என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும்போது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கிறது. வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
    ராமர் பிறந்தது நவமி திதி என்பதால் ராமநவமி என்று அழைக்கப்படுகிறது. நாம் நமது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது போல இறைவன் பிறந்த நாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினால் இனிய வாழ்க்கை நமக்கு அமையும். எல்லாநாட்களும் நல்ல நாட்களாக மாறும்.

    அப்படிப்பட்ட தெய்வத்தின் பிறந்த நாள் நவமியாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும்போது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கிறது. வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

    இதை அறிந்த அஷ்டமி, நவமி ஆகிய 2 திதிகளும் மிகவும் கவலைப்பட்டு இறைவனிடம் முறையிட்டதாம். உடனே இறைவன் உங்கள் இருவரையும் கொண்டாடும் விதத்தில் ஒரு செயல் செய்கின்றேன் என்று சொல்லி அஷ்டமியன்று கண்ணன் அவதாரம் எடுத்த நாளாக அமைத்தார். நவமியன்று ராமர் அவதாரம் செய்த நாளாக அமைத்தார்.

    இந்த 2 திதிகளும் சந்தோஷப்பட்டன. நம்மை மக்கள் கொண்டாட இறைவன் அவதரித்த நாளாக மாற்றிவிட்டதை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன. எனவே நாம் 2 திதிகளையும் ஒதுக்க வேண்டியதில்லை.

    அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அன்று கண்ணபிரானை வணங்கிய பிறகுகாரியத்தை தொடங்கலாம். அதே போல நவமி திதியில் ஒருகாரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் ராமபிரான்,சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு காரியத்தை செய்யலாம்.

    திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அஷ்டமி, நவமி நாட்களை தேர்ந்தெடுக்காவிட்டாலும் நடைமுறையில் செய்யும் மற்ற காரியங்களுக்கு அந்தத் திதிக்குரிய தெய்வங்களை வழிபட்ட பிறகு காரியத்தை தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவத்தில் நீங்கள் உணரலாம்.

    அனுமனை வழிபடுகிறபோது அவருக்கு வெற்றிலைமாலை அணிவித்தால் வெற்றி கிடைக்கும். துளசி மாலை அணிவித்தால் துயரம் விலகும். ராமஜெயம் மாலை அணிவித்தால் சகலமும் ஜெயமாகும். சனி ஆதிக்கம் இருப்பவர்கள் அனுமனை வழிபட்டால் தடைகள் அகலும். தனவரவும் திருப்தி தரும்.
    கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.
    “வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்” (ஏசாயா 45:11).

    வரும் காலம் எப்படி இருக்குமோ? என் குடும்பம் எப்படி செல்லுமோ? என் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வரும்காலம் ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது.

    வேதம் சொல்லுகிறது “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்’’ (தானி. 2:22).

    கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.

    பாபிலோன் ராஜாவுக்கு முன்பு தானியேல் சொன்னார்: “தேவன் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்’’ (தானி. 2:21).

    அந்த அருமை ஆண்டவர் உங்களைப் பார்த்து, நீங்கள் எனக்கு கட்டளையிடுங்கள் என்று சொல்லுகிறார். சற்று சிந்தித்துப் பாருங்கள். அண்டசராசரங்களையும் ஜீவராசிகளையும் படைத்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் இயங்க வைத்திருக்கும் ஆண்டவருக்கு நீங்கள் எப்படி கட்டளையிடுவது. அது தான் நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை. அவர் உங்களுக்கு பிதா என்கிற பாசம். உங்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலுள்ள ஐக்கியமே அந்த சிலாக்கியத்தை ஏற்படுத்துகிறது.

    கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அவருடைய குடும்பத்தில் வந்து சேரும்போது கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவராக இருக்கிறார்.

    கர்த்தருக்கு நீங்கள் கட்டளையிடும்படிதான் அவர் உங்களுக்கு அதிகாரங்களையும் ஆளுகையையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். நோய்களுக்கு நீங்கள் கட்டளையிடும் போது அவைகள் நீங்குகிறது. அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிடும் போது அவைகள் ஓடி மறைகிறது. பொல்லாத மனுஷருக்கு கட்டளையிடும் போது அவர்கள் மறைந்து போகிறார்கள். திமிர்வாதக்காரனை நோக்கி நீ உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னால் அவன் நடந்து போவான்.

    பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களுக்குப் பாராட்டின அவருடைய கிருபைகளை எல்லாம் எண்ணிப்பாருங்கள். அவருடைய குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பீர்களாக. நீங்கள் அவரிடத்தில் ஜெபிப்பதும், அவர் உங்களுக்குப் பதிலளிப்பதும், உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை எல்லாம் அவர் உங்களுக்கு நிறைவேற்றித் தருவதும் எத்தனை பாக்கியமான காரியம்!

    “நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்’’ (1 சாமு.12:24).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
    மதுரையில் பெய்த மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். மாசி வீதிகளில் உலா வராததால் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் 4 மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் காலை, இரவு என இருவேளையும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனை காண மாசி வீதிகளில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
     
    இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் 7-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு சுந்தரேசுவரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்கள்.

