என் மலர்tooltip icon

    இந்தியா

    20 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்த காதல் ஜோடி
    X

    20 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்த காதல் ஜோடி

    • வெவ்வேறு சமுதாயம் என்பதால் 2 குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர்.
    • திருமணம் செய்தால் பெற்றோர் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்குமார் (வயது 52) மற்றும் சுதா (54). இவர்கள் இருவரும் சிறு வயதிலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தனர். பல போராட்டங்கள், இயக்கங்களில் பங்கேற்றனர்.

    கடந்த 2004- 2005-ம் ஆண்டு மைசூரில் முன்னாள் மந்திரி அப்துல் நசீர்சாப் நடத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் பயிற்சி மையத்தில் இருவரும் பயிற்சி பெற வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதை தங்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் 2 குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர். திருமணம் செய்தால் பெற்றோர் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். காலங்கள் உருண்டோடின. இருவருடைய பெற்றோருக்கும் வயதாகி விட்டது. தங்கள் பேரக்குழந்தையை பார்க்க முடியுமா? என ஏங்கினர். இதனால் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மோகன்குமார்- சுதா திருமணம் தரிகெரே அமிர்தபூரில் உள்ள அமிர்தேஸ்வரர் சாமி கோவிலில் நேற்று எளிய முறையில் நடந்தது. இதில் இரு தரப்பு பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 20 ஆண்டுகளாக காத்திருந்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்த மோகன்குமார்-சுதா ஆகியோரை அனைவரும் வாழ்த்தினர். பெற்றோர் ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம் அனைவருடைய மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×