என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • நீங்கள் யோகியாக விரும்பினால் ‘கெருவா’ அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள்
    • ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர்கள் படை உங்கள் கிராமத்தை எரித்தார்கள், இந்துக்களை கொன்றார்கள்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பு தேசிய தலைவர்களும் மகாராஷ்டிராவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணிக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து விமர்சித்துள்ளார்.

    [இந்துக்கள்] சேர்த்திருந்தால் பாதுகாப்பு , தனித்தனியாக இருந்தால் வெட்டப்படுவார்கள் என்ற பதேங்கே தோ கதேங்கே என்ற கோஷத்தை எழுப்புபவர் ஒரு உண்மையான யோகியாக இருக்க முடியாது, நீங்கள் யோகியாக விரும்பினால் 'கெருவா' அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கார்கே ஆதித்யநாத்தை விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் அச்சல்பூர் [Achalpur] பகுதியில் பிரசாரம் செய்த அவர், நான் ஒரு யோகி, என்னைப் பொறுத்தவரை, தேசம் முதன்மையானது. ஆனால், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சமாதான அரசியலே முதன்மையானது. கார்கே ஜி என் மீது கோபப்படாதீர்கள், நீங்கள் கோபப்பட வேண்டும் என்றாலே ஐதராபாத் நிஜாம் மீது கோபப்படுங்கள்.

    ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர்கள் படை உங்கள் கிராமத்தை எரித்தார்கள், இந்துக்களை கொன்றார்கள். உங்கள் மதிப்பிற்குரிய தாய், சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களை எரித்தார்கள். இந்த உண்மையை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் என்று பேசினார்.மேலும் இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற முடியாது என்பதற்காக கார்கே இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார் என்றும் யோகி தெரிவித்தார்.

     முன்னதாக சுதந்திரத்திற்குப் பிறகு நிஜாம் ஆட்சி நடந்து வந்த ஐதராபாத் இந்தியாவுடன்  இணைய மறுத்தது. அப்போது இந்திய ராணுவத்துக்கும் நிஜாமின் ரசாகர்கள் படைக்கும் இடையே மோதல் நடந்தது. கார்கே தற்போது கர்நாடகாவில் கார்கேவின் சொந்த கிராமம் இருக்கும் பிடார் பகுதி அந்த சமயம் ஐதராபாத் நிஜாம் ஆளுகையின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதை நாங்கள் பூமியில் புதைத்து விட்டோம்.
    • ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப பெற முயற்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் மொழி பேசுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தின் புனேயில் நடைபெற்ற பேரணியில் பேசிய மோடி, "சட்டப்பிரிவு 370-ஐ யாராலும் திரும்பப் பெற முடியாது, அதை நாங்கள் பூமியில் புதைத்து விட்டோம்" என்று தெரிவித்தார்.

    சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கும் கோரிக்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அவர் மேலும் தெரிவித்தார்ர். தொடர்ந்து பேசிய அவர், "சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது."

    "அரசியலமைப்பு புத்தகங்களை நாட்டிற்கு காட்டுபவர்கள், மகாராஷ்டிராவில் வெற்று புத்தகங்களை விநியோகிப்பவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், அவர்கள் (காங்கிரஸ்) ஆறு முதல் ஏழு தசாப்தங்களாக நாட்டை ஆண்டார்கள். ஆனால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு ஏன் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவில்லை?".

    "மக்கள் ஆசியுடன் மோடி, உங்கள் சேவகர், சட்டப்பிரிவு 370-ஐ மண்ணுக்குள் புதைத்துவிட்டார். 370-வது பிரிவு காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து, காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தது."

    "காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சட்டப்பிரிவு 370 பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 370வது சட்டப்பிரிவை பா.ஜ.க. ரத்து செய்து மூவர்ணக்கொடியை அங்கு ஏற்றியது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டி பிரிவினைவாதிகளின் திட்டங்களை முறியடித்தோம்."

