என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    அவகோடா, பப்பாளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரு பழங்களை வைத்து சத்தான காரசாரமாக சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவகோடா - 2
    பப்பாளி பழம் - பாதி
    எலுமிச்சை பழம் - 1
    உப்பு - தேவைக்கு
    தேன் - கால் டீஸ்பூன்
    மிளகு தூள் - கால் டீஸ்பூன்
    ஆலிவ் ஆயில் - கால் டீஸ்பூன்
    கொரகொரப்பாக பொடித்த சிவப்பு மிளகாய் - சிறிதளவு



    செய்முறை :

    எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும்.

    அவகோடா, பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு, தேன், மிளகு தூள், ஆலிவ் ஆயில், கொரகொரப்பாக பொடித்த சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான அவகோடா - பப்பாளி சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘செர்விகல் கார்சினோமா’ (Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) காரணம்.

    இது ஆணிடம் இருந்து பெண்ணுக்குத் தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் இருந்தாலும், எல்லோருக்கும் இது பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், இந்த வைரஸ் வீரியத்துடன் தாக்கும். இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல வருடங்கள் கழித்தே புற்றுநோயாக வெளிபடும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததே எல்லா நோய்களுக்கும் முக்கிய காரணமாகும். பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

    புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை முதல் நிலையில் கண்டறிந்தால் 95 சதவீதம் காப்பாற்ற முடியும். 2-வது நிலை என்றால் 60 சதவீதமும், 3-வது நிலை என்றால் 40 சதவீதமும் காப்பாற்ற முடியும். முற்றிப்போன நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது கடினம். மார்பகத்தில் கட்டி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாய், குடல், தொண்டை, மூளை, எலும்பு போன்றவற்றிலும் புற்றுநோய் வரும்.

    புகையிலையால் புற்றுநோய் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த சொல்ல வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பாப்ஸ்மியர் (Papsmear), வயா, வில்லி (VIA,VILI) பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் CRYO என்ற எளிதான முறையில், சரிசெய்துவிடலாம். அல்லது அந்த இடத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். சிகிச்சைக்குப் பிறகும்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    தடுப்பூசி: இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.

    ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இது முதல்நிலைத் தடுப்பாகச் செயல்படும். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது, பாப்பிலோமா வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும்.

    பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு வழியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. மணமான பெண்கள் அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.  அவ்வாறு முடியாவிட்டால், 35 வயது முதல் 45 வயதுக்குள் ஒரு முறையேனும் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
    மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுபவர்கள் தினமும் தியானம் செய்வது வருவது மிகவும் நல்லது.
    இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

    முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள்.

    மனதை மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.

    மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

    தியானத்தை முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். 
    முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சிக்கிதான் அப்பெண்கள் சீரழிந்து உள்ளனர். இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை தவிர்த்து விடலாமா என்றால் அதற்கு சரியென சொல்ல மாட்டேன். பரிணாம வளர்ச்சியை, அறிவியல் வளர்ச்சியை தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.

    ஆரம்ப காலத்தில் மனிதன் காடுகளில் வசித்தான். பின்னர் வீடு கட்டி குடிபுகுந்தான். இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிவிட்டது. அதனால் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த மனிதர்கள் இன்று தனிக்குடித்தனமாக மாறி தீவாகி விட்டார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் கூட யார் என்று தெரியவில்லை. அடுத்த வீடு இன்னொரு பூமியாகி விட்டது.

    ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளை பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா? அதுபோன்றுதான் இன்றைய காலத்திற்கேற்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    எந்த ஒரு விசயத்திலும் நன்மையும் இருக்கும். தீமையும் இருக்கும். உடல் நலத்துக்கு டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையைக்கூட பக்கவிளைவுகள் உண்டு. பேஸ்புக்கில் இருக்காதா என்ன? எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இருந்தால் போதும் பிரச்சினை ஏற்படாது. இதற்கு கற்றுக்கொடுத்தல்தான் முக்கியம்.
    பள்ளியில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுக்கு பயிற்சி இருப்பது போல், பொது அறிவுக்கு பாடம் நடத்துவது போல் வாழ் வியல் பற்றிய மனவளக்கலை பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்க அவர்களுக்கு மனதிடம் உண்டாகும்.

