என் மலர்
மகாராஷ்டிரா
- காங்கிரஸ்- சிவசேனா கூட்டணியில் இருந்தபோது அஜித் பவார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
- நேற்று முன்தினம் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்
நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 நாட்களாக நீடித்த குழப்பத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அவரது பினாமி வழக்கில் தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பினாமி சொத்துக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2021 ஆம் ஆண்டு ஆளும் காங்கிரஸ்- சிவசேனா கூட்டணியில் இருந்தபோது அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை துறை சோதனை நடத்தியது. இந்த பினாமி சொத்துக்கள் வழக்கில் சதாராவில் உள்ள சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சரத் பவார் தலைமையிலான கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு, அஜித் பவார் மீதான மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் துணை முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாளே அவரது ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை நேற்று விடுவித்துள்ளது.
எந்த ஒரு சொத்தும் அஜித் பவார் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பினாமி சொத்துக்களுக்கும் அஜித் பவார் குடும்பத்துக்கும் இடையே எந்த தொடர்பையும் உறுதி செய்ய போதிய ஆதாரம் இல்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- பணப்பரிமாற்றங்கள் ஆன்லைன் வழியே நடந்த பின், பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
மும்பை:
மாலேகான் பகுதியில் அமைந்த நாசிக் மெர்ச்சன்ட் கூட்டுறவு வங்கியுடன் (நம்கோ வங்கி) மற்றும் மகாராஷ்டிர வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகளின் வழியே நூற்றுக்கணக்கான கோடி அளவில் நடந்த பணப்பரிமாற்ற மோசடிகளை பற்றி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வங்கிகளின் பெருமளவிலான தொகை, 21 தனிப்பட்ட நிறுவனங்களுக்கு முதலில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பணப்பரிமாற்றங்கள் ஆன்லைன் வழியே நடந்த பின், பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன என தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மும்பை மண்டல அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள 7 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. அப்போது ரூ.13.5 கோடி கைப்பற்றப்பட்டது.
அகமதாபாத், மும்பை மற்றும் சூரத் நகரங்களில் உள்ள அங்காடியா மற்றும் ஹவாலா செயற்பாட்டாளர்களுக்கு இந்தப் பணம் சென்று சேர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தமிழ் தலைவாஸ் அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்தது.
இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.
16 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 9 தோல்வி, ஒரு டிரா என மொத்தம் 38 புள்ளிகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 42-36 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும்
புள்ளிப் பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
- 11-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை.
- ஜூலை- செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் நீடிக்கும் என அறிவித்தார். இதன்மூலம் 11-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது. ரிசர்வ் வங்கி மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிதான் ரெப்போ ஆகும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும். இது எதிர்பார்த்ததைவிட குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் டெல்லி, உ.பி. அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டி 32-32 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது. உபி யோதாஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகளுக்கு இடையிலான போட்டியும் 22-22 என சமனில் முடிந்தது.
இதன்மூலம் யு மும்பா அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.
- சிவசேனா தலைவர் துணை முதல்வராக பதவி ஏற்க தயங்குவதாக செய்திகள் வெளியானது.
- கடைசி நேரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வராக பட்நாவிஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரும், அஜித் பவாரும் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர்.
துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே பின்னர் கூறியதாவது:-
முதலமைச்சரான தேவேந்திர பட்நாவிஸ்க்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன். நாங்கள் ஒரு அணியாக பணியாற்றுவோம்
இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, நிதிஷ் குமார், யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர் கலந்து கொண்டனர்.
- புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
- மகாராஷ்டிரா ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு மும்பையில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இவரைத் தொடர்ந்து சிவ சேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- எஸ்டோனியா வீரர் 27 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
- அபிஷேக் சர்மா 28 பந்தில் சதம் விளாசி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா. இவர் டி20 கிரிக்கெட்டில் அணியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருறார். இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் பஞ்சாப்- மேகாலயா அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மேகாலயா 20 ஓவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். இதனால் அவர் 28 பந்தில் சதம் விளாசினார். 29 பந்தில் 8 பவுண்டரி, 11 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க பஞ்சாப் அணி 9.3 ஓவரிலேயே 144 ரன்கள் எடுதது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
28 பந்தில் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக எஸ்டோனியா வீரர் சஹில் சவுகான் சைப்ரஸ் அணிக்கெதிராக 27 பந்தில் சதம் அடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்திருந்தார். தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனை ஒரு பந்தில் மிஸ் செய்தாலும் 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதே தொடரில் உர்வில் பட்டேலும் 27 பந்தில் சதம் விளாசியுள்ளார். இவருவரும் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
- அதிக பட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
- குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு/ Share markets stock markets BSE sensex surge 809 point also nifty surgedமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,182.74 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. நேற்று சென்செக்ஸ் 80,956.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் சற்று குறைந்து உயர்ந்து வர்த்தகம் ஆனது. மதியம் 12 மணியளவில் சட்டென சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் அப்படியே உயர்ந்து அதிகபட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மதியம் 2.50 மணிக்கு சுமார் 900 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது. சரிவை சந்தித்து உடனடியாக மார்க்கெட் உயரத் தொடங்கியது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,765.86 புள்ளிகளில் வர்த்தம் நிறைவடைந்தது.
இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82317.74 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 240.95 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவந்தது. நேற்று நிஃப்டி 24,467.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. இன்று காலை நிஃப்டி 24,539.15 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,295.55 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 24,857.75 நிஃப்டி வர்த்தகம் ஆனது.
டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு 84.72 ரூபாயாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 84.75 ரூபாயாக இருந்த நிலையில் 84.72 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
- தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என சிவசேனா தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக் கொள்வார் என உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கூட்டணிக்குள் நிலவி வந்த முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி தொடர்பான குழப்பம் தீர்வுக்கு வந்துள்ளது.
- மும்பையில் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
- போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம் சல்மான்கானுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சல்மான் கான் படப்பிடிப்பில் சட்டவிரோதமாக நுழைந்த நபர் ஒருவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கால் செய்ய வேண்டுமா? என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையில் உள்ள சிவாஜி பார்க் பகுதியில் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்பகுதிக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நடமாடி கொண்டிருந்தார். இதனையடுத்து சிலர் அவரிடம் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கால் செய்ய வேண்டுமா? என்று பதில் அளித்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நபரை சிவாஜி பார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் உ.பி. யோதாஸ் அணி 8வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில் உ.பி. யோதாஸ் அணி 36-33 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 8வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.






