search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூரி ஜெகந்நாதர்- மோடி குறித்த கருத்துக்கு வருத்தம்: 3 நாட்கள் விரதம் அறிவித்த பாஜக வேட்பாளர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பூரி ஜெகந்நாதர்- மோடி குறித்த கருத்துக்கு வருத்தம்: 3 நாட்கள் விரதம் அறிவித்த பாஜக வேட்பாளர்

    • பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்.
    • சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஒடிசா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிசா காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    மேலும் அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

    இந்நிலையில், பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தும் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா அறிவித்துள்ளார்.

    மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×