என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
    இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கேற்ப
    உருகிய சாக்லேட்  - 2 டீஸ்பூன்
    துருவிய சாக்லேட் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் பால் ஊற்றி சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறி விடவும்.

    ஒரு கிளாஸில் கோகோ, உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும்.

    1 டீஸ்பூன் சூடான பாலை சாக்லேட்டில் கலந்து நன்கு ஸ்மூத்தாக கலந்து விடவும். அதன் மேலாக நுரை வர பாலை காய்ச்சி அதில் ஊற்ற வேண்டும்.

    இறுதியாக, இலவங்கப்பட்டை பவுடர், துருவிய சாக்லேட் போட்டு சூடான ஹாட் சாக்லேட்டை பரிமாறவும்..

    சூடான ஹாட் சாக்லேட் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும்.
    கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். இது தனிப்பட்டவர்களிடையே மாறுபடும். அதாவது, ஒவ்வொருவர் ஒவ்வோர் அளவு எடை கூடுவர். சராசரியாக எடை ஐந்திலிருந்து ஒன்பது கிலோ வரை அதிகமாகும். எடை கூடுதல் கர்ப்பத்தின் முதர்வைப் பொறுத்து மாறுபடும். முதல் மூன்று மாதங்களில் வாந்தியும் பசியின்மையும் இருந்தால் கணிசமான எடை கூடுதல் இருக்காது. கர்ப்ப காலத்தின் இரண்டாம் கட்டத்தில், ஒரு வாரத்திற்கு அரை கிலோ எடை கூடி மொத்தமாக மூன்றரை முதல் நாலரை கிலோ வரை எடை கூடும். மேலும், பிரவசத்திற்கு முன் அரை கிலோவிலிருந்து ஒன்றரை கிலோ வரை எடை குறையும்.

    கர்ப்ப காலத்தின் எடை கூடுதல், கருவின் எடையைப் பொறுத்து இருக்கும். கர்ப்பத்தின்போது மொத்த உடல் நீரின் அளவு ஏழு லிட்டர் வரை அதிகரிக்கும். மேலும், கடைசி கட்டத்தில் சிறுநீரகங்கள் அதிக அளவு உட்கொள்ளக்கூடிய தண்ணீரை வெளியேற்ற சிரமப்படும். பொதுவாக ஒரு சராசரி பெண் கர்ப்ப காலத்தில் அவளின் அசலான எடையிலிருந்து பத்து சதவீதம் எடை கூடுவாள். ஆரம்பத்தில் அதிக குண்டான பெண்கள் ஒல்லியானவர்களைக் காட்டிலும் எடை கூடுவார்கள். கணுக்கால்களிலும், கால்களிலும் வீக்கமேற்படுவது சாதாரணமாக நிகழக்கூடியதே. இது சாதாரணமாக மாலை நேரங்களில் ஏற்பட்டு சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்தால் மறைந்துவிடும். இது கால்களில் இருக்கும் இரத்தச் சிரைகளில் ஏற்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடியதாகும்.

    ஜீரண செயல்பாடுகளின் மாறுதல்கள்

    அதிகபட்சமான பெண்கள் வாந்தி வருவதைப்போன்ற உணர்வு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை இருப்பதாகச் சொல்வார்கள். குடல் அசைவுகள் குறைதல், குடல் சரப்பு நீர்கள் சுரத்தலின் அளவு குறைதல் கல்லீரல் செயல்திறனில் மாறுபாடு போன்றவை இருக்கும். பசியும் உணவுப் பழக்கங்களிலும் மாறுபாடு இருக்கும். சில உணவுப் பொருட்களின் மீது விருப்பமும் அதிகப் பற்றும் இருக்கும். கர்ப்ப காலத்தில் பல் சொத்தை ஆவதற்கு வாய்புகள் அதிகம். நெஞ்செரிச்சல், வயிற்று அமிலம் மேல்நோக்கி வருவதால் ஏற்படும்.