    ஜெர்மனி கார்கள்தான் பேமஸ். அங்குள்ள சாலைகளும் உலத்தரமானவை. போக்குவரத்து குற்றங்களுக்கு அதிகப்படியான அபராதமோ தண்டனையோ விதிக்கும் சட்ட திட்டம் கிடையாது. அப்படி இருந்தும் உலகிலேயே அங்குதான் விபத்துக்கள் குறைவு. காரணம் எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நன்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் வாழ்க்கை முறை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கற்பித்து வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

    ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை பெற்று விட்டால் பிரச்சினை ஏற்படும் சமயங்களில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளும் திறனை அளிக்கும்.

    பொதுவாக மூன்று விசயங்களில் ஈர்ப்பு இருக்கும். ஒன்று ஆண்&பெண் கவர்ச்சி. இரண்டாவது புகழ். புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மூன்றாவது அன்பு. அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இந்த மூன்றும் கவர்ந்து இழுப்பவை. அதனால் இந்த மூன்றும் கிடைக்கும் இடம் நோக்கி அனைவரும் செல்கிறார்கள்.

    இன்றைய இளைஞர்களுக்கு சமூகவலை தளங்கள் மூலம் இந்த மூன்றும் கிடைக்கிறது. அதாவது அவர்கள் போடும் ஸ்டேடஸ், டிக்டாக் செயலில் ஆடல் பாடல் மூலம் பிரபலம் என்ற புகழ் கிடைக்கிறது. அதன் மூலம் ஆண்&பெண்களிடையே நட்பு ஏற்பட்டு கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அடுத்து தொடர்ந்து காட்டும் அன்பில் அவர்கள் மயங்கி விழுகிறார்கள். அதன் பின்னரே இது போன்ற வக்கிரமான குற்றச் செயல்கள் நடக்கின்றன.

    சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் இவையாவும் உண்மையானவை அல்ல. ஒருவருக்கு ஐந்தாயிரம் பேர் எப்படி நண்பனாக, தோழியாக இருக்க முடியும்? அந்த உறவுகளில் போலியானவையும் இருக்கலாம். எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுவதால் தான் பிரச்சினையே. வீடு வேறு, வெளிஉலகம் வேறு. வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்கா பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் வெளி தொடர்பு உறவுகள் இருக்காது. அதை உண்மை என்று மயங்காதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    சினிமாவில் நடிக்கும் நடிகர் அந்த கதையுடன் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கிறாரோ அது போன்றதுதான் இதுவும். ஆனால் பெண்கள் முகநூலில் காட்டும் அன்பை உண்மை என்று நம்பி படுகுழியில் விழுந்து விடுகிறார்கள்.

    எனவே முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

    பொதுவாக நேர்மறையான விசயங்க ளைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்&குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

    சமூகவலை தளங்களில் ஆண்கள் வீசும் வலைகளில் பெண்கள் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்றால் மனோவசியம் செய்யப்படுகிறார்கள். முகநூலில் நட்பு கொண்ட ஆண்&பெண் இருவரும் தொடக்கத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அடுத்த கட்டமாக அந்த ஆண் தன் விருப்பங்களை திரும்ப திரும்ப கூறுகிறான். எந்தவொரு கட்டளையும் தொடர்ந்து கொடுக்கும் போது அதை செய்ய மனம் பழக்கப்பட்டு விடுகிறது. பறவைகள், விலங்குகளை பழக்கப்படுத்துகிறோம் அல்லவா, அது போல் தான். அந்த நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அவள் தன்னை சுற்றி அமைத்திருந்த வேலியை உடைத்து விடுகிறாள். அதன் பின் அவன் சொல்கிறபடி நடக்க தொடங்குகிறாள். இந்த மனோவசியத்தில் தான் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.

    பொதுவாக பெண் குழந்தைகள் இதுபோன்ற விசயங்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் பெற்றோரிடம் எதனையும் தெரியப்படுத்தும் நிலையில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தை களிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.

    மேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர்.

    எனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.

    நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறமோ, விரும்புகிறமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணி னாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.

    இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.

    இந்த பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு மனநல வாழ்வியல் ஆலோசகராக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த பாதிப்பால் அவர்கள் சுருண்டு போய்விடக் கூடாது. இது அவங்களுக்கு ஒரு பெரிய விபத்தாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு விபத்தை கண்ணால் பார்த்தால் கூட அது மனதுக்குள் ஒரு அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தும்.

