என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • பெங்களூரு நகரில் திடீரென ஸ்பைடர்மேன் வேடத்தில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற வீடியோ பயனர்களை ரசிக்க செய்தது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பெங்களூருவில் ஸ்பைடர்மேன் வேடம் அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

    விஷால் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோ 'ஜே.பி. நகரில் ஸ்பைடர்மேன்' என்ற தலைப்புடன் வைரலானது. அதில், ஜே.பி. நகர் தெருக்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பயணம் செய்யும் காட்சிகள் உள்ளது. அதில் ஸ்பைடர்மேன் உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் மகிழ்ச்சியுடன் கட்டை விரலை உயர்த்தி காட்டி செய்கை செய்யும் காட்சி உள்ளது.

    போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரு நகரில் திடீரென ஸ்பைடர்மேன் வேடத்தில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த வீடியோ பயனர்களை ரசிக்க செய்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • செல்போனை தின்பண்டம் என நினைத்து அந்த குரங்கு, செல்போனுடன் ஒவ்வொரு கிளை, கிளையாக தாவித்தாவி சென்றது.
    • சுமார் அரைமணி நேரம் செல்போனை கொடுக்காமல் போக்கு காட்டிய குரங்கு, அந்த செல்போனால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து அதை மரத்தில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றது.

    மைசூரு:

    குரங்குகள் செய்யும் சேட்டைகள் நம்மை ரசிக்கவும் வைக்கும், சில நேரத்தில் கோபத்தையும் தூண்டும். அந்த வகையில் மைசூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மைசூருவில் உள்ள சாமுண்டி மலையில் பிரசித்திபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. அந்த மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    மலையின் அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்காக தனிப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் இருக்கும் அம்மனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    அதுபோல் நேற்று காலையில் ஹாசனை சேர்ந்த ஒரு பெண் பக்தர், தனது குடும்பத்தினருடன் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போனை தன்னுடைய கையில் வைத்திருந்தார். இந்த நிலையில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

    வழக்கமாக பக்தர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். சில சமயம் குரங்குகளே பக்தர்களின் கையில் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடிவிடும். இந்த நிலையில் நேற்று காலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண் பக்தரின் கையில் இருந்த செல்போனை ஒரு குரங்கு வேகமாக ஓடி வந்து பறித்துக் கொண்டது.


    பின்னர் அது துள்ளி குதித்து வேகமாக ஓடி அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறிக்கொண்டது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பக்தர் திடுக்கிட்டார். பின்னர் அவர் பதற்றத்துடன் தனது செல்போனை குரங்கு பறித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து கூச்சலிட்டார். அவரை அவருடைய குடும்பத்தினரும், அவ்வழியாக வந்த பக்தர்களும் தேற்றினர்.

    பின்னர் அவர்கள் அந்த குரங்கு நோக்கி சென்றனர். அந்த குரங்கைப் பார்த்து அந்த பெண் பக்தரும், அவருடைய குடும்பத்தினரும் செல்போனை கொடுத்துவிடு, கீழே போட்டுவிடு என்று கூறிக்கொண்டே இருந்தனர்.

    ஆனால் செல்போனை தின்பண்டம் என நினைத்து அந்த குரங்கு, செல்போனுடன் ஒவ்வொரு கிளை, கிளையாக தாவித்தாவி சென்றது. மேலும் கடித்துப் பார்த்தது. இரண்டு முன்பக்க கால்களால் பிடித்து செல்போனின் முன்பகுதியில் தனது முகத்தைப் பார்த்தது. பின்னர் செல்போனை ஒரு காலால் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு கிளையாக சென்றது. மேலும் தனது கூட்டாளியான ஒரு குரங்குடன் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுப்பதுபோல் செல்போனை வைத்துப் பார்த்தது.

    இதற்கிடையே கீழே இருந்த அந்த பெண் பக்தரும், அவரது குடும்பத்தினரும் 'பிளீஸ்...பிளீஸ்..., செல்போனை கொடுத்துவிடப்பா' என்று அனுதாப குரலில் கேட்டனர். சுமார் அரைமணி நேரம் செல்போனை கொடுக்காமல் போக்கு காட்டிய குரங்கு, அந்த செல்போனால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து அதை மரத்தில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றது.