    பின்னர் அவர்கள் வீதி உலாவிற்கு தயாரான போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சிறிது நேரம் அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் முன்பு சுவாமி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுவாமி வருகைக்காக பக்தர்களும் மாசி வீதியில் கூடியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.

    அதை தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அங்கேயே சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா வருவது தடை செய்யப்பட்டதால் பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதற்கிடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கல்யாணம் நடைபெறும் இடங்கள், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது.
    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்
    பக்ரீத் பண்டிகை என்பது தியாகத் திருநாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராஹிம் அவர்களை இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான்.

    அவர் மக்களிடம் இறைவன் ஒருவன் என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.

    அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர் இறைவனிடம் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தார்.

    அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இறைவன் அவருக்கு ஓர் அற்புத ஆண் குழந்தையை (இஸ்மாயில்) அளித்தான்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் இப்ராஹிம் நபி அவர்கள் இறைவனுக்கு முழுமையாக அடிபணிகிறாரா என்பதை சோதிப்பதற்காக, அவர் மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுமாறு அவர்களின் கனவில் இறைவன் கூறினார்.

    இறைவனிற்கு கட்டுப்பட்டு தன் மகனிடம் உன்னை அறுத்து பலியிடுமாறு இறைவன் எனக்கு கட்டளையிட்டான் என்று கூறினார். இறைவன் கட்டளை என்றால் அதை நிறைவேற்றுங்கள் என்று இஸ்மாயில் கூறினார்.

    இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு பலியிட சென்றார். தன் ஆசை மகனின் கழுத்தை அறுத்தார். ஆனால் கழுத்து அறுபடவில்லை.

    இப்ராஹிம் நபி இறைவனின் சொல்லுக்கு முழுமையாக கட்டுப்பட்டார் என்பதை இறைவன் ஏற்றுக் கொண்டார்.

    இஸ்மாயிலை அறுப்பதற்கு பதிலாக வானவர் ஜிப்ரில் மூலம் ஓர் ஆட்டை வானத்தில் இருந்து கொடுத்து அதை அறுத்து பலியிட செய்தார்.

    அதன் நினைவாக பக்ரீத் பண்டிகை மூலம் ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் ஆட்டை அறுத்து ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிகழ்வுக்கு பெயரே ஹஜ்ஜீப் பெருநாள் (பக்ரீத் தியாகத் திருநாள்).

    இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன் என்று நாவளவில் சொல்வது மிகவும் எளிது, அதை செயல்படுத்துவது மிகவும் கடினம்.

    தன் மகன் என்றும் பாராமல் இறைவன் சொன்ன கட்டளையை ஏற்று தன் மகனை உடனடியாக அறுக்கத் துணிந்த மாமனிதர் இப்ராஹிம் நபி.

    இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்.

     ப.முஹம்மது ரபீக்
    மதுரை மாநகரில் தொன்று தொட்டு நடந்து வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16-ந் தேதி நடக்கிறது. அன்று ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்
    மதுரையின் முத்திரை பதிக்கும் மீனாட்சி சித்திரை திருவிழா கடந்த 5ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை மாசி வீதிகளில் நடைபெறும் சுவாமி-அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 14-ந் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா முடிவுறும் தருவாயில் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 14-ந் தேதி கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.

    மதுரை மாநகரில் தொன்று தொட்டு நடந்து வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16-ந் தேதி நடக்கிறது. அன்று ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதன்பின் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியபின் அன்றைய இரவு வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். அப்போது வண்டியூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் தேனூர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் பராமரிப்புகள் இல்லாததாலும், வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இதனால் இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    இந்நிலையில் அரசு உத்தரவுப்படி வண்டியூர் தேனூர் மண்டபம் ரூ‌ 40 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கள்ளழகரை எழுந்தருளச் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி கோவில் இணை ஆணையாளர் அனிதா தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனூர் மண்டபத்தில் உறுதித் தன்மையை ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பரிட்சார்த்த முறையில் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் கருட வாகனம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏற்றி இறக்கி பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த பரீட்சார்த்த முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து வருகிற 17-ந் தேதி தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    62 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 2-ம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்ற போதிலும் அதில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவானது வருகிற 22-ந்தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து இரவு 8 மணிக்கு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு வாகனமாக அதாவது பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேச வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடாகி வீதிஉலா கண்டருளுகிறார்.

