என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பை நகர்ப்பகுதிகளில் 6.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கட்சிரோலி மாவட்டத்தில் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சச்சின் தெண்டுல்கர் போன்றோர் காலையிலேயே வாக்கு மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினார். மக்கள் அதிக அளவில் திரண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    என்றபோதிலும் காலை 9 மணி வரை அதாவது 2 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் தோராயமான 6.61 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    கட்சிரோலி மாவட்டத்தில் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அர்மோரி தொகுதியில் 13.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மும்பை புறநகர்ப் பகுதிகளில் 7.88 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பந்துப் மற்றும் முலுந்த் புறநகர்ப் பகுதிகளில் 10.59 சதவீதம் மற்றும் 10.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மும்பை நகர்ப்பகுதியில் 6.25 சதவீதம் வாக்குள் பதிவாகியுள்ளது. கொலபாவில் 5.35 சதவீதம் வாக்குள், வொர்லியில் 3.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
    • வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் ஓட்டலில் வாக்காளர்களை கவருவதற்காக வினோத் தாவ்டே ரூ.5 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்கூர் குற்றம் சாட்டினார்.

    வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாருக்கெல்லாம் பணத்தை பிரித்து தர வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டைரியும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து, வினோத் தாவ்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மறுத்துள்ளார்.

    இதனிடையே பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "ரூ.5 கோடி பணம் எங்கிருந்து வந்தது?. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து உங்களுக்கு டெம்போவில் அனுப்பியது யார்?" என்று பதிவிட்டுள்ளார்.

    • வினோத் தாவ்டே மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஓட்டலில் பணப்பட்டுவாடா செய்தபோது பிடிபட்டுள்ளார்.
    • வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    மகாராஷ்டிராவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி ஆதரவாளர்கள் வினோத் தாவ்டே முன்பு ரூபாய் நோட்டுகளை காட்டி வாக்குவாதம் செய்கின்றனர்.

    காங்கிரஸ் அந்த பதிவில், "பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஓட்டலில் பணப்பட்டுவாடா செய்தபோது பிடிபட்டுள்ளார். வினோத் தாவ்டே பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு சென்று அங்குள்ளவர்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

    இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். வினோத் தாவ்டே பணத்துடன் இருக்கும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் பணத்தின் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயல்கின்றனர்.இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது.

    வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாருக்கெல்லாம் பணத்தை பிரித்து தர வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டைரியும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து, வினோத் தாவ்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மறுத்துள்ளார். 

    • தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை.
    • மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை மந்திரியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் மீது நேற்றிரவு கடோல்-ஜலால்கேடா சாலையில் காரில் சென்றபோது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞசய் ராவத் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை. தேவேந்திர பட்நாவிஸ் தற்போது உள்துறை மந்திரியாக உள்ளார்.

    அவருடைய நகரில் முன்னாள் உள்துறை மந்திரியை கொல்ல சதி நடைபெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு முதலில் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இந்த 2 வருடத்தில் மகாராஷ்டிராவின் சட்ட ஒழுங்கை தேவேந்திர பட்நாவிஸ் கெடுத்துவிட்டார். மும்பை தெருக்களில் பாபா சித்திக் போன்றோர் கொல்லப்பட்டதுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    இந்த அடிப்படையில் முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கப்பட்டு, கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு பட்நாவிஸ், அவரே முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், என்.சி.பி (எஸ்.பி.) தலைவருமான அனில் தேஷ்முக் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரின் மீது கற்கள் வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக் கட்டோல் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் பெல்பாட்டா அருகே தேஷ்முக்கின் கார் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசினர். தாக்குதலின் போது காயம் அடைந்த தேஷ்முக் உடனடியாக கடோல் சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    "இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியது. தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர்," என்று காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா கூறினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று பிரச்சாரம் நிறைவு பெற்றது. தற்போது தாக்குதலுக்கு ஆளான தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக், கடோல் சட்டமன்றத் தொகுதியில் என்சிபி (சரத்சந்திர பவார்) சார்பில் பாஜகவின் சரண்சிங் தாக்கூரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது கிடையாது.
    • பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பஹின் திட்டம் கேம் சேஞ்சராக இருக்காது.

    பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள மகாயுதி கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    இரு கூட்டணிகளிலும் ஆட்சியை பிடித்தால் முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன. இரண்டு கூட்டணிகளும் முதல்வர் வேட்பாளர் இவர்தான் என யாரையும் முன் நிறுத்தவில்லை.

    இந்த நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பல முதல்வர் முகங்கள் உள்ளன. தேர்தல் முடிவு வெளியான பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ஆரிஃப் நசீம் கான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கூறுகையில் "காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது கிடையாது. வளர்ச்சி மற்றும் சித்தாந்ததம் ஆகியவற்றை முன்னிறுத்திதான் போட்டியிடுவோம். மகா விகாஸ் அகாடியில் ஏராளமான முதல்வர் முகங்கள் உள்ளன. ஆனால் தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பஹின் திட்டம் கேம் சேஞ்சராக இருக்காது. பா.ஜ.க. மற்றும் ஷிண்டேயின் உண்மையான முகம் மகாராஷ்டிரா மக்களுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் பொய்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தல் பாடம் கற்பிக்கும்.

    இவ்வாறு நசீம் கான் தெரிவித்துள்ளார்.

    2019 தேர்தலில் நசீம் கான் 409 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா கட்சி தலைவரிடம் தோல்வியடைந்தார்.

