என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி
- முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது.
- விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.
பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.
தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி பேசியதாவது:
நான் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது தேவையான பந்து வீச்சுகள் மற்றும் ரன்கள் இருந்தது. அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என நினைத்தேன். தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார்.
எல்லா பேட்டர்களும் யார்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் பேட்டர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் எங்கள் பெரும்பாலான பேட்டர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா சிறப்பாக விளையாடுகிறார்.
பேட்டிங் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒரு துறையாக பேட்டிங் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.






