திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் ஓட்டல்களில் நிரம்பி வழிந்த கூட்டம்

கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.
திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் ஓட்டல்களில் நிரம்பி வழிந்த கூட்டம்
Published on

விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு வந்த தொண் டர்கள் மற்றும் நிர்வாகி களால் திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிந்தன.

மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை அனைத்திலுமே கட்சி தொண்டர்கள் காலை, மதியம் என உணவை சாப்பிடுவதற்கு அலைமோதினார்கள். இதன் காரணமாக சாலை யோரம் உள்ள கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

காலை உணவாக இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை தொண்டர்கள் வாங்கி சாப்பிட்டதால் ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

மேலும் பலர் உணவுகள் கிடைக்காமல் திணறிவந்தனர். ஆனால் மாநாட்டில் இரவுநேர உணவுகளுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com