என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.
- ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தை தமிழகத்தின் 2-வது பெரிய வாரசந்தையாகும். இந்த வாரசந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் விற்பனை செய்யப்படும் முக்கிய சந்தையாகும்.
இந்த சந்தையானது ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவதால் இந்த சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களுடைய விளை நிலங்களில் வளர்க்கப்படுகின்ற தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இந்நிலையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இந்த வார சந்தைக்கு தனி மவுசு உண்டு. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள், வியாபாரிகள் வர்த்தக ரீதியாக ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது இந்த வாரசந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இன்று கொண்டு வந்துள்ளனர்.
செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியபாரிகள் கொண்டு வந்துள்ள நிலையில் அதிகாலை தொடங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் விற்பனையானதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.
ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.
வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்த சந்தைக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சந்தை வளாகம் சுற்றிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- திருவள்ளூர் பகுதிகளில் புதிய நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாகும்.
- ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் தரமாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரிசி விலை குறைந்துள்ளது. நெல்லின் வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றின் காரணமாக அரிசி விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 கிலோ அரிசி மூட்டை தற்போது சந்தையில் ரூ.930 முதல் 1700 வரையில் கிடைக்கிறது. அரிசியின் தரத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி மூட்டைகள் அனைத்துமே 20 ரூபாய் குறைந்து உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சம்மேளன தலைவரான துளசிங்கம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் மக்கள் பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்குவதில் தான் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர். நெல்வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றால் 26 கிலோ அரிசி மூட்டை ரூ.20 வரையில் குறைந்துள்ளது.
இட்லி அரிசியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.1010-க்கு விற்பனையான 26 கிலோ இட்லி அரிசியின் விலை தற்போது 980-ஆக வும், ரூ.1030-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசியின் விலை 990-ஆகவும் குறைந்துள்ளது.
செங்குன்றம் பகுதிக்கு தினமும் லாரிகளில் வருகை தரும் நெல்லின் அளவு அதிகரிப்பு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், கடம்பத்தூர், பகுதிகளில் புதிய நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாகும்.
அதே நேரத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் தரமாக உள்ளது. இதுவும் அரிசி விலை குறைவுக்கு ஒரு காரணமாகும். 1 கிலோவில் இருந்து 20 கிலோ வரையில் மட்டுமே அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
அதனால் வியாபாரிகள் அனைவருமே 26 கிலோ அரிசி பையையே விற்பனை செய்கிறார்கள். 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி மூட்டைகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்பதால் 25 கிலோ மூட்டையை 26 கிலோவாக வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.
விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு வந்த தொண் டர்கள் மற்றும் நிர்வாகி களால் திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிந்தன.
மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை அனைத்திலுமே கட்சி தொண்டர்கள் காலை, மதியம் என உணவை சாப்பிடுவதற்கு அலைமோதினார்கள். இதன் காரணமாக சாலை யோரம் உள்ள கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலை உணவாக இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை தொண்டர்கள் வாங்கி சாப்பிட்டதால் ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.
மேலும் பலர் உணவுகள் கிடைக்காமல் திணறிவந்தனர். ஆனால் மாநாட்டில் இரவுநேர உணவுகளுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நாளை மறுநாள் 29-ந் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது எத்தகைய அணுகுமுறை? என்பது தெரியவில்லை. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிடக்கூடாது என இலங்கை நினைக்கிறதோ? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது.
உடனடியாக விடுதலை செய்வதற்கும், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் ரத்து.
- திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரெயில்களின் சேவையில் மாற்றம்.
சென்னை:
தீபாவளி பண்டிகை, வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை தான் பொதுமக்கள் அதிகமானோர் புத்தாடை எடுப்பது, பொருட்கள் வாங்குவது என ஷாப்பிங்கில் ஈடுபடுவார்கள்.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் தற்போது மழை பெய்யாததால் சிரமம் இல்லாமல் பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் பொதுமக்கள் ஏராளமானோர் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
சென்னையை பொருத்த வரை பெரும்பாலான மக்கள் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குவதற்காக சென்னை தி.நகர் பகுதிக்கு வருவது வழக்கம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மின்சார ரெயிலில் வந்து மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஷாப்பிங் செய்வது வழக்கம். மேலும் குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியும் அங்குள்ள கடைகளில் ஷாப்பிங் செய்வார்கள்.
