என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஷ்மீரில் அமைதி நிலவ மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை
    X

    காஷ்மீரில் அமைதி நிலவ மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை

    • காந்திபாகிய மசூதியில் நேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
    • ராணுவ வீரர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவது இந்தியர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.

    இந்தியாவுக்கு ஆதரவாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உப்பினங்கடி அருகே உள்ள காந்திபாகிய மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    இதில் பள்ளிவாசல் தலைவர் எஸ்.அப்துல் ரஹிமான், துணைத் தலைவர் முகமது ரபீக், செயலாளர் நசீர் பூரிங்கா, பொருளாளர் ஹசைனார், கதீப் அப்துல் ரசாக் சுல்தான் தாரிமி, ஜமாத் உறுப்பினர் அப்பாஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், "நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவது இந்தியர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.

    இந்திய வீரர்களுக்கு கடவுள் அதிக பலத்தை அளிப்பார் என்றும், எதிரி நாடான பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும் எனவும்" கூறினர்.

    இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு மசூதிகளிலும் காஷ்மீர் மக்களின் நலன் வேண்டியும், அங்கு அமைதி நிலவவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.


    Next Story
    ×