    "மஹாயுதி கூட்டணியால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்பது மகாராஷ்டிராவுக்கு தெரியும். மகாராஷ்டிராவில் மஹாயுதி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது. மஹா விகாஸ் அகாதி அரசாங்கத்தின் இரண்டரை ஆண்டுகள் எங்கள் திட்டங்களை நிறுத்துவதிலேயே செலவழிக்கப்பட்டன. இதுதான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கலாச்சாரம்,'' என்று தெரிவித்தார்.

    • நாங்கள் பிளவுபட்டோம், அதனால்தான் நாங்கள் கஷ்டப்பட்டோம்.
    • அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை.

    உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹஸ்டிங்ஸில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டார். நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஆதித்யநாத், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி- மகாராஷ்டிராவை "லவ் ஜிகாத் மற்றும் லேண்ட் ஜிஹாத் தளமாக" மாற்றுவதாக குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் பிரிந்ததால், இந்த நாடு பிளவுபட்டது, இந்துக்கள் பிரிந்ததால் கொல்லப்பட்டார்கள். அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிந்துவிடாதீர்கள். நாங்கள் பிளவுபட்டோம், அதனால்தான் நாங்கள் கஷ்டப்பட்டோம்."

    "அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. அது இறுதியாக 2019 இல் மோடியின் தலைமையில் தான் தீர்க்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் அமராவதியில் தவறு செய்யாதீர்கள், மீண்டும் பிரிந்தால், விநாயகப் பெருமானுக்கு பூஜை போடப்பட்டு, லவ், லேண்ட் ஜிகாத் என்ற பெயரில், இங்குள்ள நிலங்கள் கைப்பற்றப்படும்."

    "மகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள், ஏழைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றத் துணிந்தவர்களின் டிக்கெட்டை எமராஜா ரத்து செய்திடுவார்," என்று தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • சிவசேனா தலைவர் அர்ஜுன் கோட்கரை பாஜகவை சேர்ந்த ராவ்சாகேப் தன்வே சந்தித்து பேசினார்.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)). மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா நகரில் சிவசேனா தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன் கோட்கரை பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது தன்வே பக்கத்தின் நின்ற கட்சி ஊழியர் ஒருவரை தன்வே கோவத்தில் எட்டி உதைத்து அங்கிருந்து அங்கிருந்து நகரும்படி கூறினார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
    • நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் எங்கள் அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. எங்கள் தேர்தல் வாக்குறுதி மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும்.

    சுதந்திரத்திற்குப் பிறகு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகிறது.

    சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள். மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாடி கட்சியினர் தடையாக இருக்கிறார்கள்.

    பா.ஜ.க அரசு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள் என தெரிவித்தார்.

    • நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம்.
    • அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

    சுயநலனுக்காக இந்திய அரசியலமைப்பை சிதைத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சரன்சிங் தாகூரை ஆதரித்து மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    தேர்தல் கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜ.க. கட்சி அரசியலமைப்பு மாற்றும் என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

    அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சமூகநீதி, மதசார்பின்மை போன்ற அடிப்படை உரிமைகளை யாராலும் மாற்ற முடியாது. எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி அரசியலைமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசியலமைப்பை சிதைத்த பாவத்தை செய்த காங்கிரஸ்தான் இப்போது நம் (பா.ஜ.க.) மீது குற்றம் சுமத்துகிறது.

    நீங்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவ விரும்பினால் அது தலைவர்கள் கையில் இல்லை. மக்கள் கையில் உள்ளது. சாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது. மனிதன் ஜாதியால் பெரியவன் அல்ல அவனுடைய குணங்களால் மட்டுமே பெரியவன். தீண்டாமை, சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும்.

