

பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். அணையில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1971 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.
இதே போல் கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடி ஆகும். தற்போது அணையில் 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.