என் மலர்
இந்தியா

பீகாரில் 4 புதிய ரெயில் சேவை, 13.5 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- சஹர்சா- மும்பை இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
- மின்சாரத்துறையில் 1,170 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் மதுபானி சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 ரெயில்கள் சேவையை தொடங்கி வைத்தார். அத்துடன் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
சஹர்சா- மும்பை இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜெய்நகர்- பாட்னா, பிப்ரா- சஹர்சா, சஹர்சா- சமாஸ்திபூர் இடையில் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார். மேலும், பல ரெயில் தடங்களையும் தொடங்கி வைத்தார். ககாரியா-அலாலி ரெயில் வழித்தடத்தை நாட்டுக்கு அற்பணித்தார்.
340 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில் பாதையில் இருந்து நேரடியாக கொண்டு வரும் வசதியுடன் கூடிய எல்.பி.ஜி. ஆலைக்கு (சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்புதல்) அடிக்கால் நாட்டினார்.
மின்சாரத் துறை தொடர்பாக 1,170 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 5,030 கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைத்தார்.






