என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரின் செயல்பாட்டை தட்டிக்கேட்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #GovernorBanwarilalPurohit

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தமிழக உரிமையை வற்புறுத்த வேண்டும்.

    கர்நாடக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும், பிரதமரை அனுக வேண்டும், தேவையிருந்தால் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மூலமாக கிடைத்த வெற்றியை,வாய்ப்பை நழுவவிடாமல் பாதுகாக்க, அமைக்கப்பட்ட ஆணையத்தின் மூலமாக காவிரி தண்ணீரை பெற வேண்டியது தமிழக அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.



    காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளை கூட்டி கூட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் தேவையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தொடர்ந்து சட்டரீதியாகவும்,அரசு ரீதியாகவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க முயற்சி செய்ய வேண்டும்.

    கவர்னர் வி‌ஷயத்தில் கவனம் செலுத்துவதும் மக்கள் பிரச்சனை தான். அரசு செயல்பாட்டில், அரசு முடங்குகிற விதத்தில், தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முடங்குகிற விதத்தில் கவர்னர் செயல்படுவதை எதிர்கட்சி தான் கேட்க முடியும். தற்போதுள்ள தமிழக அரசுக்கு கவர்னரின் செயல்பாட்டை தட்டி கேட்கக்கூடிய தைரியம், துணிச்சல் இல்லை.

    ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது வெளி நடப்பு செய்வது ஒரு பகுதி. ஆளுங்கட்சியாய் இருப்பதினால் தமிழிசைக்கு அது தெரியாமல் இருக்கலாம். எதிர்கட்சியாக வரும்போது இவைகளைப் பற்றி அவருக்கு தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #GovernorBanwarilalPurohit

    ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால்தான் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சேலம் பசுமை வழி சாலை போடுவதற்கு மக்களிடம் கருத்துகளை கேளுங்கள் என்று அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதை அரசு கண்டு கொள்ளவில்லை. மக்களை துண்புறுத்துகிறார்கள். மக்களிடம் கருத்துகளை கேட்டால் தான் உண்மை தெரிய வரும்.

    பசுமை வழி சாலையை எதிர் பதில் எங்கள் வீரியம் குறையவில்லை. வருகின்ற 6-ந்தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தோம். போலீஸ் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம். நிச்சயமாக போராட்டம் நடக்கும்.



    கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    நீதிமன்றம் சரியாக முடிவு எடுத்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது. தமிழ்நாடு அரசு இதுவரை மக்களுக்கு என்ன தான் செய்தது. தமிழகத்தில் அரசு ஒன்று இருப்பதாக மக்கள் யாரும் கருதவில்லை. அரசாங்கம் மக்களை துன்புறுத்துவதாக மக்கள் நினைகிறார்கள். விரைவில் இந்த அரசுக்கு நல்ல முடிவு வரும்.

    90 சதவீத ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அ.தி.மு.க. ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்சி இறங்கினால் எல்லாரும் எங்களிடம் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDinakaran
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த 2009-ம் ஆண்டு தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வைகோ உள்பட 159 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார். அவருடன் வழக்கில் தொடர்புடையவர்களும் ஆஜரானார்கள். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த அன்றே இரவில் பாதிக்கப்பட்ட மக்களை நான் சென்று பார்த்தேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்பு நாங்கள் போராடியபோது எங்களை கைது செய்து பாதுகாப்பாக மறுநாள் விடுவித்தனர். ஆனால் இப்போது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றுள்ளார்கள்.

    இது திட்டமிட்ட படுகொலை. அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக செயல்படுகிறது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற சில அரசியல் தலைவர்களுக்கு அரசு தடை விதித்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்தான் ஆலையை மூடியுள்ளது.


    முன்னர் இதுபோன்ற சூழலில் சுப்ரீம் கோர்ட்டு சென்று ஆலையை திறந்து விட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு சமுதாய மக்கள் மட்டும் போராடவில்லை. எல்லா சமுதாயத்தினரும் போராடினார்கள். கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலர் கருத்து கூறியவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் பற்றி தெரிய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் மற்றும் வக்கீல் செல்வம், செங்குட்டுவன், நக்கீரன், மகாராஜன், நகர செயலாளர் முருக பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ThoothukudiFiring #MDMK #Vaiko
    சென்னை-சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார். #ChennaiSalemGreenExpressWay
    ராஜபாளையம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர். மக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு.


    அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் பிரச்சனையை தூண்டுகிறார்கள்.

