search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pada hastasana"

    இந்த ஆசனம் செய்வதால் கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும்.
    செய்முறை : விரிப்பில் நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.

    இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.

    பயன்கள் : தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. 
    இந்த ஆசனம் செய்து வந்தால் உடலிலுள்ள அனைத்து நரம்புகள், முதுகு, வயிறு மற்றும் கை, கால்களில் தசைகள், வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை அடையும்.
    பெயர் விளக்கம் : ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ஹஸ்த’ என்றால் உள்ளங்கைகள் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் பாதங்களின் இரண்டு பக்கத்திலும் உள்ளங்கைகளை வைத்திருப்பதால் பாத ஹஸ்தாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : சூரிய நமஸ்காரத்தின் இரண்டாம் நிலையிலிருந்து முன் வளைந்தபடி மூச்சை வெளியே விட்டு உள்ளங்கைகளை பாதங்களின் பக்கவாட்டில் தரைவிரிப்பின் மேல் வைக்கவும். முழங்கால்களை வளைக்கக் கூடாது. இப்போது தலையை வளைத்து முழங்கால்களை நெற்றியால் தொடவும்


    கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகுத் தசை முழங்கால் பகுதி மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : இந்த ஆசன நிலையில் முழங்கால்களை மடக்கக் கூடாது. ஆரம்பப் பயிற்சியில் முழுமையாக உள்ளங்கைகளை தரையில் பதிய வைத்து முழங்கால்களை நெற்றியால் தொட இயலவில்லை என்றாலும் முழங்கால்களை மடக்காமல் முன் வளைந்து முடிந்த அளவு குனிந்து செய்யவும். சூரிய நமஸ்கார இரண்டாம் மற்றும் பதினொன்றாம் நிலைகளில் பின்நோக்கி வளைவதால் இடுப்பு வலி குறையும்.

    ஆனால் மூன்று மற்றும் பத்தாம் நிலையில் முன்நோக்கி வளைவதால் இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வலியை அதிகப்படுத்தும் என்பதனால் இடுப்புவலி, இடுப்பு சந்துவாத தொந்தரவு  உள்ளவர்கள் மூன்று மற்றும் பத்தாம் நிலைகளில் முழுமையாக முன்னால் குனிந்து செய்யாமல் சிறிதளவு குனிந்து இந்த ஆசன நிலையை செய்து அடுத்த ஆசன நிலைக்கு செல்லவும். அல்லது இடுப்பு வலி குணமான பிறகு சூரிய அல்லது சந்திர நமஸ்காரத்தை செய்யவும்.

    தடைகுறிப்பு : இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம், குடல் இறக்கம் மற்றும் முதுகில் மிக அதிக அளவு தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள் : உடலிலுள்ள அனைத்து நரம்புகள், முதுகு, வயிறு மற்றும் கை, கால்களில் தசைகள், வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை அடையும். 
    ×