அதேபோல் வண்ணாரப்பேட்டையில் ஷாப்பிங் செய்ய செல்லும் பொதுமக்கள் சென்னை கடற்கரை வரை மின்சார ரெயிலில் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வண்ணாரப்பேட்டைக்கு சென்று ஷாப்பிங் செய்வார்கள்.
இதன் காரணமாக தீபாவளி ஷாப்பிங் செய்ய நினைத்த பொதுமக்கள் இன்று மின்சார ரெயில்களை நம்பி இருந்தனர்.
இந்த நிலையில் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை, வழக்கமாக இயக்கப்படும் 60 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கான அறிவிப்பை சென்னை ரெயில்வே கோட்டம் திடீரென வெளியிட்டது.
இதற்கு மாற்றாக, 20 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும், 35 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்தது. அதேபோல் சென்னை கடற்கரை-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று 60 மின்சார ரெயில்களை ரத்து செய்திருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் சென்னை தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்கள் கடும் திணறலுக்கு உள்ளா னார்கள். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
இதனால் அனைத்து மின்சார ரெயில்களிலுமே கடும் நெரிசல் காணப்பட்டது. நெரிசல் காரணமாக ரெயிலில் ஏற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இன்று தி.நகர், குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்கு தீபாவளி ஷாப்பிங் செய்வதற்காக பொதுமக்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு பஸ்களிலேயே வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால் ஷாப்பிங் செய்வதற்காக இன்று ஒரே நாளில் பொதுமக்கள் பெரும்பாலானோர் வந்ததால் இன்று காலை முதலே பஸ்களிலும் அதிக நெரிசல் காணப்பட்டது.
நேரம் செல்லச்செல்ல, அதிக பயணிகள் வந்ததால் வணிக மையங்கள் உள்ள இடங்களில் எல்லாமே இன்று பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதுகுறித்து தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்கள் கூறியதாவது:-
சென்னையில் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் சாதாரண நாட்களிலேயே, பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிலையில், தீபாவளி ஷாப்பிங் செய்ய செல்வதற்காக மின்சார ரெயில்களை நம்பி இருந்தோம்.
ஆனால் இன்று மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தனர். இதனால் வேறு வழியின்றி பஸ்களிலேயே சிரமப்பட்டு சென்று தீபாவளி ஷாப்பிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரெயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். அல்லது தீபாவளி பண்டிகை முடிந்தபிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையான இன்று மின்சார ரெயில்களை ரத்து செய்திருப்பது பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்டிகை நாட்களில் ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக கூடுதல் மின்சார ரெயில்களை இயக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கமான ரெயில்களை கூட ரத்து செய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது.
- ஒரு தொண்டர் சத்தியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நடந்தே வருகை தருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். விஜய்-ன் முகமூடி அணிந்த படி தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களின் நெகிழ்ச்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஒரு தொண்டர் சத்தியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நடந்தே வருகை தருகிறார்.
மேலும் தமிழகவெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு சௌந்தரராஜா அவர்களின் தலைமையில், சென்னை, வடபழனியில் தொடங்கி விக்கிரவாண்டி வரை நமது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.
பெங்களூருவில் இருந்து பாண்டிசேரி செல்லும் ரெயிலில் பயணித்த ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் என கோஷம் எழுப்பி கொண்டாடினர்.
இதற்கும் மேலாக மாநாட்டிற்கு விடுமுறை கொடுக்காததால் வேலையை உதறி விட்டு மாநாட்டிற்கு ஒரு தொண்டர் வருகை தந்துள்ளார்.