    ஆனால் அவர்களே விபத்தில் சிக்கி இருக்கும் போது எப்படி இருக்கும்? அதுவும் தன் மீது அன்பு காட்டிய நபரே இப்படி நடந்து கொண்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். பெரிய பாரமாக தான் இருக்கும். இந்த சம்பவம் அவர்கள் மனதில் சித்திரமாக பதிந்திருக்கும். இது பின்னாட்களில் வேறு எது நடந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே அதில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு தகுந்த மனநல சிகிச்சையும் மனநல திட பயிற்சியும் அளிக்க வேண்டும்.

    Email:fajila@hotmil.com
    வயிற்று உப்பிசத்துக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் இஞ்சி மிட்டாய் நல்லது. இந்த இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இளசான இஞ்சி - 200 கிராம்
    சுத்தமான பாகு வெல்லம் - 300 கிராம்
    கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை

    இஞ்சியைத் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றிக் காய்ச்சுங்கள்.

    இளம் பாகு பதம் வந்ததும் இஞ்சி விழுது சேர்த்து, சிறிது நேரம் கிளறுங்கள்.

    கோதுமை மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கிளறுங்கள்.

    நெய், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள்.

    இப்போது சூப்பரான இஞ்சி மிட்டாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
    ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்து போய் விடும். எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற் போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும்.

    இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். ஒரு சிலருக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம். தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும்.

    கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும். சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

    காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது.
    எப்போதும் போல, எல்லோரையும் போல யாரும் இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும்போது, மாற்றம் பெறாத எதுவும், வித்தியாசமாக இல்லாத எவருடைய வாழ்வும் அத்தனை வரவேற்பைப் பெறாது. வந்து போவதில் என்ன இருக்கப் போகிறது என்று வித்தியாசமாக இருப்பவர்களே செய்தியிலும், சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர்.

    எப்போதோ படித்தது. ஆப்பிரிக்காவில் அத்தனை அதிகமாய் நாகரிகம் பரவாத நேரம். பிரபலமான செருப்பு நிறுவனம் தன் காலணிகளை அங்கே சந்தைப்படுத்துவதற்காக ஒரு விற்பனைப் பிரதிநிதியை அனுப்புகிறது. போனவன் திரும்பிவந்து தந்த பதில், “அங்கே யாருமே செருப்பு அணியாதபோது, எப்படி செருப்பு விற்பது?” சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு இளைஞன் சென்றிருக்கிறான்.

    சென்றடைந்த சில நாள்களுக்குள் ஆயிரக்கணக்கான செருப்புகளைத் தருவித்துக் கொண்டதோடு, செருப்பு அணிவது எத்தனைப் பாதுகாப்பானது என்பதை அங்குள்ள மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, சிலருக்கு இலவசமாகவும், சிலருக்குக் குறைந்த விலையிலும் விற்றுச் சந்தைப்படுத்த தொடங்கியதைக் கூறுகிறான். இதுதான் வித்தியாசமாக சிந்திப்பதென்பது.

    புதிதாகச் சிந்திப்பது இப்போதல்ல, அப்போதே இருந்திருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்திக்காமலும், கவலைப்படாமலும் உழைத்துக் கொண்டிருந்தவர் தாம் புதிதாகக் கண்டுபிடித்த மின் குமிழை (பல்ப்) பத்திரிகைச் செய்தியாளர்களிடம் காட்டி எரிவதை அறிமுகப்படுத்த விழைகிறார். தன் உதவியாளரை அழைத்து அதை பத்திரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்த விடுதிக்குக் கொண்டுவரக் கொடுத்திருக்கிறார்.

    உதவியாளர் பாவம், வரும் வழியில் அதைக் கீழே தவறவிட்டு உடைத்து விடுகிறார். வழக்கம் போலத் தோல்வி என்றாலும், துவண்டு போகாத அவர் மறுவாரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதே நபரிடம் அதைக் கொண்டுவரப் பணித்தபோது அவருடைய நண்பர்கள் “இவன் பொறுப்பற்றவனாயிற்றே, மறுபடியும் உடைத்து விடுவானே” என்றபோது, “ஒருமுறை தவறு செய்தவன்தான் மறுமுறை கவனமாக இருப்பான்” என்று பதிலளித்தார் எடிசன்.

