என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 250 கிராம்
    பூண்டு - 4 பல்
    வெங்காயம் - 1
    குடை மிளகாய் - பாதி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
    காய்ந்த மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்,

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பூண்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் முக்கால் பாகம் வதங்கினால் போதுமானது.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. இதிலேயே தண்ணீர் இருக்கும்.

    காளான் வெந்தவுடன் அதில் மிளகு தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் மிளகு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலர் சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் பயன்படுத்துவார்கள். இவ்வாறு சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னவென்று பார்க்கலாம்.
    சிலர் சிக்கனில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை தெரியுமா? உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் உண்டு.

    பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக இரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன, அதனால் அவை இரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.

    பிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.

    சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணமாகவும் அமைகின்றது.



    பாக்டீரியா தொற்றுக்கள் தொண்டையில் ஏற்பட்டு தொண்டையில் டான்சில், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி விடுகின்றது. ஜீரணக்கோளாறுகளை உருவாக்கி விடுகின்றது.

    சிக்கன் மூலமாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நுரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

    பிறப்புறுப்புகளை பாக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி உண்டாகிறது. அதுமட்டுமின்றி கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    கர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்த உணவுகளை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள்.
    இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

    தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வதில் பிரச்சனை ஏற்படும்.

    நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சனை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.



    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

    அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சனை வருவதுண்டு.

    30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
    காலையில் செய்த ரசம் மீந்து விட்டால் மாலையில் அதில் பருப்பு வடை செய்து சேர்த்து ரசம் வடையாக சாப்பிடலாம். இன்று இந்த ரசம் வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - ¾ கப்
    வெங்காயம் - 1
    சிவப்பு மிளகாய் - 3
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி இலை - 3 மேஜைக்கரண்டி
    பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    ரசம் செய்ய தேவையான பொருட்கள்

    புளி - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1
    மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
    பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் - 3
    கொத்தமல்லி / தனியா - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ½ தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சில



    செய்முறை

    வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.

    மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.

    கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.

    சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.

    ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

    மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து, கலந்து அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.

    அருமையான ரசம் பருப்பு வடை ரெடி.

    குறிப்பு :

    காலையில் செய்த ரசத்திலும் இதை செய்யலாம்.
    ரசம் அல்லது வடை, இரண்டில் ஒன்று சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றி பாருங்கள் அன்பு நிலைத்திருக்கும்.
    ‘அதிகம் விவாதிக்கிற, சண்டை போட்டுக் கொள்கிற தம்பதிகளே ஒருவருக்கொருவர் அதீத அன்புடன் இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.

    பிடிக்காத ஒருவர் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும், பிடித்த ஒருவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதும்தான் தம்பதிகளின் சண்டைக்கு முக்கிய காரணம். கருத்து வேறுபாடு இல்லாத காதலர்களே / தம்பதிகளே கிடையாது. அந்த கருத்து வேறுபாட்டை இருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த உறவு தித்திக்கிறது.

    அதனால், சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றுங்கள்.

    1. தன்னுடைய கருத்தை மற்றவரின்மேல் திணிக்கக் கூடாது.
    2. பார்ட்னர் முக்கிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதை திசை திருப்பவோ, புறக்கணிக்கவோ கூடாது.
    3. அடுத்தவர் பேசுவதையும் கவனியுங்கள்.

    4. மற்றவர் நலன் சார்ந்ததாகவே உங்கள் முடிவுகள் இருக்கட்டும்.
    5. கடுமையான வார்த்தைகள் கூடவே கூடாது.
    6. விட்டுக் கொடுப்பதன் மூலம் உறவைப் பாதுகாக்க முடியும்.‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ என்று வள்ளுவர் சொன்னது சரிதான்!
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. குழந்தைகளின் மனஅழுத்தத்திற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

    1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்



    4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

    12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
    கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையில் இட்லி செய்து கொடுக்கலாம். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 1 கிலோ,
    சிறுகீரை - 1 கட்டு,
    சிறுபருப்பு - 100 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 6,
    தக்காளி - 1,
    பெரிய வெங்காயம் - 2,
    உப்பு - தேவைக்கு,
    பூண்டு - 4 பல்.