    நீங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறந்த நபரிடம் அவர்களின் சாதியைப் பார்க்காமல் செல்கிறீர்கள். நேர்மையான, ஊழலற்ற தலைவர்களையும், கட்சியையும் தேர்ந்தெடுக்கும் வரை உங்கள் எதிர்காலம் மாறாது

    இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

    • மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை.
    • தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)), மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவரை எதிர்த்து சரத் பவார் பேரன் யுகேந்திர பவார் களம் இறக்கப்பட்டுள்ளார். தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் யுகேந்திர பவார், மகா விகாஸ் அகாடி 175 முதல் 180 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுகேந்திர பவார் கூறுகையில் "மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை. மகா விகாஸ் அகாடி 175 இடங்கள் முதல் 180 இடங்களை பிடிக்கலாம்.

    நவம்பர் 23-ந்தேதி சரியாக எத்தனை இடங்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். வெற்றி நமதே. தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. இவைகள் அனைத்தும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம். பொதுவாக இந்தியா எப்போதும் மிகப்பெரிய மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது.

    இவ்வாறு யுகேந்திர பவார் தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவின் தொழில் முதலிய வளர்ச்சி வாய்ப்புகள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.
    • மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்ட முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி குஜராத்துக்கு மாற்றப்பட்டது.

    288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசின் மகா விகாஸ் அகாதி கூட்டணியும் பாஜவின் மாகாயுதி கூட்டணியில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்தார்.

    இந்நிலையில் ராகுல் காந்தி பொய்களை கூறிவருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான பாஜக குழு உயர் மட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது.

    அந்த மனுவில், ராகுல் காந்தி தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறி பொய்களை பரப்பி வருகிறார். மகாராஷ்டிரா மற்றும் மாநிலங்களிடையே விரோதத்தை வளர்த்து இந்திய ஒன்றியத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார்.

    தேர்தல் வெற்றிக்காக பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    'மகாராஷ்டிராவின் தொழில் முதலிய வளர்ச்சி வாய்ப்புகள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. மகாராஷ்டிராவின் பணத்தில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மற்றும் போயிங் விமானங்கள் உற்பத்தி மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது' என்ற ராகுல் காந்தியின் பேச்சு மகாராஷ்டிர இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்துகிறது.

    மகாராஷ்டிராவுக்கு 2024- 25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ. 70,795 கோடி அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று பாஜக தரப்பு கூறுகிறது.

    முன்னதாக நாட்டிலேயே முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலை சமீபத்தில் குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலையை டாடா நிறுவனம் மகாராஷ்டிராவில் திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் அரசியல் லாபத்துக்காக மோடி அரசு அதை குஜராத்துக்கு திருப்பி விட்டதாக மாகா. எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது 

    • உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • பிரதமர் மோடியின் பைகளை சோதனை செய்வார்களா என்று உத்தவ் தாக்கரே காட்டம்.

    மகாராஷ்டிராவின் யவத்மாலில் ஹெலிகாப்டரில் தரை இறங்கிய சிவசேனா (உத்தவ் தாக்ரே) தலைவர் உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, அமித் ஷா தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரது பைகளை நீங்கள் சோதனை செய்வீர்களா? என்று காட்டமாக தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரே பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் பரவியது.

    இதனையடுத்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "தேர்தல் ஆணையத்தின் மீது கோபமில்லை. அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பைகளை சோதனை செய்வார்களா என்று கேட்கிறேன். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் பைகளை தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?" என்று பேசினார்.

    • வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது.
    • எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.

    தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முழக்கத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.

    இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.

    மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது சகோதரர்களான அமித் மற்றும் தீரஜ் தேஷ்முக்கிற்காக ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லத்தூர் நகரம் தொகுதியில் அமித் தேஷ்முக்கும் லத்தூர் கிராமம் தொகுதியில் தீரஜ் தேஷ்முக்கும் போட்டியிடுகின்றனர்.

