என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் இந்த விபத்து நடந்துள்ளது.
    • அவரது காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டது

    பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு இன்று அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது   இந்த விபத்து நடந்துள்ளது.

    உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.

    லைஸ்சன்ஸ் பெற்று கோவிந்தா வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாக மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.  1990 களில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கோவிந்தா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 1272.07 புள்ளிகள் குறைந்து முடிவடைந்து.
    • நிஃப்டி 368.10 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் முடிவடைந்தது.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று கடுமையான சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் ஆயிரம் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் ஆனது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியிலும் சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. நேற்று வர்த்தகம் சென்செக்ஸ் 84,299.78 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 42.61 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆரம்பமானது. ஆரம்பமான அடுத்த வினாடியில் இருந்து சென்செக்ஸ் புள்ளிகள் உயரத் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி மும்பை சென்செக்ஸ் 84413.61 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி நேற்று காலை 26,061.30 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 25,810.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 25,821.35 புள்ளிகள் நிஃப்டி வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்துடன் நிஃப்டி 68.95 புள்ளிகள் குறைந்து தொடங்கியது. 9.30 மணி நிலவரப்படி 39 புள்ளி உயர்ந்து 25848 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

    நேற்றைய பங்குச்சந்தையில் நிஃப்டி 368.10 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் 1272.07 புள்ளிகள குறைந்த வர்த்தகமானது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • நாட்டு மாடுகளை விவசாயிகள் வளர்க்க வேண்டுமென அரசு ஊக்குவிக்கிறது.

    மகாராஷ்டிரா மாநில அரசு நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. வேத காலத்தில் இருந்தே ஆன்மிகம், அறிவியல் மற்றும் இராணுவ துறையில் பசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவகையாக பார்க்கப்படுகின்றன.இந்தியா முழுவதும் பல்வேறு வகையான மாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அண்மைய காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.

    ஆகவே நாட்டு மாடுகளை விவசாயிகள் வளர்க்க வேண்டுமென அரசு ஊக்குவிக்கிறது. மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம், நமது உணவில் அதிக ஊட்டச்சத்து பெற முடியும். சமூக - பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி கடுமையான பின்னடைவை சந்தித்தது. இந்தியா கூட்டணி அதிக இடங்களை வென்றது.

    இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை மனதில் வைத்து தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இந்தியாவின் வடமாநிலங்களில் பசுக்கள் புனிதமானவை என்று மக்கள் நம்புகின்றனர். பசுவின் கோமியத்தை புனித நீராக பருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமித் ஷா பூட்டிய அறைக்குள் பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
    • அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஒரு கூட்டணியும் காங்கிரஸ், உத்தரவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

    காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத பவார் கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தது. இநத வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் அறுவடை செய்ய இந்த கூட்டணி விரும்புகிறது. அதேவேளையில் மக்களவையில் அடைந்த தோல்வியை சட்டமன்ற தேர்தல் வெற்றியால் சரிக்கட்ட பா.ஜ.க. கூட்டணி விரும்புகிறது.

    இந்த நிலையில் பா.ஜ.க. தலைவருக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார் என உத்தவ் தாக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் "சமீபத்திய நாக்பூர் பயணத்தின்போது, அமித் ஷா பூட்டிய அறைக்குள் பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் என்னையும் சரத் பவாரையும் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஏன் பூட்டிய அறைக்குள் பேசுகிறார்? அவர் இங்கே மக்கள் முன் பேசி வேண்டும்.

    உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை ஏன் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால்தான் பா.ஜ.க.வால் மகாராஷ்டிராவை கொள்கை அடிக்க முடியும்.

    30 வருடத்திற்கு மேலாக எங்களுடன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க., பிரிந்தது. எனினும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவது (எதிர்க்கட்சி தலைவர்கள்) தொடர்பான பாஜகவின் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா? என ஆச்சரியப்படுகிறேன்.

    வருகின்ற தேர்தல் அதிகாரத்தை பற்றியது அல்ல. அவை மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முக்கியமானவை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    • சர்வதேச சந்தையில் திமிங்கல வாந்தியின் மதிப்பு மிகவும் அதிகம்.
    • கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 1-ம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ திமிங்கல வாந்தியை (அம்பர்கிரிஸ்) போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    காரில் பைப்லைன் ரோட்டில் இருந்து பத்லாபூருக்கு திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 1-ம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    திமிங்கில வாந்தி (Ambergris) என்பது திமிங்கிலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மிகவும் அதிகம்.

    இதனை பயன்படுத்தி வாசனை திரவியம், மருந்து மற்றும் மசாலாக்கள் தயாரிக்கபடுகிறது.