    எலும்புக்கூடு, தோல் மற்றும் பல்லில் ஏற்படும் மாறுதல்கள்

    கர்ப்ப காலத்தல் எலும்புகளுக்கு அதிகமாக இரத்த ஒட்டமிருக்கும். இடுப்பு எலும்புகள் அதிகமாக அசைவதோடு நடப்பதற்கு சிரம மேற்படுத்தும். தோலில் சில இடங்களில் அதிக நிறச்சேர்க்கை ஏற்பட்டுவிடும். மார்புக்காம்பு, பிறப்புறுப்பு, தொப்புள், முகம் போன்ற பகுதிகளில் நிறச்சேர்க்கை இருக்கும். கால்சியம் சத்துக் குறைவால் பற்கள் சீக்கிரமாகச் சொத்தையாவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும், வளரும் சிசுவுக்கும் கால்சியம் தேவையும் அதிகமாக இருப்பதால் தாய்க்குக் கால்சியம் குறைபாடு ஏற்படும்.

    சிறுநீரக மண்டலத்தில் பல மாறுதல்கள் ஏற்படுவதோடு சிறுநீரில் சர்க்கரை வெளியேறவும் வாய்ப்புகள் உண்டு. நரம்பு மண்டல மாறுதல்களால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாய் இருப்பர். பய உணர்வு, கவலை போன்றவை அதிகமாக இருக்கும்.

    முதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
    முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம்.

    திராட்சை எண்ணெய்:

    இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.

    நல்லெண்ணெய்:

    உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
    கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. கோடையில் உடல் சூட்டை குறைக்க அடிக்கடி ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று தர்பூசணி லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி துண்டுகள் - 3
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு



    செய்முறை :

    இஞ்சி துண்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகவும்.

    சூப்பரான தர்பூசணி - லெமன் ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும்.
    இயலாமையில் வெளிப்படும் அந்த இளம் பெண்ணின் அபய குரல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வலுக்கட்டாயமாக நமது கண்களில் வந்து விழுந்துவிட்ட இந்த காணொலி காட்சியை கண்ட மனம் பதைபதைக்கிறது. அவள் கதறிக்கொண்டிருக்க ஒன்றுமே நடவாததுபோல் நின்று கொண்டு சாதாரணமாக பேசிக்கொள்ளும் மனித மிருகங்களைப் பார்க்கையில் ரத்தம் கொதிக்கிறது. தமிழ்த் தாய்மார்கள் பெற்ற ஆண் பிள்ளைகள் தானா இவர்கள்?

    பொள்ளாச்சி ‘சீ சீ’ என புளுத்து நாறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்னும் நூற்றுக்கணக்கான பெண்களாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களாம். ஏழு ஆண்டுகளாகவே இது நடக்கிறதாம். இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கட்டுரை இப்படிச் சொல்கிறது. “போதை தரும் ஒரு விளையாட்டாக அந்த ஆண்கள் இதைச் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்”. போதையோடு அவர்களுக்கு பண மழையும் பொழிந்திருக்கிறது. இந்த அநியாயத்தை ஒரு தொழிலாகவே தொடர்ந்திருக்கிறார்கள். இப்போதாவது இது வெளியே வந்ததே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சில நூறு பெண்களின் வாழ்வு சிதைக்கப்படாமல் தடுக்கப்பட்டதே இனி சட்டம் வேகமாக தன் கடமையைச் செய்யட்டும்.

    பொள்ளாச்சியில் மட்டுமல்ல, நமது ஊரில், நமது பக்கத்திலேயே இதுபோன்று நடந்து கொண்டிருக்கலாமோ என்றதோர் அச்சம் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இந்த வேட்டை நாய்களின் கோரப் பற்களின் பிடியில் இருந்து நம் பெண் குழந்தைகளை காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய வேண்டி இருக்கிறது.

    இந்த நிகழ்வில் கதறும் அந்தப் பெண் அங்கே எப்படிச் சென்றாள்?. அவள் சமூக ஊடகச் சாதனங்கள் அழைத்துச் சென்ற சக்கர வியூகப் பொறிக்குள் தானே வலிய சென்று மாட்டிக் கொண்டிருக்கிறாள். வெறி நாய்கள் சூழ்ந்து நிற்க செய்வதறியாது துடிக்கிறாள். இந்த சக்கர வியூகம் ஒரே நாளில் வகுக்கப்படுவதில்லை. சிறிது சிறிதாக பின்னப்பட்டு, நண்பன் என்ற பெயரில் நம்பிக்கை ஊட்டப்பட்டு, நாளாவட்டத்தில் இளம் பெண்கள் இந்த வியூகத்திற்குள் நகர்த்தப்படுகிறார்கள்.

