இரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: முதியவரை பிடித்து மிரட்டல் விடுக்கும் காட்சி வைரல்

முதியவரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருடன் தப்பி ஓட்டம்.
இரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: முதியவரை பிடித்து மிரட்டல் விடுக்கும் காட்சி வைரல்
Published on

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் முதியவரை பிடித்து வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக அக்கம் பக்கத்தினரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கிராமத்தில் ஐயாமுத்து என்ற 86 வயதுடைய முதியவர், அவருடைய மனைவி லட்சுமி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

திடீரென நேற்று இரவு அதேபகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சித்துள்ளார். இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வயதானவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததும் முதியவரை காப்பாற்றுவது போல் நடித்துள்ளர். அருகில் உள்ள பொருட்களை எடுத்து வீசியும், முதியவரின் கழுத்த பிடித்து இறுக்கியும் மிரட்டல் விடுத்தார்.

அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது பலத்த காயம் அடைந்த முதியவர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com