    • அஜித் பவார் கோஷ்டியினருக்கு தக்க பதிலடி கொடுக்க சரத் பவார் திட்டம்.
    • அவர்களின் இடம் எது என்பதை உணரும் வகையில் பலத்த தோல்வியை மக்கள் கொடுக்க வேணடும்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இந்த நிலையில் சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் சரத் பவார் பேசினார். அப்போது துரோகிகளுக்கு அவர்களுடைய இடத்தை காண்பிக்க வேண்டும். இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    இது தொடர்பாக சரத் பவார் பேசும்போது கூறியதாவது:-

    1980 தேர்தலில் நம்முடைய கட்சியை சேர்ந்த 58 பேர் வெற்றி பெற்றனர். நான் எதிர்க்கட்சி தலைவரானேன். நான் வெளிநாட்டிற்கு சென்றிருந்தேன். பின்னர் நாடு திரும்பியபோது, முதல்வராக இருந்த ஏ.ஆர். அந்துலே சாகேப் ஏதோ சதித்செயல் செய்துள்ளார் என்பதை உணர்ந்தேன். 58 எம்.எல்.ஏ.-க்களில் 52 பேர் கட்சி தாவினர். நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார்.

    அந்த நேரத்தில் நான் ஒன்னும் செய்யவில்லை. மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்தித்தேன். மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்தேன். அடுத்த தேர்தலில் என்னிடம் இருந்து விலகிய 52 பேருக்கு எதிராக இளைஞர்களை களம் இறக்கினேன். என்னை விட்டு விலகிச்சென்ற 52 பேரும் தோற்கடிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா மக்களுக்கு இதற்கான பெருமைப்படுகிறேன். 1967-ல் எனது 27 வயதில் இருந்து எம்.எல்.ஏ.-வாக இருந்து வருகிறேன்.

    எனது சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். துரோகம் செய்தவர்களுக்கு அவர்களுடைய இடம் எது என்பதை காண்பிக்க வேண்டும். அவர்கள் தோற்கடிக்க மட்டும் செய்யக்கூடாது. மிகப்பெரிய அவர்களில் தோற்கடிக்க வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

    சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து சென்று பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனக்காக்கிக் கொண்டார். இதனால் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்ரேக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.

    • ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்

    மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு தரப்பு தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்து வருகிறார். பல்லார்பூரில் இன்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மகாயுதி வேட்பாளரும், பா.ஜ.க. தலைவருமான சுதிர் முங்கண்டிவாரை ஆதரித்து பேசிய அவர்,

    பழைய நகர மக்கள் (ஐதராபாத்) எப்போதும் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் பண்டிகைகளை விமர்சிக்கிறார்கள். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் மத வேறுபாடின்றி அனைவரையும் மதிக்கிறார்கள். இருப்பினும், சனாதன தர்மத்தை மதிக்காதவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

    சத்ரபதி சிவாஜி மற்றும் பால் தாக்கரே ஆகியோரின் உத்வேகத்தால் எனது கட்சி நிறுவப்பட்டது. நான் இங்கு வந்திருப்பது வாக்குகளுக்காக அல்ல. மராட்டிய மாநிலம் மற்றும் சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன் என்பர் பேசினார்.

    • அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.
    • புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிர அரசியல் களத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனல் பறக்கும் பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் மாகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான நவ்நீத் கவுர் ராணா மீது மகா. பிரசாரத்தின் போது சேர்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன்னாள் எம்.பி. நவ்நீத் கவுர் ராணா சென்றிருந்தார்.

    அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் முன்னாள் எம்.பி. நவ்தீப் கவுர் ராணா மற்றும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். கவுர் ராணா மீது கற்கள், நாற்காலியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக ராணா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.  நவ்நீத் ராணா  தமிழில் கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
    • மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

    மும்பை:

    மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். அவர் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள், ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

    மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நீண்ட கால திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.

    • பா.ஜ.க. ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிகிறது.
    • 2022-23-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24-ல் மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4-ல் இருந்து 7.6 ஆக குறைந்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிராசட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா நாட்டின் தொழில் மற்றும் சேவை துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. வேளாண்மையிலும் சிறந்து விளங்குகிறது. தற்போது மகாராஷ்டிராதான் நாட்டின் வணிக தலைநகரமாக உள்ளது. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் மகாராஷ்டிரா நாட்டின் வணிக தலைநகராக இருக்கும் என்பது தெரியவில்லை.

    பா.ஜ.க. ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிகிறது. நாட்டின் முதன்மையான மாநிலமாக மகாராஷ்டிராவை படிப்படியாக முன்னேற்றி கட்டி எழுப்பியது காங்கிரஸ் கட்சி தான்.

    2022-23-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24-ல் மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4-ல் இருந்து 7.6 ஆக குறைந்து உள்ளது. அதேபோல பற்றாக்குறை ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.

    மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்து உள்ளது. சேவை துறையின் வளர்ச்சியும் 13-ல் இருந்து 8.3 ஆக சரிந்து இருக்கிறது. மாநிலத்தின் மூலதன செலவினம் ரூ.85 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த சரிவு நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சரிவை ஏற்படுத்தியவர்களால் அதை நிறுத்த முடியாது. மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு இல்லை.

    மகாராஷ்டிராவில் வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவீதமாக உள்ளது. மாத சம்பளம் பெறுவோர் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி.
    • அரசியலமைப்பில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம் என்றார் ராகுல் காந்தி.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. [மகாயுதி] கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டின் குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

    அதில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம். செல்வம் பகிர்ந்தளிக்கப்பட்டால் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பில் எழுதப்பட்ட முதல் வரி இந்த நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அதன் முதல் வரி இந்த நாடு அதானி, அம்பானிக்கு சொந்தம் என்பது அல்ல என தெரிவித்தார்.

    ×