என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காந்திமதி அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள கணபதி சிலை அருகே உள்ள தூணில் சூரிய வெளிச்சம் படர்ந்து சூலாயுதம் போல் காட்சியளிக்கிறது.
    புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் வீற்றிருக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள கணபதி சிலை அருகே உள்ள தூணில் சூரிய வெளிச்சம் படர்ந்து சூலாயுதம் போல் காட்சியளிக்கிறது. இந்த காட்சிகள் தற்போது நெல்லை மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, இது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். ஆனால் யாரோ ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கலாம் என்றனர்.
    கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ் சவுந் தரராஜன், துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்க கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

    .ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

    தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். வருகிற 17- ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வேளாங்கண்ணிக்கு மாதா பேராலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஏப்ரல் 18-ந் தேதி முதல் 22 -ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனையும் நடக்கிறது.
    நீடாமங்கலம் :

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில்(ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) உள்ளது.  திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா 14-ந்(வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18-ந் தேதி முதல் 22 -ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனையும் நடக்கிறது.

    குருபெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தால் ஆன பந்தல் அமைக்கப்படுகிறது. 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்படுகிறது. அடிப்படை வசதிகளை ஆலங்குடி ஊராட்சி  நிர்வாகம் செய்து வருகிறது.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் அறநிலைய உதவிஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதையும் படிக்கலாம்...வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும்... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களும்...
    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சித்திரை திருவிழாவால் விழாக்கோலத்தில் மதுரை நகரம் காட்சி தருகிறது.

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர்.  ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில்தான் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழசித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும் வகையில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா, அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது.

    முதலில் காப்பு கட்டிய விக்ரம் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். அப்போது இரவு 8.30 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் வழங்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்பு மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர்.

    மதுரையில் நேற்று  மீனாட்சியை பட்டாபிஷேக திருக்கோலத்தில் காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதன் மூலம் மதுரையில் நேற்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

    பட்டத்து அரசியான மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் திருவிளையாடலை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (14-ந் தேதி) மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை நகரமும், கோவிலை சுற்றி உள்ள வீதிகளும் விழாக்கோலம் பூண்டு உள்ளன.  திருக்கல்யாண மேடை மட்டும் ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

    திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கானோர் நேரில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் தரிசன கட்டண டிக்கெட் பெற்ற 6 ஆயிரம் பேர் வடக்கு கோபுரம் வழியாகவும், மற்ற பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும்  அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். தற்போது விழா வழக்கம் போல் விமரிசையாக நடந்து வருவதால் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கவும் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதே போல் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. நாளை, மாலையில் கள்ளழகர் மதுரை புறப்பாடும், அதற்கு மறுநாள் எதிர்சேவையும், 16-ந் தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.

    இதையும் படிக்கலாம்...அஷ்டமி, நவமியில் புது முயற்சி செய்யலாமா?
    வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
    வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு உரியவை. இந்த நாளில் பொதுவாகவே தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் பிரதோஷத்தோடு சேர்ந்துவந்தால் அந்த நாள் மிகவும் சிறப்புவாய்ந்தது. வியாழக்கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்துவருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார்.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.

    நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.
    திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு 3 நாட்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்த உள்ளது.
    திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நிறைவடையும் வகையில் தேவஸ்தானம் வருடாந்திர உற்சவத்தை நடத்தி வருகிறது.

    அதன்படி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 14 முதல் 16-ந் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது.

    இந்த 3 நாட்களும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்த உள்ளது.

    இதையொட்டி வருகிற 14, 15, 16ந் தேதிகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார, சேவை மற்றும் நிஜபாத தரிசனம் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளன.
    முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஞானவேலை, பக்தர்கள் வழிபாடு செய்து வந்தால், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் அவர்களை நெருங்காது.
    சிவபெருமானிடம் இருந்து பல்வேறு வரங்களைப் பெற்ற சூரபதுமனும், அவரது தம்பிகள் தாருகாசுரன், சிங்கமுகன் ஆகியோரும், தேவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். ஆனால் சூரபதுமனும், அவனது சகோதரர்களும், ‘சிவனுக்கு நிகரான சக்தி படைத்தவரால் மட்டுமே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றிருந்தனர்.

    இதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தன் சக்தியாக, ஆறுமுகப்பெருமானை உருவாக்கினார். அவர் அவதரித்த தினம் ‘வைகாசி விசாகம்.’ அவர், சூரபதுமர்களை சம்ஹாரம் செய்தது, ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அதுதான் ‘கந்தசஷ்டி பெருவிழா’வாக கொண்டாடப்படுகிறது. சூரபதுமர்களை சம்ஹாரம் செய்வதற்காக, பார்வதிதேவி ஞானவேலை, முருகப்பெருமானிடம் கொடுத்த தினம் ‘தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது.

    முருகப்பெருமானிடம் சக்திதேவி, ஞானவேலை வழங்கிய இடமாக பழனி தலத்தை புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஞானவேலை, பக்தர்கள் வழிபாடு செய்து வந்தால், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் அவர்களை நெருங்காது.

    அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

    தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

    ஜீவகாருண்யம் என்னும் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது பற்றி வலியுறுத்திய வள்ளலார், ஜோதியில் கலந்த தினம் ‘தைப்பூசம்’ ஆகும். இந்த நாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெறும்.
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இந்த ஸ்லோகத்தை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
    வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்
    ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
    வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
    அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்
    நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்
    கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
    வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
    சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
    வைகுண்டம் து(thu)ஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்
    த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
    ராமம் ராமம் ஹயக்ரீவம் பீ(B)மம் ரௌத்ரம் ப(B)வோத்ப(B)வம்
    ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்

    தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்
    வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
    ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்
    ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்
    ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்
    மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்
    ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்
    ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்
    ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்
    யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்
    ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்
    இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்
    வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர:
    ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
    சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச
    கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர:
    அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ:
    விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.
    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர்.
    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவாதி தேவா்களை போரில் வென்று கடைசியாக சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.

    அவ்வாறு மதுரை நாட்டை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும்.

    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இன்று இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும்.

    அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இதையும் படிக்கலாம்...அஷ்டமி, நவமியில் புது முயற்சி செய்யலாமா?
    அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.
    சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வேப்ப மரம் உள்ளது. அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.

    தலவரலாறு

    பண்டைய காலத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த வணிகர் முத்துச்செட்டியார் தங்களது பகுதியில் விளைந்த விளைபொருட்களை மதுரையில் விற்பனை செய்தார். மதுரை மீனாட்சியம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். குழந்தை பாக்கியம் இல்லாத இவர், மதுரைக்கு வரும்போது மீனாட்சியம்மனை தரிசித்து குழந்தை பேறு கிடைக்க வேண்டி வந்தார். ஒரு முறை அவர் மதுரையில் விளைபொருட்களை விற்று விட்டு ராமநாதபுரத்திற்கு குதிரையில் வந்து கொண்டிருந்தார். வழியில் அழுதவாறு நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியை பார்த்த அவர், அவளிடம் விசாரித்தார். சிறுமி தனது பெயர் முத்துமாரி என்றும், வழிதவறி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை அவர் தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்பினார்.

    வழியில் இருந்த ஒரு குளத்தில் குளிக்க முத்து செட்டியார் விரும்பினார். சிறுமியை கரையில் அமரும்படி தெரிவித்த அவர், குளத்தில் இறங்கி குளித்தார். சிறிது நேரம் கழித்து அவர் கரைக்கு வந்தபோது, அங்கிருந்த சிறுமி மாயமானது தெரியவந்தது. மனமுடைந்த நிலையில் வீடு திரும்பிய அவர் நடந்தது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், கள்ளிக்காட்டு பகுதியில் நானே சிறுமியாக வந்தேன். அப்பகுதியில் எனது பாதச்சுவடு பதிந்துள்ளது. அதனை பிடிமண்ணாக எடுத்து எனக்கு கோயில் எழுப்பி வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பேன் என்று கூறி மறைந்தார். இதன்படி முத்துசெட்டியார் பிடிமண் எடுத்து அம்மனுக்கு சிலை செய்து, கோயில் எழுப்பினார் என்பது புராணம்.  

    இக்கோயிலில் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா விமர்சையாக நடக்கிறது. முக்கிய விழாவாக பிடிமண்  வழிபாடு நடக்கிறது. விழாவுக்கு முந்தைய நாள் இரவில் பிடிமண் எடுத்து  அம்மனாக பாவித்து பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பால்குடம்,  தீர்த்தவாரி, பூக்குழி வைபவம் என 10 நாட்களும் திருவிழா களை கட்டுகிறது. இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு முதலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் மகசூல் பெருகும் என்பது நம்பிக்கை. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வந்து தீர்த்தம் பெறுகின்றனர். தீர்த்தத்தை பருகுவதால் அம்மை நோய் விரைவில் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    திருமண வரம் வேண்டும் இளம்பெண்கள், தாலிப்பொட்டை அம்மன் காலடியில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் அம்மனை வணங்கி, கோயிலில் உள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு அங்கபிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத்தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் ஆயிரம்கண் பானை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் வழிபடுகின்றனர்.

    கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கிறது.
    சித்திரை திருவிழாவுக்கு மகுடம் சூட்டும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    சித்திரை திருவிழா என்றாலே மதுரை தான் நினைவுக்கு வரும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மீனாட்சி தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவுக்கு மகுடம் சூட்டும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) மாலையில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து 14-ந்தேதி மாலையில் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். 16-ந் தேதி காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    இதையொட்டி நேற்று காலையில் அழகர்கோவிலில் இருந்து 3 வாகனங்களும் தனித்தனியே லாரி போன்ற வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
    இதில் வைகையில் இறங்குவதற்காக தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்காக கருடவாகனமும், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனமும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த 3 வாகனங்களும் மதுரை சித்திரை திருவிழா காலங்களில் மட்டும் பயன்படுத்தப்படும். அதன்பிறகு மீண்டும் அழகர்கோவிலுக்கு திரும்ப கொண்டு செல்லப்படும்.
    ×