    சமூக ஊடகங்களில் தங்கள் அந்தரங்கங்களைப் பந்தி வைக்க ஆரம்பிப்பதில் இருந்து தொடங்குகிறது வேட்கைப் பொறியை நோக்கிய நகர்வு. சுய முகங்களைக் காட்டிக்கொள்ளாமல் பெண் தோழிகளைப் போலவே பேசி உணர்வுகளின் வீச்சை அறிந்து கொண்டு அல்லது அவற்றைத் தூண்டி விட்டு ஏதோ ஒரு சொல்லில் தன்னிலை மறந்து தன் வலிமையின்மை வெளிப்படும்போது இந்த சக்கர வியூகத்திற்குள் இப்பெண்கள் ஏற்கனவே வந்து விட்டிருப்பார்கள், ஒரு கொடியவனிடம் மாட்டிக் கொள்வதே கொடுமை. ஆனால் கொடியதொரு ஓநாய் கூட்டத்திடம் அகப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த பொள்ளாச்சி இளம்பெண்கள்.

    ஒரு நாள் பொழுதைக் கடக்கையில் தான் செய்வது அனைத்தையும் செல்போன் கேமராவில் ஏற்றி, அதை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கும் பழக்கம் இளம் பெண்கள் இடையே ஒரு நோயாக தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இளம் பெண்களுக்கு இந்த நிகழ்வு ஒரு கண் திறப்பு இந்த சுய காட்சிப்படுத்தலானது கயவர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பெண்களால் அறிய முடிவதில்லை.

    வாட்ஸ் -அப்பில் முகம் தெரியாதவர்களுடன் கூட தேவையற்ற நட்பு பாராட்டுவது, கருத்துகளை வெளிப்படுத்துவது, படங்களைப் பகிர்ந்து கொள்வது, அக நூலாய் மாறிக்கொண்டுள்ள முக நூலில் அந்தரங்க ஆசைகளை வெளிப்படுத்துவது, நண்பர்கள் என்ற பெயரில் அறிமுகம் ஆகும் கயவர்களின் ஆசை வார்த்தைகளை அப்படியே நம்புவது, ஒரு கட்டத்தில் அவர்களின் வார்த்தைகளில் மயங்கி உடன் செல்லத் துணிவது, தான் மட்டும் தனியே சென்று சிக்கிக்கொள்வது என இந்த வியூகப் பாதையின்படி நிலைகள் அதிகம்.

    அப்படி சிக்கிக் கொண்டு விட்டதை ஓநாய்கள் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியபோது பணம் கொடுத்து வந்ததும், பணம் கொடுக்க முடியாதவர்கள் உடலைக் கொடுத்து வந்ததும் இயலாமையின் உச்ச கட்டம். ஒரு முறை உடலைப் படம் எடுத்துக் கொண்டு விட்டான் என்பதற்காக அந்தப் படம் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் மீண்டும் மீண்டும் அவர்களிடமே சென்று வீழ்ந்து கொண்டிருந்த பெண்கள் உண்மையிலேயே கல்வியறிவு பெற்றவர்கள் தானா என ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.

    பெண்ணின் உடலில்தான் குடும்பத்தின் மானம் அடங்கியுள்ளது என்ற சமூக விழுமியத்தின் தலைவிதி இது. இக்கயவர்கள் கூட்டத்திடம் அகப்பட்டிருந்த முதல் பெண்ணானவள் நண்பன் என்று நம்பப்பட்டவன் தன் உடலைப் பொருளாக்கி வீழ்த்திய போதே அதை தன் குடும்பத்தினரிடம் கூறி வெளிக் கொணர்ந்து இருந்தால் இத்தனை பெண்கள் தங்கள் கண்ணியத்தை இழந்திருக்க வேண்டியதிருந்திருக்காது. ஆனால் அந்தப் பெண் இதை துணிவுடன் வெளியில் பேச அவளுக்கு நம் சமூகம் சொல்லித் தந்திருக்கவில்லை.

    பெண்களாக சென்று ஏன் இப்படி மாட்டிக் கொள்ள வேண்டும் என சிலர் பட்டிமன்றம் பேசலாம். இங்கே நடப்பது நம்பிக்கைத் துரோகம். நம்பி வந்தவன் கைவிடும் அவலம். வழக்கம்போல் பெண்களை மட்டுமே குற்றம் சொல்லி விட்டு இதனைக் கடந்து விட முடியாது. ஆண்கள் சரியான சமூக புரிதலுடன் வளர்க்கப்படுகிறார்களா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. தன்னை நம்பி வரும் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துபவனே உண்மையான ஆண் மகன்.

    இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண் குழந்தைகளை வளர்க்கும் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு சமூக விழுமியங்களைக் கற்றுத்தர மறப்பதும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்கிறது. செல்போன், ஐபேட் போன்ற சாதனங்களின் மூலம் பரந்து விரியும் மாய உலகனுள் பரவிக் கிடக்கும் விரசத்திற்குள் நம் குழந்தைகள் மாட்டிக்கொள்ளாமல் அவர்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும்.

    பா.ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஏ.எஸ்.
    தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.
    பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிய வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டன. இவை முக்கியமான தேர்வுகள் என்பதை காரணம் காட்டி, பெற்றோர் குழந்தைகளை அரட்டி, மிரட்டி வருவது வாடிக்கை. மாணவர்களோ மனதில் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவார்கள். நின்றால், நடந்தால், பேசினால் குற்றம் கண்டுபிடிப்பார்கள். படி... படி... என்ற போதனைகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். உங்கள் வீட்டிலும் இது சகஜமாக நடக்கிறதுதானே?

    தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.

    பெற்றோரிடம் நேரடியாக மனம் விட்டுப் பேசாத மாணவர்கள்தான், தோல்வியைச் சந்திப்பதுடன், எதிர்மறை முடிவுகளையும் எடுக்கிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, பெற்றோரிடம் தேர்வு குறித்தும், தேர்வு பற்றிய பயம் குறித்தும் பேசுவதுதான். இந்த விஷயத்தில் பெற்றோர்தான் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றாலும், மாணவர்களும் தங்களது கருத்தை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    9-ம் வகுப்பு படிக்கும்போதே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வைச் சொல்லி பயமுறுத்துவதை பெற்றோர் கைவிட வேண்டுமென்றால், மாணவர்கள் தேர்வு பற்றிய பயத்தை மனதில் வைத்துக் கொண்டு, பெற்றோரை ஏமாற்றித் திரியக் கூடாது. சரி படிக்கிறேன் என்று நடித்து சமாளிக்கக்கூடாது. அப்படி நாடகமாடினால் தேர்வு முடிவு வரும் சமயத்தில் உண்மை வெளிப்படும். மனம் குழப்பம் அடைந்து தவறான முடிவு எடுக்கத் தூண்டிவிடும். இதற்கு ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் தங்கள் நிலையை தெளிவுபடுத்தி விடலாம்.

    வாழ்க்கை என்பது இந்தத் தேர்வுடன் முடிந்துவிடுவதில்லை. தேர்வில் மதிப்பெண்களை உயர்த்த பல வழிகள் உள்ளன. மறுதேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது என்பதை சராசரி மாணவர்கள், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிடுவோமோ என்று அஞ்சும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தையின் திறன் அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தக்கூடாது.

    மதிப்பெண் இலக்கை அடையாதவர்கள் எவ்வளவோ பேர், வாழ்க்கையில் இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறார்கள். மதிப்பெண்களில் வாழ்க்கை இல்லை என்பதை இது உணர்த்தும். எனவே பதற்றமின்றி தேர்வை எதிர்கொண்டாலே வெற்றி பெற்றுவிடலாம். உண்மையில் பயமற்ற மனதால் அதிக விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். பாடங்கள் நன்கு புரியும்.

    தேர்வு இடைவேளையையும், படிக்கும் நேரத்திலும் சிறிது இடைவேளை எடுத்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். மூளையை சுறுசுறுப்பாக்கும் ஜூஸ் வகைகள், உணவுகளை சாப்பிடுங்கள். நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளை இனிமேலாவது வழக்கமாக்குங்கள். அடுத்த தேர்வில் பயம் வராமல் தடுத்துவிடலாம்.

