என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • பெங்களூருவில கனமழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • மக்கள் படகு மூலம் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கர்நாடக மாநிலம் முழுவதும் பருவ மழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் ரெயில்வே பாலங்கள், முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இந்த மழையின் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது.

    கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சினத்து வருகின்றன. கட்டமைப்புகளுக்கான கோடிக்கணக்கில் செலவு செய்தபோதிலும், அதன் ரிசல்ட் ஜீரோவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், மல்லேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அஷ்வத் நாராயண் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நேற்றிரவு பெய்த மழை பெங்களூருவின் கட்டமைப்பு மட்டும் வெளிப்படுத்தவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஏதும் செய்யவில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜீரோ ரிசல்ட்தான்" என விமர்சித்துள்ளார்.

    மழை வெள்ளத்தில் பெங்களூரு தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் "அதிகாரிளுடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருந்து கொண்டு இருக்கிறேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் போல, சவால்களை எதிர்கொள்வதற்கும் நிவாரணத்தை உறுதி செய்வதற்கும் 24 மணி நேரமும் உழைத்து வருகிறேன்.

    இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புதியவை அல்ல. அவை பல ஆண்டுகளாக அரசாங்கங்கள் மற்றும் நிர்வாகங்களால் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்போது உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் - அவற்றைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். தற்காலிகத் தீர்வுகளுடன் அல்ல, நீண்டகால, நிலையான தீர்வுகளுடன்" என்றார்.

    • மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் ரெயில்வே பாலங்கள், முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இந்த மழையின் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து பணிகள் முடுக்கி விடப்பட்டு சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் அகற்றப்பட்டது. மேலும் மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் போல் காட்சி அளித்தது. மேலும் சில சாலைகளில் பள்ளங்கள் தெரியாத அளவுக்கு 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தன. வாகன ஓட்டிகளும் கீழே விழுந்த சம்பவங்கள் நடந்தது. நேற்று விடுமுறையை கொண்டாடிவிட்டு வீடுகளுக்கு திரும்பியவர்கள் மழையில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையின் காரணமாக எம்.ஜி.சாலை, விதான் சவுதா, சாந்தி நகர், கே.ஆர்.பகுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகளும் ஒடிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் மின் தடையும் ஏற்பட்டது.



    இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு வருகின்ற 22-ந் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மழை பெய்யும்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் மழையின் காரணமாக சராசரி வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இதேபோல் தார்வாட், உத்தர கன்னடம், பெல்லாரி, விஜயபுரா மற்றும் பெலகாவி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

    • பெங்களூருவில் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

    பெங்களூரு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி இன்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

    ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • லோக் ஆயுக்தா சோதனையால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தும்கூரில் உள்ள கட்டுமான மையத்தின் திட்ட இயக்குனர் ராஜசேகர், தெற்கு மாவட்டத்தின் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் மஞ்சுநாத், விஜயபுரத்தை சேர்ந்த டாக்டர் பி.ஆர்., அம்பேத்கர் மேம்பாட்டுக்கழக மாவட்ட மேலாளர் ரேணுகா, பெங்களூரு நகர நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் இயக்குநரக கூடுதல் இயக்குனர் முரளி, சட்ட அளவியல் ஆய்வாளர் எச்.ஆர். பெங்களூரு கிராமப்புறத்தில் உள்ள ஹோஸ்கோட் தாலுகா அலுவலகத்தை சேர்ந்த நடராஜ், எஸ்.டி.ஏ., அனந்தகுமார் மற்றும் யாத்கீரில் உள்ள ஷாஹாபூர் தாலுகாவை சேர்ந்த உமகந்தா ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    பெங்களூரு நகரில் 12 இடங்களிலும், தும்கூரில் 7 இடங்களிலும், பெங்களூரு கிராமப்புறத்தில் 8 இடங்களிலும், யாத்கீரில் 5 இடங்களிலும், மங்களூரில் 4 இடங்களிலும், விஜயபுராவில் 4 இடங்களில் என மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து தெரியவரும்.

    இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    • காந்திபாகிய மசூதியில் நேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
    • ராணுவ வீரர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவது இந்தியர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.

    இந்தியாவுக்கு ஆதரவாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உப்பினங்கடி அருகே உள்ள காந்திபாகிய மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    இதில் பள்ளிவாசல் தலைவர் எஸ்.அப்துல் ரஹிமான், துணைத் தலைவர் முகமது ரபீக், செயலாளர் நசீர் பூரிங்கா, பொருளாளர் ஹசைனார், கதீப் அப்துல் ரசாக் சுல்தான் தாரிமி, ஜமாத் உறுப்பினர் அப்பாஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், "நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவது இந்தியர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.