    “இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
    அதனை அவன் கண்விடல்”

    என்பது நிர்வாகக் கலை. எவன் சரியாகச் செய்வான் என்பதை விடவும், எவன் பொறுப்பாகச் செய்வான் எனும்போது தவறு செய்தவன்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று வித்தியாசமாக எடிசன் நினைத்ததுகூட திறமையான நிர்வாகக் கலைதான்.

    பல நிறுவனங்களில் ‘வேலை தெரியாது, செய்ய முடியாது’ என்று சொல்லியே பலர் வேலைகளிலிருந்து நழுவிக் கொள்வார்கள். அதையே காரணமாக வைத்து பெரிய பொறுப்புகளிலிருந்தும் தம்மை பத்திரமாக விடுவித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு “வேலை கள்வர்கள்” என்றுகூட ஒரு பெயருண்டு. அவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வேலை வாங்கிக் கொள்வது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.

    சோம்பேறிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பது பழைய சித்தாந்தம். ஆனால் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் “சோம்பேறிகளிடம்தான் வேலைகளை ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் சீக்கிரமாகச் செய்து முடிக்கும் எளிமையான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்” என்பார். இதுவோர் வித்தியாசமான கோட்பாடு. வெற்றிகரமான விளைவுகளுக்கு உகந்ததாக அவர் கண்டுபிடித்த இக்கோட்பாடு பெரிதும் வரவேற்கத்தக்கது.

    மற்றுமோர் மாற்றுச் சிந்தனை. நியூயார்க் டைம்ஸ் நிருபர் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு காலம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உணர்த்துவார். முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு உணவூட்டும் அமெரிக்கத் தாய், தன் பிள்ளைகள் சிதறடிக்கும் உணவைக் காட்டி, “இப்படியெல்லாம் உணவை வீணடிக்கிறாயே, இந்த உணவுக்குக்கூட வழியில்லாமல் இந்தியாவிலும், சீனாவிலும் எண்ணற்ற குழந்தைகள் தவிக்கிறார்கள்” என்று கூறியதுபோக, இப்போது, “இப்படி உணவை வீணடிக்கிறாயே. இன்னும் சில நாள்களில் இதுகூட நமக்குக் கிடைக்காமல் செய்ய இந்திய சீன இளைஞர்கள் நமது வாய்ப்புகளை இங்கு வந்து பறிக்கப் போகிறார்கள்” என்று எச்சரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அச்சுறுத்தல் என்பது அறிவுறுத்தலைவிடவும் வலிமையானது.

    காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது. இரண்டு இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் கல்வித் தகுதியிலும் நிறுவனத் தேர்விலும், நேர்காணலிலும் சமமாகவே மதிப்பெண்கள் பெற்றிருக்க யாரைத் தேர்வு செய்வது, யாரைத் தவிர்ப்பது என்று நிர்வாகம் தவித்தபோது இருவரையும் அழைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறார் நிறுவனத் தலைவர்.

    “இந்த வேலை கிடைக்காவிட்டால் நீ என்ன நினைப்பாய் எப்படி உணர்வாய்” என்றபோது, “என்ன நினைப்பது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்வேன்” என்கிறான் முதல் இளைஞன். அடுத்த இளைஞனுக்கும் அதே கேள்வி. அதற்கு அவன் தந்த பதில், “உங்கள் நிறுவனம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். வேறென்ன நினைப்பது? “இரண்டாவது இளைஞனே தேர்ந்தெடுக்கப்படுகிறான். இது வித்தியாசமான பதில் மட்டுமல்ல, நம்பிக்கை மிகுந்த விவேகமான பதிலும்கூட. இதுதான் சிலரின் வெற்றி ரகசியம். வித்தியாசமாக சிந்தியுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

    ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட காலிஃபிளவர் வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காலிஃபிளவர் - ஒரு கப்
    கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்
    கசகசா - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - ஒன்று



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக வெட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃபிளவர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முகத்தில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். இத்தகைய பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.

    * ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை முடியிலோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * ப்ளீச்சிங் செய்யும் முன் முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது. அதுமட்டுமின்றி கிளன்சிங் செய்வதால் முகத்தில் மேக்அப் போட்டிருந்தால் அதுவும் நீங்கிவிடும். எனவே பால் அல்லது கிளன்சரைக் கொண்டு பஞ்சு மூலம் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

    * முகத்திற்கான ப்ளீச் கிரீம் மற்றும் கால் ஸ்பூன் ஆக்டிவேட்டர் பவுடரை போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ப்ளீச் கிரீமுடன் ஆக்டிவேட்டர் பவுடர் கலந்து உள்ள பேக்குகளை பயன்படுத்தலாம்.