    எதிர்பார்த்த மதிப்பெண் வந்தாலும், வராவிட்டாலும், வாங்கிய மதிப்பெண்ணை வைத்து வாழ்வைத் தொடர முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை காயப்படுத்தி, கடுப்பேற்றுவதைவிட சிறந்த வழிகாட்டிகளாக இருந்து அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுங்கள்!
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.
    இசைக்கு மயங்காத உயிரினங்கள் உலகில் இல்லை. இனிமையான இசை கேட்பதால் வாழ்நாள் கூடும் என்பதோடு பல்வேறு நோய் தீர்க்கும் காரணியாகவும் இசை இருந்து வருகிறது. ஆனால் அதுவே அளவை மிஞ்சிவிட்டால் நஞ்சாகி விடும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்கிறார்கள். வீட்டில் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்கவும், ஹெட்போன்களை பயன்படுத்துவோர் ஏராளம்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். காதிற்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்போன் அனுப்புவதால் காது கேளாமைக்கு காரணமாகிறது. 5 நிமிடம் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். பிறர் பயன்படுத்தும் ஹெட்போனை எடுத்து தயங்காமல் மாட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தால், காது சார்ந்த தொற்றுநோய்கள் தாக்கக்கூடும். மேலும் ஹெட் போன் காதிற்குள் காற்று புகுதலை தடுத்து விடுகிறது.

    இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும். ஹெட்போன் உபயோகித்தபடி வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவோரும் அதிகம். மாணவ- மாணவிகள் படிக்கும்போது இசை கேட்பது அபாயகரமானது. இது மூளைக்கு வேலை பளுவை அதிகரித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 
    இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

    இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நமது உடலில் பல நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் மலச்சிக்கல்.

    மலச்சிக்கல் ஏற்பட காரணம்: பீட்ஸா, பர்கர் போன்ற அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல நாம் பிற நோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

    குறிப்பு 1 : மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

    குறிப்பு 2 : மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

    குறிப்பு 3 : மலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.

    குறிப்பு 4 : குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

    குறிப்பு 5 : நார்சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். நாளை சன்டே ஸ்பெஷலாக காராசாரமான முறையில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முள் இல்லாத மீன் - அரை கிலோ
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10
    இஞ்சி - 2 இன்ச்
    பூண்டு - 6 பற்கள்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிது
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,

    சன்டே ஸ்பெஷல் ஸ்பைசி மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்துகள் நிறைந்த சாத்துகுடி சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.
    சாத்துகுடி பழத்தில் அபரிமிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சாத்துகுடியில், நார்சத்து நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்க உதவுகிறது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.

    சாத்துகுடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். உடலில் புதிய ரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துகுடி பழச்சாறு அருந்தவேண்டும். உடல் அசதி பறந்துவிடும். அதனால்தான், நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்தலாம்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துகுடி ஜூஸ் சிறந்த பலனை தரும்.பெரியவர்களுக்கு ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது.

    ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி, உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. சாத்துகுடி பழமா? என சாதாரணமாக கேட்கும் பலருக்கு, அதன் பெருமை தெரியவில்லை. சாத்துகுடி, சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது.

    பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும்.
    பெற்றோர் குழந்கைளுக்கான உறவு விலைமதிக்க முடியாதது. நல்ல குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கடமை பெற்றோருக்கு உண்டு. இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது. ‘ஹாய், டாடி’, ‘மம்மி, பைபை’ என்ற அளவில் பேச்சும் உறவும் சுருங்கிவிட்டது. பொருளாதாரரீதியாக குடும்பத்தை சமாளிக்க கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் குழந்தைகளுக்கு.

    7 கிலோ புத்தக பையை சுமந்து பள்ளிக்கு சென்று திரும்பும் மழலைகள் வீட்டுக்கு வரும் போது கதவு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து மனதளவில் வாடித்தான் போவார்கள். வீடு வரும் குழந்தைகளை, ‘வா... செல்லம்..’ என்று அன்போடு அழைக்கவும், பள்ளிக்கு சென்று மாலையில் அழைத்து வரவும் கூட பெரும்பாலான வீடுகளில் யாரும் கிடையாது. சீருடைகளை களைந்து உடைமாற்றிய பின்னர் காலையில் அம்மா வைத்துவிட்டுப்போன எதையாவது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் சாப்பிவிட்டு டியூஷனுக்கு புறப்பட்டு சென்றுவிட வேண்டிய நிலைதான் இந்த பிள்ளைகளுக்கு.

