என் மலர்tooltip icon

    கேரளா

    • மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
    • நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதனை அதிகரிக்க முடிவு செய்த போது, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். இன்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர். விடுமுறை தினமான இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தவுடன் உடனடியாக திரும்பிச் செல்ல தொடங்குவதாகவும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார்.
    • சிபிஐ வேட்பாளர் சத்யன் மொகேரி 2வது இடம், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் டெபாசிட் இழந்தார்.

    கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறகினார்.

    முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா ? என்று நாடு முழுவதும் எதிர்பார்த்த நிலையில், மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்தார்.

    அவர் காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்றார். அதன்பின்பு பெருவாரியான வாக்குகளை வெற்றியின் விளம்பில் பிரியங்கா காந்தி இருந்து வந்தார்.

    இறுதியில், பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகளும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

    சிபிஐ வேட்பாளர் சத்யன் மொகேரி 2வது இடம், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் டெபாசிட் இழந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,02,849 வாக்குகள் பெற்றுள்ளார்.

    கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறங்கி உள்ளார். முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். அவர் காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்றார். அதன்பின்பு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியின் விளம்பில் பிரியங்கா காந்தி உள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி 5,57,451 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார். அவர் கிட்டத்தட்ட 3,68,319 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 1,89,132 வாக்குகளும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,02,849 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

    • பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • தற்போது சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. நடை திறக்கப்பட்டு 7 நாட்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தில் சாமி தரிசனம் செய்தவர்களை விட 1.75 லட்சம் பேர் அதிகம்.

    இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்கள், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி தரிசன முன்பதிவு செய்யப்படுகிறது.

    ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் குறிப்பிட்ட இலக்கான 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதில்லை. அதாவது தற்போது சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள்.

    முன்பதிவு செய்த பக்தர்கள் கடைசி நேரத்தில் வர முடியாமல் போனால் தங்களது ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு ரத்து செய்யும்போது உடனடி முன்பதிவு செய்ய வரும் பக்தர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் வாய்ப்பு அளிக்க முடியும்.

    அதேநேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள ஐகோர்ட்டு அனுமதிக்காக காத்து இருக்கிறது. ஐகோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறது.

    • பாலக்காடு தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா?
    • இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி வெற்றிபெறுவாரா?

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவி யேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதா கிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அவர்கள் இருவரும் அந்த தொகுதிகளின் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதன் காரணமாக வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாகின.

    வயநாடு மற்றும் செலக்கரா தொகுதி களுக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. பாலக்காடு சட்ட மன்ற தொகுதிக்கு நேற்று முன்தினம் (20-ந்தேதி) இடைத்தேர்தல் நடத்தப் பட்டது.

    இந்தநிலையில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (23-ந்தேதி) நடை பெறுகிறது.

    வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டி யிட்டனர். தேர்தலில் 64.69 சதவீத வாக்குகள் பதிவாகின.

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.


    இந்நிலையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி, அது போன்ற வெற்றியை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அதேபோன்று செலக்கரா சட்டமன்ற தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், பாலக்காடு சட்ட மன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சியும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதும் நாளை தெரிந்து விடும். 3 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

    • பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
    • விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்தவர் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் (வயது55). மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் நடிகர் அப்துல் நாசர், தான் பணிபுரியக்கூடிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்துல் நாசர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கேரளாவில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் யூசுப் தனது சகோதரருடன் நகைக்கடையை மூடிவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் இருவரையும் தாக்கி, பைக்கில் வைத்திருந்த 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட பிரவீன், விஜின், சதீசன், நிகில் ஆகியோரிடம் தங்கம் இல்லாததால் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு(2025) கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
    • கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாட தயாராகுவோம்

    கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

    மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும். மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என மந்திரி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "FIFA உலகக் கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு(2025) கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது கேரளா வரலாறு படைக்க உள்ளது. மாநில அரசின் முயற்சிகள் காரணமாக இந்த கனவு நனவாகி வருகிறது. சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராகுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பஸ்சின் முன் நின்றும், அமர்ந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    • பேருந்து எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று.

    இளமைக்காலத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வரக்கூடிய காதல் தனித்துவமானதாக இருக்கும். அது அவர்களை ஒருவித பரவசத்தில் ஆழ்த்திவிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    காதல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் மனிதப் பிறவியான நாம் புனிதமானதாக கருதும் ஒன்றாக இருக்கிறது.

    இப்படிப்பட்ட காதல் சிலருக்கு பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ, சிலருக்கு பணிபுரியும் போது கிடைக்கும் நட்பின் மூலமாகவே கிடைக்கிறது.

    காதலில் உண்மையாக இருந்து திருமண வாழ்வில் இணைபவர்கள், தங்களின் காதல் உருவாக காரணமாக இருந்த விஷயத்தை என்றும் மறப்பதில்லை.