    லத்தூர் கிராமம் தொகுதியில் போட்டியிடும் தீரஜ் தேஷ்முக்கிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ரித்தேஷ் தேஷ்முக், "உங்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று வாக்குக் கேட்பவர்களின் கட்சிதான் உண்மையில் ஆபத்தில் உள்ளது. நேர்மையாக உழைப்பவர்கள் தர்மம் செய்கிறார்கள். வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது. எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் முதலில் வளர்ச்சியை பற்றி பேசுங்கள்.

    மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, அவர்களுக்கு வேலை வழங்குவது அரசின் பொறுப்பு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில், தீரஜ் 1.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் தீரஜ்க்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.
    • மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார்

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.

    தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யனாத் வாசகத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.

    இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.

     

    இந்நிலையில் பாஜகவின் இந்த வாசகம் குறித்து அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தற்போது விமர்சித்துள்ளார். சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவுடன் சேர்ந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதிவு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியிடம் பாஜக கூட்டணி அதிக இடங்களை இழந்ததால் கூட்டணியில் உள்ள அஜித் பவார் மீது அதிருப்தி எழுந்தது.

     

    அதுமுதல் அவ்வப்போது அஜித் பவார் கூறி வரும் கருத்துக்கள் பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்தன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அஜித் பவார் பேட்டியளித்துள்ளார்.

    அங்கு, batenge toh katenge' [ நாம் பிரித்திருந்தால் நம்மை வெட்டுவார்கள்] , ek hain toh safe hain [ ஒருவராக இருந்தால் ஆபத்து - இருவராக இருந்தால்தான் பாதுகாப்பு] எனவே இந்துக்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்ற செய்தித்தாள்களிலும் பிரசார மேடைகளிலும் பாஜக விளம்பரப்படுத்துவதைப் பற்றி அஜித் பாவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த அவர், நான் முதலில் இருந்தே அதை ஆதரிக்கவில்லை. பல முறை இதுபற்றி நான் கூறியிருக்கிறேன். மகாரஷ்டிராவில் இந்த வாசகங்கள் வேலைக்கு ஆகாது. உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பிற இடங்களில் வேண்டுமானால் இவை வேலை செய்யலாம் என்று தெரிவித்தார்.

     

    முன்னதாக யோகி ஆதித்யநாத் கூறிய இந்த கோஷம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அஜித் பவார், மகாராஷ்டிரா சதிராபாத்தில் சிவாஜி மகாராஜ், ராஜார்ஷி சாஹு மகாராஜ், மகாத்மா பூலே ஆகியோரும் நிலம். எனவே மகாராஷ்டிராவை மற்ற மாநிலங்களுடன் நீங்கள் ஒப்பிட முடியாது, இங்குள்ள மக்கள் இதை விரும்பமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

    மேலும் கடந்த வாரம் நடந்த பேரணியின்போது பேசிய அஜித் பவார், மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார். ஒரு பக்கம் பாஜக இந்த கோஷங்களுக்கு செய்தித்தாள்களின் விளம்பரம் கொடுத்து ப்ரோமோஷன் செய்து வரும் நிலையில் மறுபுறம் இதற்கு கூட்டணியில் உள்ள கட்சித் தலைவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி.
    • ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்துள்ள நிலையில் தற்போது 7 பேர் சஸ்பெண்டு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த மூன்று கட்சிகளிலும் வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், தங்களது கட்சி வேட்பாளர்களையும் எதிர்ப்பு போட்டியிடுகின்றனர். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மூன்று கட்சிகளும் தங்களது கட்சி தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பெரும்பாலான எதிர்ப்பு தலைவர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். சிலர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வேட்புமனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.

    அவர்களை கட்சிகள் சஸ்பெண்டு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றரன். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்திருந்தது. தற்போது மேலும் 7 பேரை சஸ்பெண்டு செய்துள்ளனர். மொத்தம் 22 தொகுதிகளில் 28 பேரை சஸ்பெண்டு செய்துள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு கட்சிகளாக பிரிந்து எதிரெதிர் கூட்டணியில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    ×