search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி: மேலும் 7 பேரை சஸ்பெண்டு செய்த காங்கிரஸ்
    X

    மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி: மேலும் 7 பேரை சஸ்பெண்டு செய்த காங்கிரஸ்

    • கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி.
    • ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்துள்ள நிலையில் தற்போது 7 பேர் சஸ்பெண்டு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த மூன்று கட்சிகளிலும் வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், தங்களது கட்சி வேட்பாளர்களையும் எதிர்ப்பு போட்டியிடுகின்றனர். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மூன்று கட்சிகளும் தங்களது கட்சி தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பெரும்பாலான எதிர்ப்பு தலைவர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். சிலர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வேட்புமனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.

    அவர்களை கட்சிகள் சஸ்பெண்டு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றரன். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்திருந்தது. தற்போது மேலும் 7 பேரை சஸ்பெண்டு செய்துள்ளனர். மொத்தம் 22 தொகுதிகளில் 28 பேரை சஸ்பெண்டு செய்துள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு கட்சிகளாக பிரிந்து எதிரெதிர் கூட்டணியில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    Next Story
    ×