தமிழ்நாட்டை தவிர கேரளா, கர்நாடகாவில் இருந்து விஜய் ரசிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விழுப்புரம் செல்கிறார்கள். இந்த ரசிகர்கள் கர்நாடகாவில் இருந்து 289 கிலோமீட்டர் ஆட்டோவிலேயே மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இப்படி தவெக மாநாடு தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விபத்தில் 3 தவெக தொண்டர்கள் இறந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
- உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
- வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடைய வில்லை.
சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால், வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரியை நம்பி முப்போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், வாழ்வாதாரத்தையும் இழந்து, குடிநீருக்கும் திண்டாடும் நிலைமை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது.
பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டையும் சேர்த்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பாசன நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாலும், வயல்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டியிருப்பதாலும் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வீதம் நான்காண்டுகளுக்கு சேர்த்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
- காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.
வடமதுரை:
மழை காலத்தில் இடி, மின்னல் அடிக்கும் போது காளான் முளைப்பதுண்டு. கிராமப்புறங்களில் இந்த காளான்களை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வழக்கம் நகர் புறங்களிலும் தொடரவே செயற்கை முறையில் காளான்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
காளான்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் உடலில் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக ஆய்வுகள் கூறிவரும் நிலையில் இதன் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. செங்குளத்துப்பட்டியில் உள்ள சுந்தர மகாலட்சுமி என்பவரது தோட்டத்தில் இன்று காலை 2 கிலோ எடையுள்ள மிகப்பெரிய காளான் முளைத்திருந்ததை அவரது மகன் கவின் பார்த்தார்.
இதுகுறித்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவவே அந்த காளானை ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் அந்த காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.
- சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
- சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சென்னை:
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 35.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பகல் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
டானா சூறாவளி காரணமாக காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புயல் காற்றின் திசையை வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றியது, புயலைச் சுற்றி காற்று குவிந்ததால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பகல் வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை காணப்படுகிறது.
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, சென்னையில் சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, கன்னியா குமரியில் பெய்த மழையின் தீவிரம் குறையும் என்றனர்.
- திமுகவில் இருந்த தலைவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாக திகழ்ந்தவர்கள்.
- பேச்சுக்கலை என்பது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வல்லமை படைத்தது.
சென்னை:
'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* திமுக என்பது பேசிப்பேசி ஆட்சியை பிடித்த இயக்கம் என்பார்கள். ஆனால் என்ன பேசினோம் என்பதை சொல்லாமல் தவிர்த்து விடுவார்கள்.
* மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம், உலக வரலாறு உள்ளிட்டவை குறித்து பேசினோம் என்பதை சொல்வதில்லை.
* உலகம் முழுவதும் நடந்த புரட்சி, பெண்ணடிகை தனத்திற்கு எதிராக பேசியவர்கள் திமுக பேச்சாளர்கள்.
* திமுகவில் இருந்த தலைவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாக திகழ்ந்தவர்கள்.
* பழந்தமிழர் இலக்கியங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
* பேச்சுக்கலை என்பது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வல்லமை படைத்தது.
* நான் வைக்கும் தேர்வுகளில் எல்லாம் 100 மதிப்பெண்களை பெறுகிறார் உதயநிதி.
* இளைஞரணி செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு.
* நீட் தேர்வுக்கு தடை கோரி கையெழுத்து இயக்கம், நீர்நிலை தூர்வாரும் பணியை சிறப்பாக செய்தவர் உதயநிதி.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், களப்போரில் துணை நிற்கவுள்ள கருத்தியல் சொற்போர் வீரர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
- சிறையில் தனது அறையில் இருந்த முருகானந்தத்திற்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அய்யனு. இவரது மகன் முருகானந்தம் (வயது 30).
இவர் கடந்த ஆண்டு சிவகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 105 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிறையில் தனது அறையில் இருந்த முருகானந்தத்திற்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறை வார்டன்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகானந்தம் இறந்துவிட்டார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு.
- விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
நெல்லை:
நடிகர் பிரபு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு. எனது தந்தை ஆசியும், எனது ஆதரவும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசீர்வதிக்கிறேன்.
விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது. விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவர் அவர் கூறினார்.






