search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headphone problems"

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.
    இசைக்கு மயங்காத உயிரினங்கள் உலகில் இல்லை. இனிமையான இசை கேட்பதால் வாழ்நாள் கூடும் என்பதோடு பல்வேறு நோய் தீர்க்கும் காரணியாகவும் இசை இருந்து வருகிறது. ஆனால் அதுவே அளவை மிஞ்சிவிட்டால் நஞ்சாகி விடும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்கிறார்கள். வீட்டில் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்கவும், ஹெட்போன்களை பயன்படுத்துவோர் ஏராளம்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். காதிற்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்போன் அனுப்புவதால் காது கேளாமைக்கு காரணமாகிறது. 5 நிமிடம் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். பிறர் பயன்படுத்தும் ஹெட்போனை எடுத்து தயங்காமல் மாட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தால், காது சார்ந்த தொற்றுநோய்கள் தாக்கக்கூடும். மேலும் ஹெட் போன் காதிற்குள் காற்று புகுதலை தடுத்து விடுகிறது.

    இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும். ஹெட்போன் உபயோகித்தபடி வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவோரும் அதிகம். மாணவ- மாணவிகள் படிக்கும்போது இசை கேட்பது அபாயகரமானது. இது மூளைக்கு வேலை பளுவை அதிகரித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 
    ×