என் மலர்
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், 3 ஆவது மாடியில் இருந்து குதித்து போராட்டம்.
- துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் , மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் 3 மாடியில் இருந்து குதித்தனர்.
மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பழங்குடியினர் பட்டியல் பிரிவில், தங்கர் என்கிற சமூகத்தினர் சேர்க்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் , மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் 3 மாடியில் இருந்து குதித்தனர்.
நர்ஹரி ஜிர்வால், தேசிய வாத காங்கிஸ் கட்சி(அஜித் பவார் அணி)யை சேர்ந்தவர். அவருடன் இருந்த 3 எம்.எல்.ஏ.,க்களும் அதே கட்சியை சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் மந்தராலயா என அழைக்கப்படும் தலைமைச்செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்த துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மந்த்ராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்தனர்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விரைந்து வந்த போலீஸ், மாடிகளுக்கு இடையே பாதுகாப்பு வலை விரித்தனர். இதானல், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எவ்வித காயங்கள் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.
- மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
- கள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.
இசைக்கான உயரிய விருதான கிராமி விருதுகளை வென்று உலக அளவில் ரசிகர்களை கொண்ட பிரிட்டனை சேர்ந்த பிரபல ராக் [ROCK] இசைக்குழுவாக கோல்ட்ப்ளே [COLD PLAY] திகழ்கிறது. அவர்களது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்த வருடம் [2025] ஜனவரியில் இந்தியா வருகை தர உள்ள கோல்ட்ப்ளே மும்பையில் தொடர்ச்சியாக ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
கோல்ட்ப்ளே இசைக்கு மும்பையில் அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோல்ட்ப்ளே நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனையை புக் மை ஷோ [BOOK MY SHOW] இணையதளம் அதிகாரபூர்வமாக விற்பனை செய்தாலும் டிமாண்ட் காரணமாக மற்ற தளங்களில் டிக்கெட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் "லவுஞ்ச்" இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் BOOK MY SHOW -ல் 1 டிக்கெட் ரூ. 35,000க்கு விற்கப்பட்டன. ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் இவ்வாறு சட்டவிரோதமாககள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.
எனவே இவ்வாறு நடக்கும் கள்ளச்சந்தை வியாபாரம் குறித்து BOOK MY SHOW நிறுவனம் சார்பில் போலீசிலும் புகார் அளித்துள்ளது. மேலும் முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் BOOK MY SHOW தெரிவித்துள்ளது. ஆனால் அதிக காசு கொடுத்து வேறு தளங்களில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அவை செல்லாது என அறிவிக்கப்ட்டுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.
- நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது.
- இன்று காலை 252.85 புள்ளிகள் சரிந்து 82,244.25 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது.
ஈரான்- இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆகியவை கடும் சரிவை கண்டுள்ளன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1769 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 546 புள்ளிகள் சரிந்தன.
நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று காலை 252.85 புள்ளிகள் சரிந்து 82,244.25 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது. அதன்பின் ஏற்றம் கண்டது. பின்னர் ஏற்றம் இறக்கமாக இருந்தது. 9.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,339 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. இன்று காலை 82,051.86 புள்ளிகள் வரை குறைந்த வர்த்தகம் ஆனது. அதிகபட்சமாக 82,649.16 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
இந்திய பங்குச்சந்தை நிஃப்டி நேற்று 25250.10 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 68 புள்ளிகள் சரிந்து 25181.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தற்போது அதாவது 9.40 மணிக்கு 25191.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. இன்று காலை 25,094.85 புள்ளிகள் வரை குறைந்த வர்த்தம் ஆனது. அதிகபட்சமாக 25,287.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
- புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.
- குற்றப்பிரிவு குழு போலீசார் சிறுமியை கண்டுபிடித்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மும்பை:
17 வயதுடைய மகள் கடத்தப்பட்டதாக தந்தை அளித்த புகாரில் அவரே கைதாகி உள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மேலும் சொந்த மகள் என்றும் பாராமல் பல ஆண்டுகளாக தந்தை கற்பழித்த அதிர்ச்சியூட்டும் சம்பவமும் வெளிவந்துள்ளது.
மத்திய மும்பையின் மகாலஷ்மி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனத தந்தையின் கொடுமையால் விரக்தியடைந்து வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. சிறுமியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சிறுமியின் தந்தை டார்டியோ காவல் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே, குற்றப்பிரிவு குழு போலீசார் சிறுமியை கண்டுபிடித்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான், சிறுமி தனது சொந்த தந்தையால் கடந்த 5 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரது தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
- விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நாடு முழுவதும் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி 3 கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், இந்த திட்டத்தின் 18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை நாளை (சனிக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
இதன் மூலம், 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
- அரசு பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு
- மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் இந்த பணிப்பெண்கள் அமர்த்தப்பட இருக்கின்றனர்.
முதற்கட்டமாக மும்பை-புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிப்பெண்கள் சிவ்னெரி சுந்தரி என்று அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பேருந்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது மற்றும் பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகளின் மோசமான நிலை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள மோசமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை அரசாங்கம் செய்கிறது என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் விஜய் தெரிவித்தார்.