    இந்திய வீரர்களுக்கு கடவுள் அதிக பலத்தை அளிப்பார் என்றும், எதிரி நாடான பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும் எனவும்" கூறினர்.

    இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு மசூதிகளிலும் காஷ்மீர் மக்களின் நலன்  வேண்டியும், அங்கு அமைதி நிலவவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.


    • ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தால் சட்டவிரோதமாக இரும்புத் தாது வெட்டியெடுத்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது.
    • விடுவிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் ரெட்டி தேர்தலில் போட்டியிட முடியாது.

    கர்நாடக பாஜக எம்எல்ஏ ஜி ஜனார்த்தன் ரெட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சட்டவிரோத சுரங்க வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து கர்நாடக சட்டமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

    இதன் மூலம், கர்நாடக சட்டமன்றத்தின் ஒரு இடம் காலியாகியுள்ளது. ஜனார்த்தன் ரெட்டி கர்நாடகாவின் கங்காவதி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.

    அவர் நிர்வகித்த ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தால் சட்டவிரோதமாக இரும்புத் தாது வெட்டியெடுத்த வழக்கில் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேருக்கு மே 6, 2025 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

    அந்த தேதியிலிருந்து ரெட்டியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது என கர்நாடக சட்டமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஜனார்த்தன் ரெட்டி தேர்தலில் போட்டியிட முடியாது.  

    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான தாக்குதல்.
    • இதற்கு நமது அரசாங்கம் ஒரு பயனுள்ள பதிலை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய தாக்குதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து உறவுகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. நாளை நாடு தழுவிய போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் மக்களவை எம்.பி.யும், ஏ.ஐ.எம.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசாததுதீன் ஓவைசி கூறியதாவது:-

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான தாக்குதல். நாம் அதை எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறோமோ, அது அவ்வளவு குறைவானதாகவே இருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதை நாம் பார்த்திருக்கிறோம்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, ஆண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் மதம் என்ன? என்று கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டது மனிதாபிமானமற்றது. கல்மா ஓதத்தெரியாதவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமாகும்.

    இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் சென்றுள்ளனர். இதற்கு நமது அரசாங்கம் ஒரு பயனுள்ள பதிலை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்திலும் நாங்கள் அதையே கூறியுள்ளோம்.

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு ஓவைசி தெரிவித்துள்ளார்.

    • அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
    • அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

    சமீபத்தில், அவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினார். சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எல்லா படங்களிலும் ஃபெயில் ஆன அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

    இருப்பினும், அபிஷேக் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு, அவரது பெற்றோர் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக்கை வெட்டினார்.

    இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், 'நீ தேர்வில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது" என்று ஊக்கப்படுத்தினர்.

    பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். 'நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் தேர்வு எழுதுவேன். நான் தேர்வில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்" என்று அபிஷேக் ஊடகத்திடம் தெரிவித்தார்.

    • விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் 8,500 ரன் குவித்த முதல் வீரரானார்.
    • அவர் இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் அடித்துள்ளார்.

    பெங்களூரு:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர். தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், விராட் கோலி தனது 53-வது ரன்னை கடந்தபோது ஐபிஎல் தொடரில் 8,500 ரன் குவித்த முதல் வீரரானார்.

    விராட் கோலி இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் உள்பட 8,509 ரன்கள் எடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா 267 போட்டிகளில் விளையாடி 6,921 ரன்னும், ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.

    பெங்களூரு:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.

    தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி பேசியதாவது:

    நான் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது தேவையான பந்து வீச்சுகள் மற்றும் ரன்கள் இருந்தது. அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என நினைத்தேன். தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார்.

    எல்லா பேட்டர்களும் யார்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் பேட்டர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் எங்கள் பெரும்பாலான பேட்டர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா சிறப்பாக விளையாடுகிறார்.

    பேட்டிங் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒரு துறையாக பேட்டிங் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி. அணி திரில் வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. அணி.

    பெங்களூரு:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    2வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 3வது இடத்தை குஜராத்தும், 4வது இடத்தை பஞ்சாப்பும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

    சென்னை அணி 11 போட்டியில் 2 வெற்றி, 9 தோல்வி என கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

    • ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
    • முதலில் ஆடிய ஆர்.சி.பி. 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி 62 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 55 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரொமாரியோ 14 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

    சிஎஸ்கே சார்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.

    ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

    முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஷேக் ரசீது 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாம் கர்ரன் 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்த நிலையில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பிரேவிஸ் டக் அவுட்டானார்.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 77 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

    ×