search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makaravilakku Puja"

    • பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
    • வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனிலும் அந்த நடைமுறையே கடை பிடிக்கப்பட்டது. மேலும் நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தனர். இதன் காரணமாக சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

    இதனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் கூட, பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.

    இதன் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவதிக்குள்ளானதாக பக்தர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு கட்சியினரும் கருத்து வெளியிட்டனர்.

    இந்தநிலையில் மண்டல பூஜை விழா முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனம் ஜனவரி 15-ந்தேதி நடக்கிறது.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
    • மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (17-ந்தேதி) தொடங்கியது.

    இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

    தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர்.

    பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். பின்பு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கபபட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று (17-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கோவில் நடை நேற்று மாலை திறக்கப் பட்டதால் சபரிமலையில் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கிய தையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். மழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர்.

    சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப் பட்டது. ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரும் வாக னங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதி களில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சபரிமலையில் இன்று

    அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 3.35 மணிக்கு முதல் 7 மணி வரை நெய் அபிஷேகம்

    காலை 7.30 மணிக்கு உஷ பூஜை,  8.30 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்

    காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகம்

    மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, 1 மணிக்கு நடை அடைப்பு

    மாலை 3 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணி தீபாராதனை

    இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம்

    இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை, 11 மணி நடை அடைப்பு

    ×