என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பையை அச்சுறுத்தும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
    • தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மும்பையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் மும்பையில் புறநகர் பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மிக கன மழை பெய்தது.

    இந்த 2 நாட்களில் மட்டும் 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் மும்பையில் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.

    இந்த நிலையில் இன்று 5-வது நாளாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையை அச்சுறுத்தும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    மும்பையில் மட்டுமின்றி தானே, புனே, ராய்கட், கோல்காபூர், ரத்தினபுரி உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மும்பையில் இருந்து பெரும்பாலான மாவட்டங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. அதுபோல வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மும்பைக்கு வரும் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    மும்பையில் நீடிக்கும் மழை காரணமாக இன்று ரெயில், பஸ், விமான போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    தொடர் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. 90 சதவீத மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



    மும்பையில் மழை காரணமாக இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் கூடுதலாக மும்பைக்கு விரைந்து உள்ளனர்.

    மும்பையில் பக்திமார்க்-செம்பூர் இடையே மோனோ ரெயிலில் சிக்கி தவித்த 800 பயணிகள் மீட்கப்பட்டனர். அதுபோல தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் மழை காரணமாக 12 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியை ஆட்டோவில் 120 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .

    பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி, ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்தார். ஆனால் ஓட்டுநர் ஆட்டோவை நிற்காமல் வேகமாக இயக்கியுள்ளார். அப்போது ஆட்டோவில் பின்னால் சிக்கி பெண் போலீஸ் அதிகாரி இழுத்து செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீஸ் அதிகாரியை மீட்டனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது காயமடைந்து பாக்யஸ்ரீ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது.
    • விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம்  மீட்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் சிக்கியிருந்த 582 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  

    விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், "வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரெயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது ரெயிலின் இயல்பான எடை தாங்கும் திறனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 104 மெட்ரிக் டன் அளவைவிட அதிகம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
    • மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.

    மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

    இந்நிலையில் அடுத்த 48 மணிநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

    மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் மிதி (Mithi) நதி அபாயக்கட்டத்தை தாண்டியதால், அப்பகுதியில் இருந்த 400 முதல் 500 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மும்பை விமான நிலையத்தில் 304 புறப்படும் விமானங்களும், 198 உள்வரும் விமானங்களும் தாமதமாகின. 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    தாழ்வான பகுதிகளான தாதர், மாதுங்கா, பரேல், சியோன் போன்ற இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகிறது.  

    இதற்கிடையே மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.

    • கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

    • மும்பை மற்றும் புறநகரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    • மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது
    • மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அந்தேரி மேற்கு, வீர தேசாய் சாலையில் 1 அடிக்கும் மேல் நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    மேலும் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • தேவையில்லாமல் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பை மற்றும் ராய்காட் மாவட்டத்தில் இன்று மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மும்பை:

    மும்பை மற்றும் புறநகரில் நேற்று இரவு விடிய விடிய இடைவிடாமல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சயானில் உள்ள சண்முகாந்தா ஹாலை சுற்றி சுமார் 1 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

    அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குர்லா, செம்பூர், கிங்சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விரைவு சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    தேவையில்லாமல் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிர் இழந்தனர். காயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    மும்பை தவிர பால்கர், தானே, ரத்னகிரி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மும்பை மற்றும் ராய்காட் மாவட்டத்தில் இன்று மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.
    • இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • இந்த வழக்கை மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    மும்பை:

    பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார்.

    ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.

    இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். அதிக வட்டியை தவிர்க்க, இதை முதலீடு என மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

    பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்தச் சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

    அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என கோத்தாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார்.

    இந்நிலையில், புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வாலிபர், இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • அப்போது வந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கியது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நபரை, ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கான் (வயது 20), இவர் போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக ஜாம்னர் நகருக்கு சென்றுள்ளார். விண்ணப்பித்து முடித்த உடன், அருகில் உள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கான் உடன் தகராறு செய்து கொடூரமாக அடித்துள்ளனர்.

    அதோடு மட்டுமல்லாமல் அவர் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இறுதியாக கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக புகார் அளித்து, அடித்து கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்நிலையத்தை கானின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

    ஏற்கனவே உள்ள பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×