    தாங்கள் முதன்முதலாக சந்தித்த இடம் உள்ளிட்டவற்றை மீண்டும் பார்க்கும் போது சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.

    செல்போன்களின் பயன்பாடு, போட்டோ-சூட் கலாச்சாரம் அதிகமாக இருக்கும் தற்போதைய நவநாகரீக காலத்தில் திருமணமான பிறகு முன்பு சென்றுவந்த இடங்களுக்கெல்லாம் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் பொக்கிஷமாக வைத்துக்கொள்வார்கள்.

    அப்படித்தான் ஒரு காதல் ஜோடி, தங்களது காதலுக்கு அடித்தளமாக இருந்த அரசு பஸ்சை திருமணமான கையோடு சென்று பார்த்திருக்கிறார்கள்.

    மேலும் அந்த பஸ்சின் முன் நின்றும், உள்ளே அமர்ந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் நடந்த அந்த உணர்வுப் பூர்வமான நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதியரின் மகன் அமல். இவரது ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பஸ் வசதி கிடையாது.

    அப்போது மாணவ பருவத்தில் இருந்த அமல், தனது ஊருக்கு அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

    அனால் அவரது மனு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்தது. இருந்தாலும் எப்படியாவது தனது ஊருக்கு பஸ்சை பெற்றுவிடவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்த அமல், தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தபடி இருந்தார்.

    அதன் பலனாக அவரது ஊருக்கு பஸ் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுத்தது. அனப்பாடு-சீனிவிளை வழித்தடத்தில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் சீனிவிளை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அந்த பஸ் சீனிவிளை பகுதி மக்களின் உயிர்த்துடிப்பாக மாறியது.

    அந்த அளவுக்கு ஊர் மக்கள் அந்த பஸ்சை பயன்படுத்தி வந்தனர். அவர்களுடன் வாலிபர் அமலும் தினமும் கல்லூரிக்கு அந்த பஸ்சிலேயை சென்று வந்தார். தனது விடாமுயற்சியால் கிடைத்த அந்த பஸ்சில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் பயணித்து வந்தார்.

    அப்போது தான் அபிஜிதாவை அவர் முதன் முதலாக பார்த்தார். அவரை பார்த்தவுடன் அமலுக்கு பிடித்துவிட்டது. பஸ் பயணத்தால் அவர்களுக்குள் கிடைத்த நட்பு, பின்பு காதலாக மாறியது. இந்த நிலையில் அமலுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது.

    வேலைக்கும் அந்த பஸ்சிலேயே தினமும் சென்றுவந்தார். அதே பஸ்சில் அபிஜிதாவும் தினமும் பயணித்தார். இதனால் அவர்கள் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர். காதலில் உறுதியாக இருந்த அவர்கள், திருமண வாழ்வில் இணைய முடிவு செய்தனர்.

    அவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. தங்களை அறிமுகப்படுத்திய, தங்களுக்கிடையே காதல் உருவாக காரணமாக இருந்த அரசு போக்குவரத்து கழக பஸ்சில் திருமண கோலத்தில் பயணிக்க ஆசைப்பட்டனர்.

    இதனால் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும் கழுத்தில் மாலையோடு பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்குள் அறிமுகத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    மேலும் காதலித்த போது தாங்கள் பயணித்ததை போன்று, பஸ்சுக்குள் அமர்ந்து பயணித்தனர்.

    புதுமண ஜோடியின் இந்த செயல் சீனிவிளை பகுதி மக்களை மட்டுமின்றி, அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட அரசு பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரையும் ஆச்சரியமடையச்செய்தது.

    இது குறித்து அமல் கூறும்போது, "இந்த பேருந்து எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று. நான் நினைத்துப் பார்க்காத வழிகளில் எனது பயணத்தை வடிவமைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பேருந்து மக்களுக்கு மிக முக்கியமான பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதே சரியானதாகும்" என்றார். 

    • சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு.
    • நடை சாத்தப்பட்டிருந்தாலும் 18-ம் படியில் ஏற அனுமதி

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.

    பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னி தானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.

    மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.

    மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. இன்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலை யேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவ தற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.

    இந்தநிலையில் சபரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள்.

    ஆனால் அதற்கு குறை வாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

    பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்தபோதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.

    இதன் காரணமாக சபரி மலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

    மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.

    இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

    • பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
    • நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சித்திக். இவர் பாலியல் பலாத்தகாரம் செய்ததாக நடிகை ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் நடிகர் சித்திக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கேட்டு தாக்கல் செய்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், சித்திக்கிற்கு தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் நடிகர் சித்திக் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதிகள் பேலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது. ஆனால் அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்துவைத்த நிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
    • ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20-ந்தேதி) முதல் செயல்பட தொடங்குகிறது. நாட்டிலேயே முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்துவைத்தநிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம். ஜாமின் பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராக தேவையில்லை. அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.

    ×