    இரவு எட்டு மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பும்போது அப்பாவும், அம்மாவும் வந்து சேருவார்கள். இரவு உணவை தயார் செய்வதற்காக தாய் கிச்சனுக்கு சென்றுவிட தந்தையோ மிச்சமுள்ள அலுவலக வேலைகளை பார்க்கவோ சோர்வில் தூங்கவோ தயாராகி விடுவார். பெற்றோர் இருந்தும் தனிமையில் வீழ்கின்றனர் சிறார்கள். அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் டிவியும், அதன் ரிமோட்டும்தான். அவர்கள் மனம்போன போக்கிற்கு சற்று நேரம் பார்த்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டு தூங்க செல்ல வேண்டியதுதான். பள்ளியில் நடந்த நிகழ்வுகளையோ, நண்பர்களுடனான உரையாடல்களையோ, பாடம் குறித்த சந்தேகத்தையோ தீர்த்து வைக்க வீட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது.

    மைதானத்துக்கு சென்று விளையாடுவது அறவே நின்று விட்டது; இந்த நிலையில் தான் தற்போதைய குடும்பங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. எதற்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாத கட்டாயத்தில் பெண்களும் தள்ளப்பட்டுள்ளனர். வார விடுமுறை நாட்களில் குழந்தைகளோடு குதூகலமாக இருப்பது என்பது கூட சில பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும் வார விடுமுறை நாட்களில் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர் நம்முடன் ஒரு நாள் கூட இருக்க மறுக்கிறார்களே என குழந்தைகளுக்கும், நம்மை புரிந்துகொள்ளவில்லையே என குழந்தைகள் மீது பெற்றோருக்கும் அதிருப்தி ஏற்படுகிறது. முடிந்தவரை இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். எப்படியாவது ஒரு நாளைக்கு சில நிமிடங்களையாவது குழந்தைகளுடன் பேசுவதற்கு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளின் எண்ணவோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

    பெற்றோர் குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரித்துள்ளதால் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட துவங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களது கவனம் சிதறும் அபாயம் உள்ளது. மேலும் சில வீடுகளில் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு குழந்தைகள் சரியாக மதிப்பளிக்காத நிலையும் உருவாகி வருகிறது. எனவே இந்த காலகட்டத்துக்கு ஏற்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு அமைதியான மனப்பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் முகப்பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.
    வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம். அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு - இவை மூன்றுமே முகப்பருக்களாகப் பிரதிபலிக்கும். இதைத் தவிர, அதிக மன உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.

    நீண்ட கால சைனஸ் தொல்லைக்கான அறிகுறியாகவும் முகப்பபரு உண்டாகும். பி.ஸி.ஓ.டி. எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கும் பரு உண்டாகலாம். சிலருக்கு, பல்லில் சொத்தை, நோய்த்தொற்று இருந்தாலும்கூட, அதன் வெளிப்பாடாகப் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.

    திருநீற்றுப் பச்சிலையை அரைத்து, பருக்களின் மீது தடவ, ஓரளவு கட்டுப்படும். இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணத்தை, சுடுதண்ணீரில் கலந்து முகத்தைக் கழுவலாம். எண்ணெய்ச் சருமத்தினருக்கு, பருக்கள் பழுத்து இருக்கும். இவர்கள், திரிபலா சூரணத்தைக் குழைத்து, முகத்தில் 'பேக்’ போட்டு, 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், நல்ல பலன் இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சருமத்தினர் மட்டுமே இதைப் போடவேண்டும்.

    அதிமதுர வேரைப் பொடித்துக் குழைத்து, பருக்கள் மீது போடலாம். தொடர்ந்து போட்டு வர உதிர்ந்துவிடும். இந்தப் பொடியை, பயத்த மாவில் கலந்து, குழைத்து 'பேக்’ போட்டு, சில நிமிடங்கள் காயவிட்டுக் கழுவலாம். அதிமதுரத் தூளை தேநீர் போலக் கொதிக்கவைத்து அருந்தலாம். ஹார்மோன்களைச் சீராக்கி, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும். அஜீரணத்தைப் போக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

    உணவில் மாற்றம்!

    பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை. ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.

    தவிர்க்க வேண்டியவை:

    மருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எந்த பவுடரும் போடக் கூடாது. அடிக்கடி சோப் மாற்றுதல், ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவுதல், டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.

    டீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்கவைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/ உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

    நலங்கு மாவு

    சோப்புக்குப் பதிலாக, இந்த நலங்கு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். ஒரு கிலோ பாசிப் பயறுடன், 50 கிராம் சந்தனம் மற்றும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு தலா 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போக அரிசி (இவை அனைத்துமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) தலா 200 கிராம் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துப் பயன்படுத்தலாம்.
    ×