    தி.மு.க.வின் முதல் வார்த்தையான திராவிடம், 2-ம் வார்த்தையான முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. வெறும் கழகம் மட்டுமே உள்ளது.

    ஜி.எஸ்.டி வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த வரியால் எதிர் பார்த்த அளவுக்கு அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது.

    ஜி.எஸ்.டி இன்னும் முழுமை அடையவில்லை. அதிகமான வரி உள்ள பொருட்களுக்கு இன்னும் வரி குறையும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜி.எஸ்.டி.க்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

    ராஜ்ய சபாவில் வாய்ப்பு கிடைத்த போது பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு குறித்து பேசினேன். வரி விலக்கு கிடைத்தால் பட்டாசு தொழில் மேம்படுவதுடன் அன்னிய செலாவணியும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressWay  #BJP #LaGanesan
    28 சதவீதம் வரி விதிக்கப்படும் 50 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விரைவில் குறைக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னையில் ஓராண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் தலைமை தாங்கினார்.

    விழாவை மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்திய போது, அனைத்து பொருட்களின் விலை உயரும், பொருட்களை தயாரிக்கும் மாநிலங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும், பாமரமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருட்களின் விலை பலமடங்கு உயரும் என பலவிதமான பிரசாரங்கள் நடந்தன.

    அவற்றை பொய்யாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வரி ஏற்றத்தாழ்வை சரி செய்தன. 200 பொருட்களுக்கு, 28 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பல முறை நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலில், பல பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாகவும், பல பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டன.

    சாதாரண வணிகர்களும் தங்களது கணக்குகளை எளிமையான முறையில் தாக்கல் செய்ய முடிந்தது. இதன் மூலம் அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் முந்தைய ஆண்டுகளை விட ஓராண்டில் கூடுதலாக கிடைத்துள்ளது. வரி வசூலிக்கும் போது நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் வரி செலுத்துவோர்கள் தானாக முன்வந்து வரி செலுத்துவார்கள். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சரக்குகளை கொண்டு செல்ல பதிவு செய்யும் இ-வே பில் குறித்து சரக்குகளை கொண்டு செல்வோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதுவரை 27 தடவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. இதில், பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் 50 பொருட்களின் மீதான வரி விரைவில் அதாவது சில வாரங்களில் குறைக்கப்படும். பிற நாடுகளை விட, நம் நாட்டு ஜி.எஸ்.டி. முறை பெரும் சாதனை படைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை வெற்றிகரமாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தமிழகத்திலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்கு பின் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதில் தமிழகமும் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. அத்துடன் மத்திய அரசிடமிருந்தும் குறைவான இழப்பீடையே பெறுகிறது’ என்றார்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்து 9 மாதங்களில், 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வருவாய் அளிக்கும் பொருட்கள். எனவே அவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர முடியாது. அதே சமயம் மத்திய அரசு இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி இழப்பு 3 சதவீதம் தான். வரும் ஆண்டுகளில் இதுவும் முற்றிலுமாக குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

    இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புதுச்சேரி மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் அஜித்குமார், தமிழக வணிக வரித்துறை ஆணையர் டி.வி.சோமநாதன், வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் கே.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜி.எஸ்.டி. ஆணையர் ராஜேஷ் சோடியா வரவேற்றார். இணை ஆணையர் மானச கங்கோத்ரி கட்டா நன்றி கூறினார்.

    ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #dinakaran #gst

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்லதிருமண விழா நடைபெற்றது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

    அம்மாவின் இணைபிரியாத தோழி சின்னம்மா. அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவர் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா இருந்தாலும் நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா கலந்து கொள்ள முடியாத நிலையில் நான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளேன் என்று கூறினார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டார்.

    பின்னர் தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அபகரித்து கொண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உல்லாசமாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளாரே. உங்கள் கருத்து? 


    பதில்:- திண்டுக்கல் சீனிவாசனை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சட்டமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது இந்த ஆட்சி கலைந்து விடும்.

    நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அப்போது அம்மா வழியில் ஆட்சி நடைபெறும். சேலம்- சென்னை 8 வழிச்சாலையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். #dinakaran #gst

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை மத்திய அரசின் திட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு வரும் போது, அதை மக்களின் நிலையிலிருந்து தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணுகியிருக்க வேண்டும்.

    பசுமைவழிச் சாலையால் தனியார் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் பயன் இல்லை; அதேநேரத்தில் இச்சாலைக்காக 7000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படவிருப்பதால் 7500 உழவர்கள் நிலங்களை இழப்பர்; 15,000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்தை ஏற்பதா, வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்திருக்க வேண்டும்.

    இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா, எதிர்ப்பு நிலவுகிறதா? என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், அதுகுறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியிருக்கலாமே? மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அம்பானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது பொதுவாக்கெடுப்பு நடத்தி தானே அத்திட்டத்தை மராட்டிய மாநில அரசு ரத்து செய்தது.

    கேரளத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படுவதில்லை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை கேரளத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட போது அம்மாநில மக்களுடன் இணைந்து அரசும் எதிர்த்து தான் முறியடித்தது.

    சுற்றுசூழலுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கோக் ஆலைக்கு பிளாச்சிமடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை மதித்து அந்த ஆலையை மூட கேரள அரசு தீர்மானித்தது. இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளம் ஆகும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் தெரியுமா?

    பசுமைவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து விட்டது. அதற்கான கோரிக்கை தமிழக அரசிடமிருந்து வர வேண்டும் என்பதால், அதற்கான அழுத்தம் தமிழக ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் பசுமைச் சாலைத் திட்டத்தை பாரத்மாலா திட்டத்தில் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுக்கிறார்.

    அடுத்த 24 மணி நேரத்தில் அக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அந்நேரத்தில் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதுகுறித்தும் நிதின்கட்கரியிடம் தான் விவாதிக்க வேண்டும்;

    ஆனால், அதை முதல்வர் செய்யவில்லை. பசுமைச் சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடும் முகவராகத் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை.

    புதிய சாலை அமைக்கப்படுவதற்கான நோக்கங்களில் நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பதும் ஒன்று என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது தான் நகைச்சுவையாகும். விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் சாலை யோரங்களில் இருந்த 3,321 மதுக்கடைகளை மூடியது.

    ஆனால், அடுத்த சில வாரங்களில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து சாலைகளில் அவசரமாக மதுக்கடைகளை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விபத்துகளை குறைப்பது குறித்தெல்லாம் பேசுவது கேலிக்கூத்தின் உச்சமாகும்.

    ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருப்பதால் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என நினைத்தால் தோல்வியடைந்து விடுவார். மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #GreenWayRoad #Ramadoss

    ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்காமல் ஜனநாயகத்தை எப்படி காக்க முடியும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 2016ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ரூ.10,000 கோடி அளவுக்கும், தி.மு.க. ரூ.6000 கோடி அளவுக்கும் பணத்தை வாரி இறைத்து தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றன.

    விதிப்படிப் பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலையே செல்லாது என ஆணையம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பணம் கொடுத்து பெற்ற வெற்றியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது.

    ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் ஆகும். தேர்தலில் பெரும் சவாலாக இருந்த படைபலம் ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், பணபலம் தான் நியாயமான, சுதந்திரமான தேர்தலுக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் சவாலாக உருவாகி உள்ளது. தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 1998-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்று வரை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

    உண்மையான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

    ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்காவிட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. தேர்தல் சீர்திருத்தங்களில் முதன்மையானது ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பது ஆகும்.

    ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்; எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் அத்தனை முறை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    10 சதவீதம் தொகுதிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள் தகுதி நீக்கப்பட்டால் அந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இவை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக, பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss

    ஸ்டாலின் மற்றும் தினகரனால் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MKStalin #ADMK

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரில் காவிரி நதிநீர் வெற்றி குறித்து நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பென்ஜமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். தீய சக்திகளை வீட்டுக்கு அனுப்பிய நாள் இந்த நாள். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தீய சக்திகளை விரட்டி ஆட்சி அமைத்த நாள். அந்த நாளில் எம்.ஜி.ஆரின் சிலையை உத்திரமேரூரில் திறந்து வைப்பது பொருத்தமான நாள். 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள உத்திரமேரூர் வருவதற்கு 4 மணி நேரம் ஆகிறது.

    இதனால் 8 வழி பசுமை சாலை வந்தால் சேலத்திற்கே 5 மணிநேரத்தில் போகும்போது 1 மணி நேரத்திற்குள் உத்திரமேரூர் வந்துவிடலாம். இப்போது இரண்டரை கோடி வாகனங்கள் உள்ளது. வரும் வருடத்தில் 5 கோடி வாகனங்கள் பெருகிவிடும். இந்த மக்கள் தொகை அடிப்படையில் வருங்கால தேவையை சிந்தித்து அமைக்கப்படுவதுதான் இந்த பசுமை வழிச்சாலை திட்டம்.

