மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

ஹெலிகாப்டர் மற்றும் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மும்பை படகு விபத்து குறித்து இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பை படகு விபத்து:  பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
Published on

மும்பை:

மும்பையில் நேற்று மாலை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபண்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்றது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கடற்படை படகு பயணிகள் படகின்மீது மோதியது. இதில் இரு படகும் சேதமடைந்து மூழ்கின. படகுகளில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

இதையடுத்து கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் கடற்படை வீரர், கடற்படை ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் பலத்த காயமடைந்திருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாயமான 2 பயணிகளை மீட்புக்குழு தேடி வருகிறது.

கடற்படை ஹெலிகாப்டர், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், மும்பை படகு விபத்தில் மாயமான பயணி ஹன்ஸ்ராஜ் பதி(43)யின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான ஜோஹன் முகமது நிசார் அகமது பதான் (7) என்ற சிறுவனை தேடி வருகின்றனர்.

மும்பை படகு விபத்து குறித்து இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com