என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு TIDEL Park அமைக்க உள்ளது.
    • மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக்கூட பல்வேறு வகைகளில் சிரமப்பட வேண்டிய அவலநிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இச்செயல், வாக்களித்த மக்களுக்கு திமுக செய்து வரும் மாபெரும் துரோகமாகும்.

    கடந்த 54 மாத காலமாக, வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வரும் விடியா திமுக ஆட்சியில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, இராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு TIDEL Park அமைக்க உள்ளது. இங்கு TIDEL Park அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைக்க இருக்கும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 17.11.2025 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், ராசிபுரம் ஆண்டகலூர் கேட், திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர். கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஏக்கருக்கு 564 ரூபாயை உழவர்கள் பிரீமியமாக செலுத்த வேண்டும்.
    • பெரும்பாலான பகுதிகளில் உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு பெறுவதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களில் இதுவரை வெறும் 48% மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்றால், சம்பா பயிர்களை காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 69,571 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் ஏக்கரில் சம்பா நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவு செய்யப்பட்ட பயிர்களில் 4 லட்சத்து 16,241 ஏக்கர் பயிர்கள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறை சிக்கல்கள் காரணமாக மீதமுள்ள பயிர்களுக்கு இன்னும் காப்பீடு பெற முடியவில்லை.

    சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஏக்கருக்கு 564 ரூபாயை உழவர்கள் பிரீமியமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் சேதமடையும் பட்சத்தில், விதிகளுக்கு உட்பட்டு ஏக்கருக்கு ரூ.37,600 வரை காப்பீடாக வழங்கப்படும். நவம்பர் 15-ஆம் தேதிக்குள் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பாதி அளவு கூட காப்பீடு செய்யப்படவில்லை.

    கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால், அவர்களிடமிருந்து சாகுபடி சான்றிதழ் பெற முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் தான் பெரும்பாலான பகுதிகளில் உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியாததற்கு அவர்கள் காரணமல்ல.... மாறாக, அரசு எந்திரம் தான் காரணம். எனவே, உழவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

    சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
    • ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 17-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ராமநாதபுரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்.
    • 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    மகளிர் நலனிற்காக ரூ.40 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இந்த நடமாடும் ஊர்திகளில், டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி, செமி ஆட்டோ அனலைசர் உள்ளிட்ட பல வசதிகளுடன் நடமாடும் மருத்துவ ஊர்தடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய் பிரசாரம் செய்கின்றனர்.
    • ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜ.க. ராட்சத பலத்துடன் உள்ளது. நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில் மு.க. ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார்.

    மு.க. ஸ்டாலின் நினைத்திருந்தால் பா.ஜ.க.வை அரவணைத்து செல்லலாம். ஆனால் அதை தவித்து ராகுலுக்கு துணையாக நிற்கிறார்.

    பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய் பிரசாரம் செய்கின்றனர். தவறான கருத்துக்களை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். எதிர்மறை கருத்துகளுக்கு அந்த இடத்திலேயே பதிலடி தர வேண்டும்.

    நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு பெற வேண்டும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன்.

    அடுத்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும். அது போல் நாமும் வளர வேண்டும். ராகுல் வரலாறு என்ன. அவரை போல அரசியல் வரலாறு கொண்ட நபர்கள் யாராவது உள்ளனரா? கொள்கை தான் அவரது கோட்பாடு. ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார். அதுவரை காங்கிரஸ் கட்சியினருக்கு தூக்கம் வராது.

    தி.மு.க. இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என பா.ஜ.க.வினர் கூறுவது அவர்கள் எங்கள் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கின்றனர் என தெரிகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது என்று கூறலாம். நாங்கள் கொள்கை கூட்டணி.

    கொள்கைக்காக உழைத்து வருகிறோம். கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று நான் கூறினேன்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கொஞ்சம் ஓட்டு விழும். ஆனாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போத்தனூரில் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
    • சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12657), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) அதிகாலை 1.30 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (22649), அதற்கு மாற்றாக மறுநாள் (27-ந்தேதி) அதிகாலை 1.40 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.

    * எழும்பூரில் இருந்து வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமாக மதுரை செல்லும் நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    * போத்தனூரில் இருந்து வருகிற 21-ந்தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06124), வழக்கமாக சென்டிரல் வரும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.

    * போத்தனூரில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06124), வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06151), வழக்கமாக கன்னியாகுமரி செல்லும் நேரத்தைவிட 25 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19,21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் குண்டக்கல் செல்லும் சிறப்பு ரெயில் (06091), வழக்கமாக செல்லும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12691), வழக்கமாக நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12601), வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
    • வெள்ளி விலையும் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் சற்று சரிவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் இறுதி வரை விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11-ந்தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்தை மீண்டும் தாண்டியிருந்த நிலையில், நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஒன்பதாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600

    10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840

    09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-11-2025- ஒரு கிராம் ரூ.173

    11-11-2025- ஒரு கிராம் ரூ.170

    10-11-2025- ஒரு கிராம் ரூ.169

    09-11-2025- ஒரு கிராம் ரூ.165

    08-11-2025- ஒரு கிராம் ரூ.165

    • த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
    • கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.

    த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    * த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

    * தலைவர் விஜய்க்கு மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி அதிகரித்துள்ளது.

    * பா.ஜ.க., தி.மு.க.-வை தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்.

    * த.வெ.க. தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.

    * கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஐ.டி. காரிடர்: எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கை அம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், எம்கா நகர் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் இணைப்பு, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் இணைப்பு, ராமப்பா நகர், ராமப்பா நகர், சி.பி.ஐ.டி. காலனி, மீனாட்சி புரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.

    • வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது.
    • கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டு, தமிழ்நாட்டில் மழை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்தாலும், பருவமழை அளவுக்கு இல்லை. இந்த இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் முழுவதுமாக நேற்று முன்தினம் முதல் வீசத் தொடங்கியிருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதன்படி, வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ந் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும்.

    17, 18-ந் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும் எனவும், 18, 19-ந் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

    இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.

    இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், பெரிய அளவில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என்றாலும், நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதனையடுத்து 3-வது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்த நிலைகளை கடந்து, புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இது முந்தைய 2 நிகழ்வுகள் நிறைவுபெற்றதும், இந்த புயல் எப்படி இருக்கும்? எங்கு கரையை கடக்கும்? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.

    • சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 17-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×