என் மலர்
நீங்கள் தேடியது "Maharashtra Cabinet"
- புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தற்போதைய அமைச்சர்களுக்கு அது நிவாரணமாக இருக்கும்.
- இரு அவைகளையும் கையாள்வது தற்போதைய பலத்துடன் மிகவும் கடினமாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் வரும் ஜூன் 2 ம் தேதி நடைபெறும் என சிவசேனா தலைவர் பாரத் கோகவலே நேற்று தெரிவித்தார். தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தற்போதைய அமைச்சர்களுக்கு அது நிவாரணமாக இருக்கும் என்றும் கூட்டத்தொடரின் போது தற்போதைய பலத்துடன் இரு அவைகளையும் கையாள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் கூறினார்..
மற்றொரு சிவசேனா எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக்கும் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இப்போது அனைத்து தடைகளும் அகற்றப்பட்டதால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்" என்றார்.
- மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன.
- துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு 3 இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவியேற்றனர்.
சில தினங்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது. ஏக்நாத் ஷிண்டே உள்துறையை கேட்டு வந்ததாகவும், அதற்கு பா.ஜ.க. மறுத்து வந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
இதில் முதல் மந்திரி பட்னாவிஸ் உள்துறையை மீண்டும் தன்வசம் வைத்துக்கொண்டார். அதனுடன் எரிசக்தி, சட்டம் மற்றும் நீதி, பொது நிர்வாகம் ஆகிய துறையையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டேக்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இலாகாக்களும், அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை, மாநில சுங்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
- மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
- பாஜகவில் இருந்து 9 பேர், சிவசேனா சார்பில் 9 பேர் பதவியேற்றனர்
மும்பை:
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை, அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
ஆனால் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர்.
இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக சார்பில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதிர் முங்கந்திவார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். சிவசேனா சார்பில் 9 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.






