என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
    • 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.

    அதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ல் தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.

    11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் தூதர்கள்.
    • இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள கோர்ட்டில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராண்ட் தூதர்கள் தவறான அல்லது குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த வகையில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையில் இடம் வழங்க மறுப்பு தெரிவித்ததால் அமெரிக்கா வரி விதிப்பு மிரட்டல்.
    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் மிரட்டல் விடுத்திருந்திரார் டிரம்ப்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்படவில்லை. ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர புதின் சம்மதம் தெரிவிக்காததால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது. அவர்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இருக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது.

    ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு, நாளை முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா மொத்தமாக கூடுதலாக 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    வரி விதிப்பு தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரங்களில் நான்குமுறை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெலிபோன் மூலம் இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி டெலிபோனை எடுக்கவில்லை என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த நாளில், எப்போது டெலிபோன் செய்தார் என்ற தகவலை வெளியிடவில்லை.

    இந்திய சந்தையில் அமெரிக்க விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்தியா வழி விட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இந்த அழுத்தத்திற்கு அடிபணியாமல் அமெரிக்காவின் நெருக்கடியை சமாளித்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

    • ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய கப்பல், கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
    • சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும்.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஹிமகிரி, ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டன.

    இந்தக் கப்பல்களில் இருந்து சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய கப்பல், கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஹிமகிரி கப்பல் கொல்கத்தாவில் கட்டப்பட்டது. உதயகிரி மும்பையில் கட்டப்பட்டுள்ளது.

    நாட்டுக்கு அர்ப்பணிக்கும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

    • ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
    • ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி ஆகஸ்ட் 6 அன்று இந்திய பொருட்கள் மீது அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த புதிய வரிவிதிப்பு, நாளை(ஆகஸ்ட் 27) அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    • மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கினார்.
    • டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து அறிவுரை கூற வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், TRB ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "ஆளுநர், அண்ணாமலை என்று சிறப்பு விருத்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அங்கு விருத்தினராக வருபவர்களுக்கு மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர் மரியாதை செய்ய வேண்டிய கடமை. அப்போது தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பராபட்சமாக நடந்து கொள்ள கூடாது என அறிவுரை கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
    • இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது.

    ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டது.

    அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இதன் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது.

    பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    முன்னதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும்.
    • இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

    சித்தார்த் 40-வது திரைப்படமாக வெளியான 3 BHK மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

    இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும். இப்படத்தை பார்த்து பல்வேறு பிரபலங்கள் பாராட்டினார். குறிப்பாக நடிகர் சிம்பு, இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.

    இந்நிலையில், 3 BHK படம் பார்த்து ரசித்ததை Reddit மூலம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பகிர்ந்துள்ளார்.

    இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், "நன்றி சச்சின் சார்... நீங்கள் தான் என் சிறுவயது ஹீரோ. இந்த வாழ்த்து, எங்க படத்துக்கு பெரிய அங்கீகாரம்!" என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    • நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும்.
    • கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.

    பிரதமர் மோடி, அவரின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல்வெறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மோடிக்கு (தனக்கு) விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.

    காங்கிரஸ் 60 முதல் 65 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. அப்போது நாடு மற்ற நாடுகளை சார்ந்திருந்தது. இது ஊழலை இறக்குமதி செய்யவதற்காகத்தான்.

    நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.

    லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ரஷியாவின் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிடில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

    • கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் அமரன் படத்திற்கு விருது.
    • 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.

    கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.

    இந்நிலையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றுள்ளது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு கேரள அமைச்சர் வாசவனிடம் விருதை பெற்றுக்கொண்டார்.

    • Snatch முறையில் 84 கிலோ தூக்கினார்.
    • clean and jerk முறையில் 109 கிலோ தூக்கினார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் மீரா பாய் மொத்தமாக 193 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றார். ஸ்னட்ச் முறையில் 84 கிலோவும், க்ளீன் மற்றும் ஜெர்க் முறையில் 109 கிலோவும் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப்ஸ் சாதனையும் படைத்தார்.

    இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார். மலேசிய வீராங்கனை (161 கிலோ) வெள்ளி்ப் பதக்கமும், வேல்ஸ் வீராங்கனை (150 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றனர். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருநது, 48 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.

    இவர் உலக சாம்பியன்ஷிப் டைட்டில் மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ளார்.

    • நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

    அதன்படி, நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளது.

    இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.

    ×