என் மலர்tooltip icon

    பீகார்

    • பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

    ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதில், பீகாரில் காங்கிரஸ் கட்சி அமைத்தால் பெண்களுக்கு 2500 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    • வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் ஒப்புதல்.

    பீகார் மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலம் மற்றும் மத ரீதியிலான நகரான கயா (Gaya City) இனிமேல் கயா ஜீ (Gaya Jee) என மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். பெயர் மாற்ற பரிந்துரை வந்த நிலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    புற்றுநோயை தடுக்கும் வகையிலும், சிகிச்சை அளிக்கவும் பீகார் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி சொசைட்டி அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

    முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் பிறந்த நாளான ஜனவரி 5ஆம் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் அமைச்சரவை ஒப்புதல் அழித்துள்ளது.

    • விடுதி மாணவர்களுடன் உரையாட ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.
    • அவரது காரை தடுத்து நிறுத்தி விடுதிக்கு செல்ல விடாமல் நிர்வாகம் தடுத்தது.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் பொதுத் தொடர்பு நிகழ்ச்சி (public interaction programme- Shiksha Nyay Samvad) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள மிதிலா பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் விடுதியில், ராகுல் மாணவர்களை சந்தித்து உரையாட இருந்தார். ஆனால் ராகுல் காந்தி காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மாணவர்களை சந்தித்துள்ளார்.

    இந்த நிலையில் தலித் மாணவர்களோடு தொடர்பு கொள்வது பாவமா? என கேள்வி எழுப்பி ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தலித், பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மணாவர்களுடன் தொடர்பு கொள்வது அரசியலமைப்புக்கு எதிரானதா?. அவர்களின் படிப்பு, தேர்வுகளுக்கான தேவைகள், வேலைகள் பற்றி அவர்களுடன் பேசுறது பாவமா?.

    பீகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதை ஐக்கிய ஜனதா தளம்- பாஜக அரசு தடுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.

    இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • தற்போதைய சிஸ்டம் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது.
    • தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாங்கம் உள்ளிட்டவைகளில் எந்தப் பங்கும் இல்லை.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பீகார் மாநிலம் சென்றார். மிதிலா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்து பேசினார். ராகுல் காந்தி கார் வாசலில் நிறுத்தப்பட்டது. பின்னர் நடந்து சென்று மாணவர்களை சந்தித்தார்.

    மாணவர்களுடன் உரையாடும்போது அவர் கூறியதாவது:-

    அரசியலமைப்பு உங்களுடைய தலையால் தொட்டு வணங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் நாங்கள் கூறினோம். இறுதியில் அதைச் செய்தார். அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறினோம். இரண்டிலும், மக்களிடம் இருந்து எதிர்வினை ஏற்படும் என பயந்து பிரதமர் மோடி, ஏற்றுக்கொண்டார்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பானி, அதானி மற்றும் அவர்களைப் போன்றவர்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது என்பது உண்மைதான்.

    தற்போதைய சிஸ்டம் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாங்கம் உள்ளிட்டவைகளில் எந்தப் பங்கும் இல்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து மறுத்து வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    • பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
    • பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    பாட்னா:

    பஹல்காம் தாக்குலுக்கு பழிதீர்க்க பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட 9 இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியது. 'ஆபேரஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த அதிதீவிர துல்லிய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

    இந்தநிலையில் 'ஆபரேஷன் சிந்தூர்'ரின்போது பிறந்த குழந்தைக்கு 'சிந்தூரி' என பெயரிடப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையான 'ஆபேரஷன் சிந்தூர்'ரின்போது அந்த பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த குழந்தைக்கு சிந்தூரி என பெயரிட்டுள்ளனர்.

    ''பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நன்னாளை நினைவுகூரும் வகையில் எங்களுடைய பெண்ணுக்கு சிந்தூரி என பெயரிட்டுள்ளோம்" என குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கூறினர்.

    • உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இதில் 10 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    சமேலி பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது கார் நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த மேலும் 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி பலியான 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான அனைவரும் ஆண்கள். அவர்கள் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
    • அப்போது பேசிய அவர், பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார் என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஐ.பி.எல். தொடர் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையை படைத்துள்ளார்.

    இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.

    பீகாரின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும்.
    • இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் 1947 இல் ஜின்னாவை நிராகரித்தார்கள்

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், "பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு, இந்தியா அமைதியாக இருக்க அவர்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்" என்று AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி, "இந்தியா பாகிஸ்தானை விட வலிமையானது. பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. பாகிஸ்தானால் அதன் பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும். எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்புக்குழுவின் கிரே பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டும்.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக பேசுவதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் 1947 இல் ஜின்னாவை நிராகரித்தார்கள். அவர்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் சந்ததியினர் எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதை பாகிஸ்தான் ராணுவத் தளபதி நினைவில் கொள்ள வேண்டும்.

    வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவரின் பேச்சை கண்டிக்கிறேன். வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக இருப்பதற்கு இந்தியாதான் காரணம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானைத் தாக்கினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க டாக்கா சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வங்காளதேச முன்னாள் ராணுவ அதிகாரியின் கருத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்

    வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் தனது பேஸ்புக் பதிவில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவில் உள்ள 7 வடகிழக்கு மாநிலங்களையும் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகியவற்றை) வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு பரிந்துரைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்திற்கான முதல்படி.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுஆய்வுக்கு வழிவகுக்கும்.

    இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக இது தொடர்பாக மவுனம் காத்து வந்தது.

    இதற்கிடையே ஒரு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சமூக பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத்ியுள்ளார்.

    மேலும், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்திற்கான முதல்படி. மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுஆய்வுக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான உச்சவரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • சஹர்சா- மும்பை இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
    • மின்சாரத்துறையில் 1,170 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் மதுபானி சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 ரெயில்கள் சேவையை தொடங்கி வைத்தார். அத்துடன் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    சஹர்சா- மும்பை இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜெய்நகர்- பாட்னா, பிப்ரா- சஹர்சா, சஹர்சா- சமாஸ்திபூர் இடையில் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார். மேலும், பல ரெயில் தடங்களையும் தொடங்கி வைத்தார். ககாரியா-அலாலி ரெயில் வழித்தடத்தை நாட்டுக்கு அற்பணித்தார்.

    340 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில் பாதையில் இருந்து நேரடியாக கொண்டு வரும் வசதியுடன் கூடிய எல்.பி.ஜி. ஆலைக்கு (சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்புதல்) அடிக்கால் நாட்டினார்.

    மின்சாரத் துறை தொடர்பாக 1,170 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 5,030 கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    • பீகாரின் மதுபானியில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பஹல்காம் தாக்குதலுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

    அங்கு 130 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்திய ராணுவம் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பீகாரின் மதுபானியில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பஹல்காம் தாக்குதலுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.

    அதன்பின் பேசிய அவர், "பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குக் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும்.  

    இன்று, பீகார் மண்ணிலிருந்து, நான் முழு உலகிற்கும் கூறுகிறேன், இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கும். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். இந்தியாவின் உணர்வு பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது.

    மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். எங்களுடன் நின்ற மக்களுக்கும், நாடுகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

    நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.  

    • ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் கூட்டம் பீகாரில் நடைபெற்றது.
    • இதில் கார்கே, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் மத்திய, மாநில, மாவடட் அளவில் ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் என்ற கோஷத்துடன் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.

    அந்த வகையில் நேற்று பீகார் மாநிலம் புக்சார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்ட ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) கூட்டம் தல்சாகார் மைதானத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மல்லிகார்ஜூன உரையாற்றினார். அவரது உரையை கேட்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிக அளவில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கார்கே, மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும் அதிக அளவில் கூட்டம் வரவில்லை. அதிக அளவிலான இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.

    இதனால் புக்சார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டே, ஒத்துழைப்பு குறைபாடு காரணமாக கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த பேரணியில் பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அலாவாரு, மாநில காங்கிஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், புக்சார் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. சுதாகர் சிங், சாசாராம் காங்கிரஸ் எம்.பி. மனோஜ் குமார் ராம் மற்றும் பல எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.

    ×