    இதனால் சுமார் அரை மணி நேரமாக தொடர்ந்த அந்த குரங்கின் சேட்டை முடிவுக்கு வந்தது. தனது செல்போனை குரங்கு வீசியதும் அதை அந்த பெண் பக்தர் ஓடோடி சென்று கையில் எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த செல்போனை அவர் பரிசோதித்துப் பார்த்தார். குரங்கு சேட்டையினால் அந்த செல்போன் சிறிது சேதம் அடைந்திருந்தது. இருப்பினும் செல்போன் பயன்படுத்தக்கூடிய அளவிலேயே இருந்தது.

    அதையடுத்து அந்த பெண் பக்தரும், அவரது குடும்பத்தினரும் கைகூப்பி குரங்கை நோக்கி கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க சென்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வருகிறது.

    • ஆண்கள் 73 பேர், பெண்கள் 30 பேர் என பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
    • இவர்களில் 86 பேர் போதைப்பொருள் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது இந்த பார்ட்டியில் ஏராளமான பிரபலங்கள் ஈடுபட்டதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    போதையில் இருந்து அனைவரும் போதைபொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பது அறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட 86 பேர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது.

    இந்த பார்ட்டியில் 73 ஆண்கள், 30 பெண்கள் கலந்து கொண்டதாக எஃப்.ஐ.ஆர். மூலம் தெரியவந்துள்ளது. ரத்தப் பரிசோதனையில் 59 ஆண்களுக்கும், 27 பெண்களுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

    பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவர்களுக்கு மத்திய கிரைம் பிராஞ்ச் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும், சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போலீசார் பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து 14.40 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரிகைள், 1.16 கிராம் எம்டிஎம்ஏ கிரிஸ்டல்ஸ், ஆறு கிராம் ஹைட்ரோ கஞ்சா, ஐந்து கிராம் கோகைன், கோகைன் பூசப்பட்ட 500 நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    பிறந்தநாள் விழா பார்ட்டி என்ற போர்வையில் அதிகாலை 2 மணியையும் தாண்டி நடைபெற்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    பெங்களூரு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தெலுங்கு நடிகை ஆஷி ராயும் ஒருவர். ஆனால் இந்த பார்ட்டியின் உண்மையான நோக்கத்தை தான் அறிந்திருக்கவில்லை. பார்ட்டில் கலந்து கொண்டேன். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

    பண்ணை வீடு கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்றும், ஐதராபாத்தைச் சேர்ந்த வாசு என்பர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    • முதல் பென் டிரைவ் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. பிரஜ்வல் ஏப்ரல் 27-ந்தேதி வெளிநாட்டிற்கு ஓடினார்.
    • அவர்கள் ஏழு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வழக்குப்பதிவு செய்து ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.

    தற்போது 2-வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தயாவுக்கு கொண்டு வர ஒத்துழைக்க தயராக இருக்கிறோம் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநில அரசு பிரஜ்வல் மீது மத்திய அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரை தடுத்து நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பி வருகிறது.

    இதற்கு பதில் அளித்த பிரகலாத் ஜோஷி, மாநில அரசு இந்த விசயத்தில் அரசியல் செய்யவும், மத்திய அரசு மீது பழி சுமத்தவும் முயற்சிக்கிறது என்றார்.

    மேலும், முதல் பென் டிரைவ் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. பிரஜ்வல் ஏப்ரல் 27-ந்தேதி வெளிநாட்டிற்கு ஓடினார். அவர்கள் ஏழு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வழக்குப்பதிவு செய்து ஏன் தடுத்து நிறுத்தவில்லை? என்றார்.

    • பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2-வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது:-

    நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கர்நாடக அரசின் வேண்டுகோளை செயல்படுத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.
    • பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகரே (23). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கொப்பல் நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கோர்ட்டுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வரும் பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 10-வது படித்து முடித்ததாக கூறி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தார். அதில் அவர் 625 மதிப்பெண்களுக்கு 623 மதிப்பெண் (99.5 சதவீதம்) பெற்றதாக இடம் பெற்றிருந்தது.

    இதன் அடிப்படையில் பிரபுலட்சுமிகாந்த் லோகரேவுக்கு கோர்ட்டில் ஊழியராக வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தான் தூய்மை பணியாளராக வேலை பார்த்த கோர்ட்டிலேயே ஊழியராக பணியை தொடங்கினார். இந்த நிலையில் அவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் திணறியது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை வரவழைத்து நீதிபதி முன்பு வாசிக்க வைத்தனர். அப்போதும் அவர் திணறினார்.

