என் மலர்
டெல்லி
- வயது முதிர்வின் (77 வயது) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
- பா.ஜ.க. ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது.
புதுடெல்லி:
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும். பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் ஒடியா மொழிப் பேசும் வாலிபரை முதல்வராக்குவோம் என கூறினார்.
இது தொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில்,
வயது முதிர்வின் (77 வயது) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார். ஒருவேளை பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் மோடிக்கு (73 வயது 7 மாதங்கள்) விடுக்கப்பட்ட அறிவுரையா?
பா.ஜ.க. ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராவார் என கூறியுள்ளார்.
When Mr Amit Shah said that Mr Naveen Patnaik should retire because of "advanced age" (77 years) was he throwing a hint to Mr Narendra Modi (73 years, 7 months) -- in case the BJP formed the government?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 22, 2024
It seems that Mr Amit Shah will be the happiest person if the BJP did not…
- பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்.
- சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.
கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒடிசா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிசா காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.
இந்நிலையில், பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தும் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா அறிவித்துள்ளார்.
மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
- ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
- வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது.
நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், அரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களின் பல மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்-ஐ மீறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் நரேஷ் குமார், "வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 2-3 நாட்களாக இப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மாநில வாரியான முன்னறிவிப்பு தொடர்பாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிலிருந்து மேலும் அதிகரித்து 47 டிகிரி செல்சியஸில் நிலைபெற வாய்ப்புள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானாவில், நிலவும் மேற்கத்திய இடையூறு காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளோம்.
எவ்வாறாயினும், கோடை வெயிலின் கீழ் வடக்கில் சுட்டெரிக்கும் போது, தெற்கில் ஒரு அளவு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்" என்றார்.
தேசிய தலைநகர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கவனமாக இருக்கவும், அது அவர்களின் உடல்நலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாய்லாந்து ஓபன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முதலிடம் பிடித்தனர்.
புதுடெல்லி:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், தாய்லாந்து ஓபன் தொடரில் வெற்றிபெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜோடிக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்தது.
- சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ஐ சுட்டிக்காட்டி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை டெல்லி மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை அழிப்பதில் சிசோடியா ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக தெரிவித்த நீதிபதி ஸ்வரன காந்தா ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.
மேலும், டெல்லி அரசின் அதிகாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். ஏனெனில் அவர் 18 இலாகாக்களின் பொறுப்பில் இருந்தார் என நீதிபதி தெரிவித்தார்.
ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் வழங்க மணிஷ் சிசோடியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் "விசாரணை நீதிமன்றம் நிபந்தனைகள் அடிப்படையில் உடல்நலம் சரியில்லாத மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது தொடரும்" எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே விசாரணை நீதிமன்றம் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்தது. சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ஐ சுட்டிக்காட்டி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
சிபிஐ கைது செய்த நிலையில் மணிஷ் சிசோடியா துணை முதல்வர் பதவியை பிப்ரவரி 28-ந்தேதி கைது செய்தார்.
- மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஸ்வாதி மலிவாலுக்கு ஆதரவாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தையும், சொந்த கட்சியினரிடமிருந்தே தனக்கு ஏற்பட்ட மிரட்டலையும் அவமானத்தையும் என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார். மேலும் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
முந்தய காலங்களில் மலிவால் எனக்கு எதிராகவும் விரோதமாகவும் அப்பட்டமான கருத்துக்களை தெரிவிப்பவராகவும், என்னை நியாயமற்ற முறையில் விமர்சித்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த உடல் ரீதியான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். மேலும், டெல்லி தேசிய தலைநகரம் ஆகும். இது போன்ற வெட்கக்கேடான சம்பவங்களும் அரசாங்கத்தின் மவுனமும் உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கின்றன என்று குறிப்பிட்டார்.
மேலும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்த டெல்லி காவல்துறை விவரவில் விசாரணையை முடிக்கும் என்று சக்சேனா உறுதியளித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநரின் கருத்து ஒன்றே இது முழுக்க முழுக்க முழுக்க பாஜகவின் சதி என்று அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
- இதை ஆனந்த மகேந்திரா நடப்பு ஆண்டின் சிறந்த புகைப்படம் என பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடந்து முடிந்தது.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்த்துள்ளனர்.
எவ்வித வெளியுலக தொடர்பும் இன்றி வாழும் இந்தப் பழங்குடி மக்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து கற்பிக்கப்பட்டது. இதன்படி வாக்குச்சாவடி சென்ற பழங்குடியின மக்கள் தங்களது வாக்கை பதிவுசெய்தனர்.
இந்நிலையில், பழங்குடியின மக்கள் வாக்குகளைப் பதிவு செய்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த மகேந்திரா நடப்பு ஆண்டின் சிறந்த புகைப்படம். ஜனநாயகம்: இது தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத சக்தி என பதிவிட்டுள்ளார்.
This, for me, is the best picture of the 2024 elections.
— anand mahindra (@anandmahindra) May 20, 2024
One of seven of the Shompen tribe in Great Nicobar, who voted for the first time.
Democracy: it's an irresistible, unstoppable force. pic.twitter.com/xzivKCKZ6h
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
- அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாயமானது. பின்னர் விபத்தில் ஹெலிகாப்டர் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.
இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்திய தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.
இந்த நிலையில் இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாளை அவர் ஈரான் புறப்பட வாய்ப்புள்ளது. அஜர்பைஜான்- ஈரான் எல்லையில் இருந்து தப்ரிஸ் திரும்பும்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
- இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார்.
- அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார்.
பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
பிரதமர் தனது நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார். உண்மை மீது அவருக்கு ஒருபோதும் பற்று இருந்ததில்லை.
அவர் ஒரு பொய்யர் (jhoothjeevi). இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார். அவர் மங்களசூத்ரா பற்றி பேசுகிறார். அவர் முஸ்லிம் லீக் பற்றி பேசுகிறார். காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கிறது என பேசுகிறார். இவை அனைத்தும் அவர் கூறிய பொய்யானவை.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால் மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்.
- ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை.
தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்தார். அப்போது மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து தனது பார்வையை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜூன் 4-ந்தேதி முடிவு என்னதாக இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனால் பத்திரிகையாளரக்ள், நிபுணர்கள் போன்றோர் தங்களது கருத்துகளை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், நிலைத்தன்மை (தொடர்ந்து விசயத்தை கூறுவது) சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன்.
கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பது விசயம் இல்லை. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறேன். கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களை பிடிக்கும்.
அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை. ஏமாற்றங்கள், ஆசைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாடு தழுவிய கோபத்தை கேட்கவில்லை.
இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக வைத்துக் கொண்டால் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். நான் நாடு தழுவிய அளவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இல்லை. அதனால் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.
கிழக்கு மற்றும் தெற்கில் சுமார் 225 இடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பா.ஜனதா மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 50-க்கும் குறைவான இடங்களைத்தான் தற்போது வைத்துள்ளது. அவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் வடக்கு மற்றும் மேற்கில் சறுக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியம். என்னுடைய மதிப்பிட்டின்படி அப்படி இல்லை. ஆனுால், கிழக்கு மற்றும் தெற்கில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
- எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சத்தின் ரகசியமாக கருதப்படும் கருந்துளைகளின் முக்கிய தரவுகளை இஸ்ரோ சேகரித்துள்ளது.
கருந்துளைகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
Swift J1727.8-1613, என்கிற கருந்துளையில் இருந்து வெளியே வரும் எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த தரவுகள் கருந்துளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கண்டறிவதற்கு முக்கிய படியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.
- இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.
இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.
இன்றைய தேர்தலில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 49 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.






