம் - 6, பொள்ளாச்சி - 65, பெரியநாயக்கன்பாளையம் - 10, சூலூர் - 7.20, வேளாண் பல்கலைக்கழக பகுதி - 20, கோவை தெற்கு - 14

Next Story
×