    இதையடுத்து அவரது கல்வி சான்றை பார்த்தபோது 7-ம் வகுப்பில் இருந்து அவர் நேரடியாக 10-ம் தேர்வு எழுதி அதில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனாலும் அவருக்கு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படிக்கவோ, எழுதவோ தெரியாததால் அவரது கல்விச் சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மோசடி நபர்களால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் இதேபோல் பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் போலீசார் பிரபுலட்சுமி காந்த் லோகரேவின் கையெழுத்தையும், 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 2017, 2018-ம் ஆண்டில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கோர்ட்டு ஊழியருக்கு எழுத, படிக்க தெரியாத சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். அணையில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது.
    • கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடி ஆகும். தற்போது அணையில் 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். அணையில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1971 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

    இதே போல் கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடி ஆகும். தற்போது அணையில் 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.
    • போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பெங்களூரு புறநகர் பகுதியில் சிங்கேனா அக்ரஹாராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த மே 20 மாலை 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி' என்ற தலைப்பில் நடந்த ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது

     

    இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவலறிந்து அங்கு சென்ற கர்நாடக காவல்துறையினர், எம்.டி.எம்.ஏ, கோகைன், ஹைட்ரோ கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நபரிடமும் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரவது கேட்டால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கர்நாடகாவைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ரேவ் பார்ட்டிகளை பொறுத்துக் கொள்ளாது என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பிரானும் பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் 2000 வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த போதைப் பார்ட்டியில் பாலியல் தொழில் நடந்துள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள்.
    • லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்தவர் கீரலிங்கா. இவர் தனது மனைவி மற்றும் லாவண்யா என்ற 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா, அந்த பகுதியை சேர்ந்த மற்ற சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள். அப்போது தெருநாய் ஒன்று திடீரென விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    கழுத்தில் படுகாயம் அடைந்த லாவண்யா உள்பட அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பினர். லாவண்யாவும் வீடு திரும்பினாள்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென சிறுமி லாவண்யா உயிரிழந்தாள்.

    • வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    • வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார்சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலைய ரோட்டில் விபத்துகளை தடுக்க வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் எலகங்கா- ஹெப்பலை இணைக்கும் கொடிகேஹள்ளி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்றார். அதாவது பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி இருந்தார். இதனை வாலிபருக்கு பின்னால் வந்த ஒரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார்.

    அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி எலகங்கா போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் வந்தது. அந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார்சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாம்புரா எம்.வி.லே-அவுட்டை சேர்ந்த சிலம்பரசன் (வயது 21) என்பதும், வாடகை கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 279 (அதிகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 189 (பொது சாலையில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல்), மோட்டார் வாகன சட்டம் 177 போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது, வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    • வெவ்வேறு சமுதாயம் என்பதால் 2 குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர்.
    • திருமணம் செய்தால் பெற்றோர் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்குமார் (வயது 52) மற்றும் சுதா (54). இவர்கள் இருவரும் சிறு வயதிலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தனர். பல போராட்டங்கள், இயக்கங்களில் பங்கேற்றனர்.

    கடந்த 2004- 2005-ம் ஆண்டு மைசூரில் முன்னாள் மந்திரி அப்துல் நசீர்சாப் நடத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் பயிற்சி மையத்தில் இருவரும் பயிற்சி பெற வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதை தங்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் 2 குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர். திருமணம் செய்தால் பெற்றோர் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். காலங்கள் உருண்டோடின. இருவருடைய பெற்றோருக்கும் வயதாகி விட்டது. தங்கள் பேரக்குழந்தையை பார்க்க முடியுமா? என ஏங்கினர். இதனால் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மோகன்குமார்- சுதா திருமணம் தரிகெரே அமிர்தபூரில் உள்ள அமிர்தேஸ்வரர் சாமி கோவிலில் நேற்று எளிய முறையில் நடந்தது. இதில் இரு தரப்பு பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 20 ஆண்டுகளாக காத்திருந்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்த மோகன்குமார்-சுதா ஆகியோரை அனைவரும் வாழ்த்தினர். பெற்றோர் ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம் அனைவருடைய மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
    • மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

    இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.

    பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.

    அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.

    ×