என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு.
    • விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

    நெல்லை:

    நடிகர் பிரபு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு. எனது தந்தை ஆசியும், எனது ஆதரவும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசீர்வதிக்கிறேன்.

    விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது. விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    • வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1180 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 122.95 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 456 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. வருசநாடு, அரசரடி, கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1191 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 59.68 அடியாக உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதியடைந்தனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    குடிநீருக்காக 69 கனஅடியுடன் சேர்த்து 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3542 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 224 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 30 கனஅடியும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.2, தேக்கடி 20.4, கூடலூர் 8.2, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 4.6, வீரபாண்டி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து செல்கின்றனர்.
    • குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    மாநாடு நடைபெறும் வி சாலை பகுதி தமிழகம் முழுவதும் பிரபலமான இடமாக தற்போது உருவெடுத் துள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பலர் மாநாடு திடல் அருகே வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இதுபோன்று நேற்று இரவு மின் ஒளியில் ஜொலித்த மாநாடு திடலை பார்ப்பதற்காக குடும்பத்துடன் குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    சொகுசு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிளிலும் மேலும் அருகில் உள்ள கிராம வாசிகள் சைக்கிள்களிலும் வந்து மாநாட்டு திடலை பார்த்து சென்றதால் சுற்றுலா தலம் போல் காட்சியளித்தது விக்கிரவாண்டி சாலை.

    • 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
    • சர்க்கரை ஆலைகளுக்கு வழி வகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலை நோக்குத் திட்டமாக முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

    2021-ம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 624 கோடி ரூபாய் 4 லட்சத்து 44 ஆயிரத்து 857 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழி வகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

    விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    முதன் முறையாக ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய்ச் செலவில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.

    திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம்-11.74 லட்சம் மெட்ரிக் டன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குறுவை நெல்சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர். ரூ.14.94 கோடி செலவில் 1,75,052 விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.

    கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,99,725 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 44 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    இப்படிப் பல்வேறு திட்டங்களின் மூலம் சிறப்பான முன்னேற்றங்கள் கண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது வேளாண்துறை. சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் பொது மக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இப்பூங்கா தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 ஆண்டுகளாக மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
    • ஆசிரியர்களை அலையவிடுவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாத சம்பளத்தை முன்னதாக வழங்கவேண்டும் அல்லது ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் அல்லது வட்டியில்லா முன்பணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். அதற்குக் கூட தி.மு.க. செவி சாய்க்க மறுக்கிறது என்பது வேதனை அளிக்கும் செயல் ஆகும். அறப்பணி செய்யும் ஆசிரியர்களை அலையவிடுவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தீபாவளிப் பண்டிகையை பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாக வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
    • இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

    விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் அதிகாலை முதல் வாகனங்களில் அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.

    சென்னை- விக்கிரவாண்டி ஜி.எஸ்.டி ரோட்டில் விஜய் கட்சி கொடி கட்டிய கார்கள், பஸ்கள், வேன்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.

    இதன் காரணமாக விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் த.வெ.க. கட்சி வாகனங்கள் செல்ல தடுப்புகளை அகற்றி தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.

    • மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
    • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் த.வெ.க முதல் மாநில மாநாடு சிறக்க விஜய் மற்றும் தொண்டர்களுக்கு விஜய் சேதுபதி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் த.வெ.க புதிய பயணம் வெற்றியடைய விஜய்க்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்தார்.


    • திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியே காத்திருந்தனர்.
    • விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன்.

    வேலூர் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவரது மகள் லாவண்யா அடுக்கம்பாறையில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நேற்று இரவு தாயும் மகளும் வேலூரில் இருந்து புறப்பட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

    திடலுக்குள் யாரையும் அனுமதிக்காததால் திடலுக்கு வெளியே விடிய விடிய இருவரும் காத்திருந்தனர். இதுபற்றி லாவண்யா கூறியதாவது:-

    எனக்கு விஜய்யை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. எப்படியாவது இந்த முறை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் புறப்பட்டு வந்தோம். எங்கள் ஊரில் இருந்து என்னைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள்.

    கண்விழித்து விடிய விடிய காத்திருந்தது கஷ்டமாக தெரியவில்லை. எப்படியாவது இன்று விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். எனக்கு இப்போது 17 வயது ஆகிறது. வருகிற தேர்தலில் முதல் ஓட்டு போடுகிறேன். அதுவும் விஜய்க்கு போடப் போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
    • மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன

    திருச்சி:

    விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி வி. சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வாகனங்களில் செல்வோர் திருச்சி புறநகர் பகுதியில் ஓய்வெடுத்து செல்லவும், அவர்களுக்கு காலை உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அவர்களூக்கு மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

    இதற்காக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.எல்.சீனிவாசன் தலைமையில் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இணைந்து 6 ஆயிரம் உணவு பொட்டலங்களை தயார் செய்தனர். புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. பின்பு அவை பொட்டலங்களாக கட்டப்பட்டு மாநாட்டுக்கு சென்ற தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

    த.வெ.க. தொண்டர்கள் இணைந்து நடிகர் விஜய்க்காக தங்களது சொந்த பணத்தில் இந்த உணவை தாயார் செய்ததாக தெரிவித்தனர். இரவு முழுவதும் கண்விழித்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக வி.எல்.சீனிவாசன் தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
    • தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.

    விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார். மாநாட்டில் வந்த அவர், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். அதில் தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் விடுமுறை கேட்டேன், ஆனால் நிறுவனத்தில் விடுப்பு தர மறுத்தார்கள், மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்குவேன் என கூறினார்கள், நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் என இளைஞர் பேட்டியளித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சில நாட்களுக்கு முன்னர், விடுப்பு தரவில்லை என்றால் வேலை உதறி விட்டு மாநாட்டிற்கு வருபவனே உண்மையான தொண்டன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • முதியவரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • திருடன் தப்பி ஓட்டம்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் முதியவரை பிடித்து வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக அக்கம் பக்கத்தினரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கிராமத்தில் ஐயாமுத்து என்ற 86 வயதுடைய முதியவர், அவருடைய மனைவி லட்சுமி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

    திடீரென நேற்று இரவு அதேபகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சித்துள்ளார். இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வயதானவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததும் முதியவரை காப்பாற்றுவது போல் நடித்துள்ளர். அருகில் உள்ள பொருட்களை எடுத்து வீசியும், முதியவரின் கழுத்த பிடித்து இறுக்கியும் மிரட்டல் விடுத்தார்.

    அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது பலத்த காயம் அடைந்த முதியவர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    ×