- திங்கட்கிழமை வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- புதன்கிழமை (நேற்று) 52 வயத தொழில்அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 21.8 கி.மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடலுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமாக சாலை என்ற பெயரை இந்த அடகல் சேது கடல் பாலம் பெற்றுள்ளது.
ஆனால் தற்போது இந்த பாலத்தின் நடுப்பகுதிக்கு செல்லும் சிலர் அங்கிருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று காலை தொழில் அதிபர் பிலிப் ஷா என்பவர் இந்த பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரல் மும்பையின் மதுங்கா பகுதியில் வசநித்து வந்த ஷா, தனது காரில் அடல் சேது பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் காரை நிறுத்தி, கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பாலத்தின் மீது கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மீட்புக் குழு உஷார் ஆனது. அதிகாரிகள் ஷா கடலில் குதித்த பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தாக தெரிகிறது. இதன் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வங்கி மேலாளர் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அடல் சேது கடல் பாலத்தில் மூன்று நாட்களில் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது முடியை பிடித்து இழுத்து அவரை ஒருவர் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பாலம் தற்போது தற்கொலை செய்யும் பகுதியாக மாறி வருகிறதோ? என வாகன ஓட்டிகளம் ஒரு அச்சம் நிலவி வருகிறது.
- நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84266.29 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
- "நிஃப்டி 50" நேற்று முன்தினம் 25,796.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் 85 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆனது. அதன்பின் வர்த்தகம் சரிவை கண்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பங்குச்சந்தைகள் இயங்கவில்லை. நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84266.29 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 1264.2 புள்ளிகள் சரிந்து 83002.09 புள்ளிகளுடன வர்த்தகம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக ஏறிய வண்ணடம் இல்லை.
9.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 83,605 புள்ளிகள் வர்த்தகமானது.
இந்திய பங்குசந்தை நிஃப்டி 50, நேற்று முன்தினம் 25796.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 344.08 புள்ளிகள் குறைந்கு 25452.85 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கிறது.
- ஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உடன் அருகில் உள்ள ஹெபேடில் இருந்து புறப்பட்டது
- விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சியினுடையது என்று தெரியவனத்துளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் உள்ள பவ்தன் [Bavdhan] பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் இன்று [அக்டோபர் 2] அருகில் உள்ள ஹெலிபேடில் இருந்துஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் காலை 6.45 மணியளவில் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தீப்பிடித்திடுத்துள்ளது.
இந்த விபத்தில் மூவரும் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சியினுடையது என்றும் புனேவில் இருந்து மும்பையை நோக்கி அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீஸ் நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் விபத்து தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
- குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
- பணிச்சுமை இருந்ததாக மேலாளரின் மனைவி தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கி மேலாளர் ஒருவர் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (செப்டம்பர் 30) காலை சுமார் 10 மணி அளவில் அந்த நபர், பாலத்தின் தெற்கு பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து கீழே இறங்கிய நபர் திடீரென பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட நபரின் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவருக்கு மனைவி, ஏழு வயது மகள் மற்றும் மாமியாருடன் பரேலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.
இது குறித்து மூத்த காவல் ஆய்வாளர் ரோஹித் கோட் கூறும் போது, "போக்குவரத்துத் துறையிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது, அதன் பிறகு அந்த நபரைக் கண்டுபிடிக்க குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன."
"வாகனத்தின் பதிவு எண்ணை ஆர்டிஓவுக்கு அனுப்பியுள்ளோம், அவர் உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் எங்களுக்கு உதவினார். சக்ரவர்த்தி தனது தொலைபேசி மற்றும் கார் சாவியுடன் கடலில் குதித்ததால், எங்களால் அவரை அணுக முடியவில்லை, அதைத் தொடர்ந்து பரேலில் உள்ள அவரது முகவரிக்கு ஒரு குழுவை அனுப்பினோம்."
"நாங்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்தோம், விசாரணையின் போது, அவர் பணி அழுத்தத்தில் இருப்பதாக சக்ரவர்த்தியின் மனைவி எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.
*தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது!!
*தற்கொலை தடுப்பு சார்ந்த உதவிக்கு தயங்காமல் 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!!
- 2017 ஆம் ஆண்டு 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார்.
- கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான்.
தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார். கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றத்திற்காக 2021 ஆம் ஆண்டு குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்சொரவி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாங்கள் இதைவிட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை சந்தித்ததில்லை. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குச்சொரவிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
- தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை.
- தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை. கூட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு நடத்துவது என்று விவாதித்தனர்.
சென்னை:
மராட்டிய மாநில சட்ட சபைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
மும்பையில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். அவர்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவதற்காக அந்த மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க.வினரை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். மும்பையில் நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய மந்திரியும் தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவ், இணை பொறுப்பாளர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கருப்பு முருகானந்தம், ஏ.கே.முருகானந்தம், வினோஜ் செல்வம், கரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு நடத்துவது என்று விவாதித்தனர். தேர்தல் தேதி அறிவித்ததும் தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகள், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டியவர்கள் அவர்களுக்கான பகுதிகள், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்கள் என ஒவ்வொரு வருக்கும் பணிகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இது பற்றிய பட்டியல் தயாரித்து வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.






