search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சிவலிங்க வழிபாடு
    X
    சிவலிங்க வழிபாடு

    வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும்... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களும்...

    வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
    வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு உரியவை. இந்த நாளில் பொதுவாகவே தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் பிரதோஷத்தோடு சேர்ந்துவந்தால் அந்த நாள் மிகவும் சிறப்புவாய்ந்தது. வியாழக்கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்துவருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார்.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.

    நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.
    Next Story
    ×