என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா தலம் போல் காட்சியளித்த விக்கிரவாண்டி சாலை
- வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து செல்கின்றனர்.
- குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
மாநாடு நடைபெறும் வி சாலை பகுதி தமிழகம் முழுவதும் பிரபலமான இடமாக தற்போது உருவெடுத் துள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பலர் மாநாடு திடல் அருகே வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.
இதுபோன்று நேற்று இரவு மின் ஒளியில் ஜொலித்த மாநாடு திடலை பார்ப்பதற்காக குடும்பத்துடன் குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
சொகுசு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிளிலும் மேலும் அருகில் உள்ள கிராம வாசிகள் சைக்கிள்களிலும் வந்து மாநாட்டு திடலை பார்த்து சென்றதால் சுற்றுலா தலம் போல் காட்சியளித்தது விக்கிரவாண்டி சாலை.
Next Story






