என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை மகன் தற்கொலை"
- தந்தையும், மகனும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கனகராஜின் மனைவி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
- இருவரையும் மீட்ட அவரது உறவினர்கள் குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). இவரது மகன் பாலாஜி (24). அதே பகுதியை சேர்ந்த கனகராஜின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கனகராஜ் மற்றும் அவரது மகன் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் மது குடித்து இறுதி சடங்கில் பங்கேற்றனர். மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.
தந்தையும், மகனும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கனகராஜின் மனைவி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் விரக்தி அடைந்த தந்தையும், மகனும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளுபடி மயங்கி விழுந்தனர்.
இருவரையும் மீட்ட அவரது உறவினர்கள் குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜியும் கனகராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓம்கார் தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் கேட்டு விடாப்பிடியாக இருந்துள்ளார்.
- மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு சென்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் 10-வது படித்து வந்த ஓம்கார் (16) தனது தந்தையிடம் படிப்பிற்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணப் பிரச்சனை காரணமாக அவனது தந்தையால் ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லை.
ஓம்கார் தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் கேட்டு விடாப்பிடியாக இருந்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை மீண்டும் பிரச்சினையை எழுப்பினார்.
பண்ணை மற்றும் வாகனத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்க இயலவில்லை என்று அவனது தந்தை கூறினார்.
இதனால் மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு சென்றார். அவன் பண்ணைக்குச் சென்றதாக அவரது குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் அவன் மறுநாள் காலை வரை திரும்பாததால் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து பண்ணைக்கு வந்த விவசாயி, மரத்தில் தூக்கில் தொங்கியபடி மகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். துக்கத்தில் மூழ்கிய அவர், தனது மகனின் உடலை அவிழ்த்துவிட்டு, விரக்தியில் அதே கயிற்றை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த மகன் ஓம்கார் 3 சகோதரர்களில் இளையவர். மகர சங்கராந்தியைக் கொண்டாட லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிரில் உள்ள தனது விடுதியில் இருந்து வீடு திரும்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு இருவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகன் தற்கொலை செய்த துக்கம் தாளாமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செல்போன் விளையாட்டால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது.
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(வயது40). கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் நவீன்குமார்(14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நவீன்குமார் அதிகமாக செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தான். இதனை அவரது தந்தை சுந்தர் அடிக்கடி கண்டித்து வந்தார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் நவீன்குமார் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடினார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த போது நவீன்குமார் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை தந்தை சுந்தர் கண்டித்து விட்டு வேலைக்கு வெளியே சென்றுவிட்டார். அப்போது சுந்தரின் மனைவியும் வெளியே சென்று இருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் சுந்தர் வீட்டுக்கு திரும்பி வந்த போது மகன் நவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் தான் மகன் தற்கொலை செய்து இறந்து விட்டான் என்று நினைத்து சுந்தர் மனமுடைந்தார்.
இதைத்தொடர்ந்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்கிடையே சுந்தரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் நவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பைத கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நவீன்குமாரின் உடலை இறக்கி அருகில் உள்ள அறையில் வைத்தனர். மேலும் சுந்தருக்கு ஆறுதல் கூறினர். ஆனாலும் தன்னால் தான் மகன் தற்கொலை செய்து கொண்டான் என மனவேதனையில் இருந்த சுந்தர் திடீரென தனது கையை கத்தியால் அறுத்து கொண்டு மகன் தற்கொலை செய்த அதே அறைக்குள் சென்றார். பின்னர் மகன் தற்கொலை செய்த அதே கயிற்றில் சுந்தரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலையை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த சுந்தர், அவரது மகன் நவீன்குமார் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் தற்கொலை செய்த துக்கம் தாளாமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்போன் விளையாட்டால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது.
- குடிபோதையில் வந்த அர்ஜூணன் தனது மனைவியை தாக்கினார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- இதனை நேரில் பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் அந்த மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 55). விவசாயி. இவரது மகன் உதயகுமார் (25).
கடந்த சில நாட்களாக அர்ஜூணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். எனினும் இந்த பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வந்தது.
நேற்று இரவும் இந்த பிரச்சினை வெடித்தது. எனவே, குடிபோதையில் வந்த அர்ஜூணன் தனது மனைவியை தாக்கினார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதனை நேரில் பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் அந்த மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தற்கொலை செய்த தந்தை-மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