    * பின் அதனை நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். புருவம் மற்றும் தலைமுடியில் படாதவாறு முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

    * பின்னர் ரோஸ் வாட்டரில் காட்டன் துண்டுகளில் எடுத்து கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    * பின்னர் மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

    * அடுத்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழத்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும்.

    * இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.
    குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம். சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
    குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம். தும்மல், அழுகை, ஆழ்ந்த மூச்சி விடும்போது விக்கல் வருவது இயல்பு. இதுபோல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும். மிகவும் அரிதாக, உடல்நல பிரச்னைகளால் விக்கல் வரக்கூடும்.

    விக்கல் வந்தால் அவசர சிகிச்சை தேவை என்பதெல்லாம் கிடையாது. அது இயல்பான ஒரு விஷயம்தான். ஒரு சிலருக்கு மிகவும் அரிதாக சில பிரச்னைகளை விக்கல் ஏற்படுத்தலாம். அவர்களுக்கு விக்கல் மாதம் முழுக்க வந்தால் என்ன பிரச்னை எனப் பார்க்க வேண்டும். இதுபோல் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

    குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கல் மிகவும் பொதுவானது. பயம் கொள்ள தேவையில்லை. உணவும் உண்ணும் போதோ உணவு உண்ட பின்போ ஏற்படுவது சகஜம். குழந்தைகள் தங்களை அறியாமலே அதிக காற்றை உணவு உண்ணும் போதும் பால் அருந்தும்போதும் காற்றை விழுங்கி விடுகின்றனர். வயிற்றில் உள்ள வாயு (காற்று) விக்கலை ஏற்படுத்துகிறது.

    சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.

    குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின் வாயின் வழியாக செல்வது தடுக்கப்படும். இதனால் விக்கல் வருவதும் தடுக்கப்படும்.

    குழந்தைக்கு தரும் ஃபீடிங் பாட்டிலில் பெரிய துளை இருந்தாலும் அதன் வழியாக அதிக காற்று சென்று குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம். குழந்தையின் ஃபீடிங் பாட்டில் சொட்டு சொட்டாக வரும் படி இருக்கவேண்டும். அப்படியே தொடர்ந்து பால், தண்ணீர் வெளியேறும்படி பெரிதாக இருக்க கூடாது.

    சிலர் விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்காதீர்கள் என்பார்கள். ஆனால், அது தவறு. விக்கல் வந்தாலும் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டலாம்.

    கொதிக்கின்ற நீரில் ½ டீஸ்பூன் சோம்பை போட்டு, அந்த தண்ணீரை இளஞ்சூடாக 2-3 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்க விக்கல் நிற்கும். உடனடியாக விக்கலை நிறுத்தும் வைத்தியம் இது.

    குழந்தையின் வயிறு வலி, வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு ஓம தண்ணீரை சிறிதளவு கொடுக்கலாம்.. இந்த வைத்தியம் குழந்தையின் வயிற்றில் உள்ள வாயு பிரச்னையை சரியாக்கும். வயிற்று பிடிப்புகூட சரியாகும். விக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
    குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி. இன்று இந்த பர்ஃபியை எளிய முறையில் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 100 கிராம்,
    அத்திப்பழம் - 1,
    கிஸ்மிஸ் - ஒரு கைப்பிடி,
    பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் - தலா ஒரு கைப்பிடி,
    நெய் - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.



    செய்முறை :

    மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட்டை கொரகொரப்பாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும்.

    இதில் அத்திப்பழம் பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸியில் மசித்துப் போடவும்.

    ஏலக்காய் தூளும் நெய்யும் கலந்து நன்கு உருட்டி பர்ஃபிகளாகத் தட்டிப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைப்பது, எத்தனை நாட்கள் வரை சேமித்து வைப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.

    வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும். தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.

    ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், வெளியில் தாய்ப்பாலை வைக்க நினைக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது....

    தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

    இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் சேகரிக்க நினைக்கிறீர்கள் என்றாலோ அடுத்த நாளுக்கு தாய்ப்பால் சேகரிக்க வேண்டுமென்றாலோ நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம். இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும்.

    ஒரு வாரம் நீங்கள் எதாவது அலுவல் ரீதியாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
    ×