    ஒரு திட்டம் நிறைவேற்ற நிலம் எடுக்கும்போது சில பாதிப்புகள் ஏற்படும். அப்போது அந்த நில உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசின் கடமை. அதன்படி ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.9 கோடிவரை கொடுக்கப்படுகிறது.

    பொதுமக்கள் நலன்கருதி செயல்படுத்தப்படுவதுதான் இந்த திட்டம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.

    சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எனது வீட்டில் செத்துபோன நண்டை எடுத்து வந்து போராட்டம் செய்கிறார். உயிரோடு உள்ள நண்டை எடுத்து வந்தாலும் குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம்.

    ஜெயலலிதா அமைத்த இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என்று செயல்படுபவர் துரோகி. அந்த துரோகி தான் தினகரன். இப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு இந்த அரசை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுகிறார். எத்தனை தினகரன், ஸ்டாலின் வந்தாலும் இந்த இயக்கத்தை அசைக்க முடியாது.

    ஸ்டாலின் வந்தாலும், அவருடன் தினகரன் சேர்ந்தாலும் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சிதான் மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், நிர்வாகிகள் அத்திவாக்கம் செ.ரமேஷ், பிரகாஷ்பாபு, தும்பவனம் ஜீவானந்தம், நாகராஜன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தென்னேரி வரதராஜூலு உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    1995-ல் சட்டமன்றத்தில் ஆளுனர் குறித்து விவாதிக்கலாம் என்று ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். 1999-ல் தி.மு.க. ஆளுனர் மீதுள்ள அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது, ஆளுனர் குறித்து பேசவே கூடாது. சட்டமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று கூறியது தி.மு.க.தான். தற்போது ஆளுனர் குறித்து விவாதிக்க கூறினால் அது முடியவில்லை.

    அரசு நிர்வாகத்தில் எந்த தலையீடும் இல்லாமல் அவரது பணிகளை தூய்மை இந்தியா என்ற பல்வேறு திட்டங்களை பார்த்துக்கொண்டு வருகிறார். அரசியல் ரீதியாக அவரை எதிர்க்கணும், அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #ADMK

    எடப்பாடி பழனிசாமி-கவர்னர் தலைமையில் தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது என்று திருச்சி திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #tngovt #governorbanwarilalpurohit

    திருச்சி:

    மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்ல திருமண விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடை பெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களான திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன்- வந்தனா திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திருமண விழாக்களில் அரசியல் பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் நாட்டில் உள்ள தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள ஆட்சி எப்போது அப்புறப்படுத்தப்படும் என தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    ஏனென்றால் மாநில உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும், மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு கவர்னர் தலைமையிலும் என இரட்டை ஆட்சி நடக்கிறது. இதனால் மாநில உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை.

    காவிரி மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகிறார்கள். அதில் முதல்வர், துணை முதல்வர் பற்றி அமைச்சர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் காவிரி பிரச்சினையில் முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை. கொஞ்சம் பெருமூச்சு விட்டு கொள்ளலாம், அவ்வளவு தான்.

    நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பை அழிக்கும் வகையில் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அது பற்றி எங்களுக்கு கவலையில்லை என்கிறார். அவருக்கு இதில் மட்டும் கவலையில்லை. நீட் தேர்வு, ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை பாதிப்பு ஆகியவற்றை பற்றியும் கவலையில்லை. அவருக்கு கவலை எல்லாம் ஆட்சி தக்க வைப்பதில்தான் உள்ளது.

    மக்களை பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கூறுகிறார்கள். அதன்படி இந்த ஆட்சியை அகற்ற இது போன்ற திருமண விழாக்களில் பங்கேற்பவர்கள் உறுதியேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வாழ்த்தி பேசினார். முன்னாள் அமைச்சர்களும் எம்.எல். ஏ.க்களுமான கே.என். நேரு, பொன்முடி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டா லின்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வீரபாண்டி ராஜா உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி நன்றி கூறினார்.  #mkstalin #tngovt #governorbanwarilalpurohit

    மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி நீக்கம் செய்து தலைமை கழகம் அறிவித்துள்ளது. #MKStalin #DMK

