நடு ரோட்டில் பட்டாசு வெடித்த நபர்- அடித்து தூக்கிய கார்: அதிர்ச்சி வீடியோ

நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நடு ரோட்டில் பட்டாசு வெடித்த நபர்- அடித்து தூக்கிய கார்: அதிர்ச்சி வீடியோ
Published on

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தீபாவளி அன்று அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நடந்துள்ளது.

தீபாவளி அன்று மக்கள் இரவில் சாலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்தனர். அப்போது, 35 வயதான சோஹம் படேல் என்பவர் சாலையின் நடுவில் பட்டாசுகளை வைத்து கொளுத்த முயன்றார்.

அப்போது திடீரென வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில், அந்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதன் வீடியோ வெளியாகியுள்ளது. பட்டேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காண இந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com