    இந்தியாவில் திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் திமிங்கிலத்தின் வாந்தியை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    • முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • மதவழி பாட்டு தலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மத்திய ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் மும்பையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெட் பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதவழி பாட்டு தலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய பின்னரே பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மும்பையில் உள்ள அந்தந்த மண்டலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு துணை போலீஸ் கமிஷனர்கள் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    2 பிரபலமான வழிபாட்டு தலங்கள் உள்ள குரோபோர்ட் பகுதியில் போலீசார் நேற்று அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர்.

    முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதையும், அணிவகுப்பு மற்றும் ரோந்து கண்காணிப்பையும் பார்வையிட்ட மும்பை பொதுமக்கள் பதட்டமான சூழ்நிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இது பண்டிகை காலத்தையொட்டி நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த மாதம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய மும்பை இப்போது துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளிக்கு தயாராகி வருகிறது. நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல் மும்பையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து விவாகரத்து கேட்ட மனைவியின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண், கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கடந்த 3 மாதங்களாக தாயுடன் வசித்து வந்தார். கணவர் வேலையில்லாதவர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதையும் அப்பெண் கண்டுபிடித்தாள்.

    அப்பெண் தாய் வீட்டில் இருந்த போது, நேற்று முன்தினம் அங்கு வந்த அந்த நபர் மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 பேருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகிய மாணவிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலம் 4 பேர் நட்பாகி உள்ளனர்.

    இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களால் பயன்கள் இருந்தாலும், பெரும்பாலும் குற்றச்சம்பவங்களே அதிகம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் வெளியாகும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களே சார்ந்து உள்ளது.

    அப்படி ஒரு சம்பவம்தான் புனேவில் நடந்துள்ளது. 4 பேருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகிய மாணவிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நான்கு பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள்.

    கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிகழ்வின் போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலம் 4 பேர் நட்பாகி உள்ளனர். இதன் காரணமாக 4 பேரும் வெவ்வேறு இடங்களில் மாணவியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் சிறார்கள் என்பதால் அவர்களை பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. மேலும் மற்ற 2 பேர் (வயது 20 முதல் 22 வயது வரை) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவதூறு வழக்கில் 15 நாள் சிறைத்தண்டனை.
    • அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

    அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் 15 நாள் சிறைத்தண்டனை வழங்கியதுடன், 25 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    பாஜக தலைவர் கிரித் சோமையா மனைவி டாக்டர் கிரித் மேதா சோமையா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

    மேதா சோமையா வழக்கறிஞர் விவேகானந்த் குப்தா மூலமாக வழக்கு தொடர்ந்திருந்தார். தனத அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத் அடிப்படைய ஆதாராம் இல்லாத மற்றும் முற்றிலும் அவதூறு வகையில் தனக்கும், தனது கணவருக்கும் எதிராக குற்றம்சாட்டியதாக தெரிவித்திருந்தார்.

    மீரா பயந்தர் முனிசிபல் கார்ப்பரேஷனின் அதிகார வரம்பிற்குட்பட்ட சில பொதுக் கழிப்பறைகளைக் கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக ரூ.100 கோடி ஊழலில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியதாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

    ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகள் அவதூறானவை. பொது மக்களின் பார்வையில் எனது கேரக்டரை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் கூறியிருந்தார்.

    • இடைவிடாது பெய்த மழையால் தானேவில் உள்ள மும்ப்ரா புறவழிச்சாலையில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மக்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களான தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இடைவிடாது பெய்த மழையால் தானேவில் உள்ள மும்ப்ரா புறவழிச்சாலையில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் உள்வரும் 14 விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்படாததால் வெவ்வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மழை காரணமாக பல ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மும்பையில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
    • காட்கோபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    மகாராஷ்டிராவில் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இன்று மாலை முதல் மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களில் அதி கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று [செப்டம்பர் 26] விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் நகரின் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

    சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தும் கனமழையால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள காட்கோபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

    • இரானி கோப்பை டெஸ்ட் போட்டி அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • இதில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதுகின்றன.

    மும்பை:

    இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

    இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023-24 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

    ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விவரம்:

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஷ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்.

    இதில் துருவ் ஜூரல் மற்றும் யாஷ் தயாள் வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகினர். அந்தப் போட்டியில் களமிறங்காத பட்சத்தில் அவர்கள் அணியில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை அணி விவரம்:

    அஜிங்ய ரகானே (கேப்டன்), பிரித்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், ஷ்ரேயஸ் அய்யர், சித்தேஷ் லாட், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), வித்தந்த் அத்தாத்ராவ் (விக்கெட் கீப்பர்), ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், ஹிமான்சு சிங், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி, முகமது ஜீனத் கான், ராய்ஸ்டன் டயஸ், சர்பராஸ் கான்.

    ×