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

    மதுரை மாநகர் மாவட்டம் பழங்காநத்தம் பகுதி கழக செயலாளர் ஓச்சுபாலு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவமணியும், நெல்பேட்டை பகுதி 52-வது வட்டக் கழக செயலாளர் டி.பாலா (எ) பாலசுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.ரமேஷ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.குமரன் பொறுப்பாளராகவும், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரை புகழேந்தி விடுவிக்கப்பட்டு எஸ்.கிருஷ்ண மூர்த்தி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி விடுவிக்கப்பட்டு சுதாகரன் பொறுப்பாளராகவும், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மூக்கையா விடுவிக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பொறுப்பாளராகவும், திருமங்கலம் நகர செயலாளர் டி.நாகராஜன் விடுவிக்கப்பட்டு சி.முருகன் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.போஸ் விடுவிக்கப்பட்டு எல்.எம்.பாண்டியன் பொறுப்பாளராகவும், தேனி ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி விடுவிக்கப்பட்டு எம்.சக்கரவர்த்தி பொறுப்பாளராகவும், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் விடுவிக்கப்பட்டு ஆர்.அண்ணாதுரை பொறுப்பாளராகவும், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் குமரன் விடுவிக்கப்பட்டு அணைப்பட்டி முருகேசன் பொறுப்பாளராகவும், கம்பம் நகர செயலாளர் கிங்.செல்லப்பாண்டி விடுவிக்கப்பட்டு துரை நெப்போலியன் பொறுப்பாளராகவும், பெரியகுளம் நகர பொறுப்பாளர் அபுதா கீர் விடுவிக்கப்பட்டு எஸ்.பி.முரளி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி என்ற சத்தியநாதன் விடுவிக்கப்பட்டு ஆர். எம்.கென்னடி பொறுப்பாளராகவும், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.முத்துராமலிங்கம் விடுவிக்கப்பட்டு சுப. சின்னத்துரை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. கனகராஜன் விடுவிக்கப்பட்டு ஜீவானந்தம் பொறுப்பாளராகவும், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம் விடுவிக்கப்பட்டு தி.சக்தி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை மாநகர் மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதன்படி மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு என செயல்பட்டு வரும் 2 மாவட்டங்களும் இனி மதுரை மாநகர் மாவட்டம் என ஒரே அமைப்பாக செயல்படும்.

    இவ்வாறு அமையும் மதுரை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கோ.தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக வேலுசாமி, குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, சின்னம்மாள், பொன்.மு.சேதுராமலிங்கம், ஜவஹர், ஜெயராமன், தமிழரசி, டாக்டர் சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

    தேனிமாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் கம்பம் ராமகிருஷ்னன் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.த.தியாகரன் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் கே.முத்து ராமலிங்கம் புதிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    ராதாபுரம் ஒன்றிய செயலாளர் கோ.கேசவன் விடுவிக்கப்பட்டு வி.எஸ்.ஆர் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டு முத்துப்பாண்டி என்ற பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    நான்குநேரி ஒன்றிய செயலாளர் என்.வானுமா மலை விடுவிக்கப்பட்டு ஆர்.எஸ்.சுடலைகண்ணு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுருநாதன் விடுவிக்கப்பட்டு சிவனுபாண்டி என்ற பரணி சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    குருவி குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சேர்மதுரை விடுவிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா விடுவிக்கப்பட்டு விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சூட்டுசாமி விடுவிக்கப்பட்டு அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சங்கரன்கோயில் நகர செயலாளர் சங்கரன் விடுவிக்கப்பட்டு ராஜதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் மணி விடுவிக்கப்பட்டு பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுத பெருமாள் விடுவிக்கப்பட்டு ஜெயக்குமார் பொறுப்பாளராகவும், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு கருப்பசாமி பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.வைகுண்டம் விடுவிக்கப்பட்டு கொம்பையா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    குளச்சல் நகர செயலாளர் ஆ.நசீர் விடுவிக்கப்பட்டு அப்துல்ரகீம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    திருவட்டார் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு ஜான் பிரைட் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK

    காவிரி ஆணையத்தை செயல்படுத்த தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #CauveryManagmentCommission

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    மத்திய பா.ஜ.க. அரசும், உச்சநீதி மன்றமும் இனியும் காலதாமதம் செய்யாமால் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பங்கிட்டு வழங்க வேண்டும்.


    கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதி மன்றம் செல்ல இருப்பதும், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம்.

    எனவே தமிழக அரசு இனியும் பொறுமைகாக்காமல் உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வற்புறுத்த வேண்டும்.

    மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த கர்நாடக அரசு எந்தவிதத்திலும் இடையூறாகவோ, தடங்கலாகவோ, தடையாகவோ இருக்கக் கூடாது என்பதை உறுதியாக கூற வேண்டியது மத்திய அரசின் கடமை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GKVasan #CauveryManagmentCommission

    ×