    செய்முறை

    சிறுகீரையை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொடியாக நறுக்கிய கீரையுடன் சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும்.

    பின்பு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி மாவில் உப்பு, அரைத்த கீரை கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சிறுகீரை இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். எந்த தவறான முறையில் சீப்பை உபயோகிப்பதால் முடி கொட்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    சில குறிப்பிட்ட நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகமான ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ முடிக்கு அடிக்கடி உபயோகிப்பது, மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் முடி அதிகமாக கொட்டுகின்றது. நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். இங்கே பொதுவாக தவறான முறையில் சீப்பை உபயோகப்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் திருத்தி கொள்ளுங்கள்.

    முதலில் முடியில் உள்ள சிக்கல்களை போக்க சீப்பை வேர்களில் இருந்து உபயோகிக்காமல் முடியின் பாதியில் இருந்து உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்து சிக்கல்களை நீக்கிய பின்பு முடியின் வேர்களில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தலாம்.

    ஆரம்பத்திலேயே சிக்கல்களை எடுக்காமல் வேரில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தினால் முடி மேலும் சிக்கலாகி முடி பலவீனமாகும். இதனால் பலவீனமடைந்த முடிகள் கொட்ட ஆரம்பிக்கும் எனவே அதிகப்படியான முடி கொட்டும் வாய்ப்பு இருக்கிறது.



    தற்போது முடியைப் பராமரிக்க பல்வேறு ரசாயனப் பொருட்கள் மார்க்கெட்களில் கிடைக்கிறது.

    கிரீம்கள், சீரம், பேஸ்ட் போன்ற பொருட்கள் ஸ்டைலிங் காரணமாக முடிக்கு உபயோகப்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இவற்றை முடியில் உபயோகித்த பிறகு சீப்பை பயன்படுத்தாதீர்கள். உங்கள் விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

    சீப்பைப் பயன்படுத்துவதால் கிரீம்கள் இயல்பு மாறுவதை விட இது முடியை பாதிக்கும். அதன் அடர்த்தியைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி இது முடியை உடைக்கும் வல்லமை வாய்ந்தது இதனால் முடி அதிகமாக கொட்டும்.

    சில நேரங்களில் சிலர் முடியை சீப்பு கொண்டு நுனியில் இருந்து வேர் நோக்கி சீவுகின்றனர். இது முடி அடர்த்தியாக அதிகமாக இருப்பது போன்று காட்சி அளிக்க உதவுகிறது. இது ஒரு தந்திரம் தான் என்றாலும் அடிக்கடி இவ்வாறு செய்வதால் தலையின் புறத்தோல் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்து அடர்த்தி குறையும். எனவே முடிக்கு பாதிப்பில்லாமல் முடியை அடர்த்தியாக காட்ட சில முடி ஸ்ப்ரே (அதிக ரசாயனம் கலக்காதது) உபயோகப்படுத்தலாம்.
    இந்த ஆசனம் செய்து வந்தால் உடலிலுள்ள அனைத்து நரம்புகள், முதுகு, வயிறு மற்றும் கை, கால்களில் தசைகள், வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை அடையும்.
    பெயர் விளக்கம் : ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ஹஸ்த’ என்றால் உள்ளங்கைகள் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் பாதங்களின் இரண்டு பக்கத்திலும் உள்ளங்கைகளை வைத்திருப்பதால் பாத ஹஸ்தாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : சூரிய நமஸ்காரத்தின் இரண்டாம் நிலையிலிருந்து முன் வளைந்தபடி மூச்சை வெளியே விட்டு உள்ளங்கைகளை பாதங்களின் பக்கவாட்டில் தரைவிரிப்பின் மேல் வைக்கவும். முழங்கால்களை வளைக்கக் கூடாது. இப்போது தலையை வளைத்து முழங்கால்களை நெற்றியால் தொடவும்


    கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகுத் தசை முழங்கால் பகுதி மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : இந்த ஆசன நிலையில் முழங்கால்களை மடக்கக் கூடாது. ஆரம்பப் பயிற்சியில் முழுமையாக உள்ளங்கைகளை தரையில் பதிய வைத்து முழங்கால்களை நெற்றியால் தொட இயலவில்லை என்றாலும் முழங்கால்களை மடக்காமல் முன் வளைந்து முடிந்த அளவு குனிந்து செய்யவும். சூரிய நமஸ்கார இரண்டாம் மற்றும் பதினொன்றாம் நிலைகளில் பின்நோக்கி வளைவதால் இடுப்பு வலி குறையும்.

    ஆனால் மூன்று மற்றும் பத்தாம் நிலையில் முன்நோக்கி வளைவதால் இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வலியை அதிகப்படுத்தும் என்பதனால் இடுப்புவலி, இடுப்பு சந்துவாத தொந்தரவு  உள்ளவர்கள் மூன்று மற்றும் பத்தாம் நிலைகளில் முழுமையாக முன்னால் குனிந்து செய்யாமல் சிறிதளவு குனிந்து இந்த ஆசன நிலையை செய்து அடுத்த ஆசன நிலைக்கு செல்லவும். அல்லது இடுப்பு வலி குணமான பிறகு சூரிய அல்லது சந்திர நமஸ்காரத்தை செய்யவும்.

    தடைகுறிப்பு : இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம், குடல் இறக்கம் மற்றும் முதுகில் மிக அதிக அளவு தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள் : உடலிலுள்ள அனைத்து நரம்புகள், முதுகு, வயிறு மற்றும் கை, கால்களில் தசைகள், வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை அடையும். 
    நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது.
    நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. மேலும் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது.

    வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எவ்விதப் பயமுமின்றி அளவாகச் சாப்பிடலாம். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மை உள்ளது.

    வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி-3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானவை. இந்த சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தமும் குறையும். வேர்க்கடலையிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.

    அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருட்கள், தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

    வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் இதை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையை தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் அதிக அளவு சத்துகள் உள்ளன. வேர்க்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாயும் நல்ல சத்துணவு என்பது குறிப்பிடத்தக்கது. 
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு செய்து கொடுக்க தக்காளி - புதினா சாதம் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    புதினா - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
    பச்சை மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 4 பல்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    தனியே அரைக்க:

    தக்காளி - 3.

    தாளிக்க:

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டை - ஒரு துண்டு.



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வேக வைத்த கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர், புதினா-கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.

    பிறகு, தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி, புதினா சாதம் ரெடி.

    குறிப்பு: சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயே பிசுபிசுப்பான கூந்தலுக்கு காரணம்.
    தலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயே பிசுபிசுப்பான கூந்தலுக்கு காரணம். செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் எண்ணெய் கூந்தலை வெளிப்புற மாசிலிருந்தும் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும். அதுவே அளவுக்கதிகமாக இந்த எண்ணெய் சுரந்தால், கூந்தலில் பிசுபிசுப்பான நிலையை கொண்டு தரும். இதனால் பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியவை அதிகமாக ஏற்படும்.

    எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் 3 முறை கூந்தலை அலச வேண்டும். உங்கள் கூந்தல் ரொம்பவும் எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.

    கூந்தலுக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. இவை கூந்தலை பலவீனமாக்கும். முடியை வேகமாய் உதிரச் செய்யும். அதேபோல் அதிகமாய் கூந்தலை சீவுதல் கூடாது. அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.



    நீரில் கால் கப் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கபும். ஆறியபின் வடிகட்டி அந்த நீரை தலையில் தடவுங்கள். 15 நிமிடங்கள்கழித்து, தலையை அலசவும். இவ்வாறு செய்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பது குறையும்.

    15 நாட்களுக்கொரு ஒரு முறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். அதே போல் அதிகப்படியான எண்ணெய் கூந்தலில் சுரந்தால் எலுமிச்சை சாறினை தலையில் தேய்த்து அலசினாலும் கட்டுப்படும்.

    எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடம் அளிக்காதீர்கள். தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.
    ×