    இப்படி 9 நாட்கள் முடிந்து 10 ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
    ஏப்ரல் மாதம் 12-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 18-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    12-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சித்தயோகம்
    * சர்வ ஏகாதசி
    * சமயபுரம்மாரியம்மன் பூத வாகனத்தில் வீதியுலா
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
    * திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்: உத்திராடம்

    13-ம் தேதி புதன் கிழமை :

    * வாமன துவாதசி
    * மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக்குவிஜயம் செய்தருளல்
    * சமயபுரம் மாரியம்மன் வீதியுலா
    * சந்திராஷ்டமம்: திருவோணம்

    14-ம் தேதி வியாழக்கிழமை:

    * தமிழ் வருடப்பிறப்பு
    * பிரதோஷம்
    * மகாவீர் ஜெயந்தி
    * பெரிய வியாழன்
    * மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
    * சந்திராஷ்டமம்: அவிட்டம்

    15-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * மதன சதுர்த்தசி
    * மதுரை மீனாட்சி சொக்கர் ரதோற்சவம்
    * அழகர்கோவில் கள்ளழகர் தள்ளாகுலத்தில் எதிர்சேவை
    * சுபமுகூர்த்தம்
    * புனித வெள்ளி
    * சந்திராஷ்டமம்: சதயம்

    16-ம் தேதி சனிக்கிழமை:

    * சித்ரா பௌர்ணமி
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை எழுந்தருளல்
    * பழனி ஆண்டவர் வெள்ளி ரத காட்சி.
    * சந்திராஷ்டமம்: பூரட்டாதி

    17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:

    * சித்தயோகம்
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சமருளுதல்
    * சென்னை கேசவ பெருமாள் ஹம்ஸ் வாகன பவனி
    * ஸ்ரீவில்லிபுத்தூ பெரியாழ்வார் புறப்பாடு
    * ஈஸ்டர் டே
    * சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

    18-ம் தேதி திங்கட்கிழமை:

    * திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கருட வாகன பவனி வரும் காட்சி
    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம்: ரேவதி
    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 18-ம் தேதி 9-ம் நாள் திருவிழா அன்று சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த

    ஆண்டுக்கான விழா கடந்த 9ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி விழா கொடியேற்றம் நடந்தது. விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி,

    சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு படி சட்டத்தில் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2ம் நாள் பல்லக்கில் சுவாமி வீதிஉலா மற்றும் இடும்பன் வாக-னத்தில் சுவாமி வீதிஉலாவும், தொடர்ந்து பூத, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்தில் சப்பரத்தில் பஞ்சமூர்த்தி வீதியுலா, தொடர்ந்து யானை வாகனம், காமதேனு வாக-னத்தில் சுவாமி வீதி உலா, வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா மற்றும் வெள்ளிகுதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வாக வருகிற 18-ம் தேதி 9-ம் நாள் திருவிழா அன்று சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மறுநாள் மதியம் தீர்த்தவாரியும் இரவு அவரோகணம் திக்விதர்சனம்

    நிகழ்ச்சியின் நிறைவாக வருகிற 20-ம் தேதி சித்திரை திருவிழா முடிந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம், சுவாமிமலை சாலியர் பொது மேனேஜிங் டிரஸ்டி செந்தில்வேலன் மற்றும் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
    எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் அருள்புரிந்தாலும் சிதம்பரம் தலத்தில் அவர் நம் ஒவ்வொருவரின் ஆத்மாவையும் மேம்படுத்தும் இறைவனாகத் திகழ்கிறார்.
    தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் 274 கோவில்கள் பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.
    7, 8-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இந்த 274 ஆலயங்கள் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள சிவபெருமான் பற்றியும் தேவாரப் பதிகங்கள் இயற்றியுள்ளனர். இந்த சிவதலங்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறப்புப் பெற்றவை.
    இந்த சிவதலங்களில் முதன்மையானது என்ற பெருமையை சிதம்பரம் நடராஜர் ஆலயம் பெற்றுள்ளது. பஞ்சப்பூத தலங்களில் சிதம்பரம் தலம் ஆகாய தலமாக உள்ளது.

    ஈசன் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்த போது, முதலில் ஆகாயம்தான் தோன்றியது. அதன்பிறகே காற்று, நீர், நிலம், நெருப்பு தோன்றின. எனவே சிதம்பரம் முதல் தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. சிவவழிபாட்டை தொடங்குபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பார்கள். இது மட்டுமல்ல கோவில் என்றாலே அது சிதம்பரம் தலத்தைத்தான் குறிக்கும் என்பார்கள்.

    சிதம்பரம் என்றதும் நமக்கு நடராஜர் பளீரென நினைவுக்கு வருவார். ஒரு காலை தூக்கி நாட்டிய மாடும் நடராஜரின் உருவமேனி வித்தியாசமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராதது. உலகை ஆளும் சிவபெருமான் 25 விதமான உருவ மேனியைக் கொண்டவர். இந்த உருவங்களில் முதன்மையாகக் கருதப்படுவது நடராஜர் வடிவமாகும். பக்தர்கள் அதிகம் விரும்புவதும் இந்த வடிவத்தைத்தான்.

    எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் அருள்புரிந்தாலும் சிதம்பரம் தலத்தில் அவர் நம் ஒவ்வொருவரின் ஆத்மாவையும் மேம்படுத்தும் இறைவனாகத் திகழ்கிறார். அதனால்தான் ‘‘சிதம்பரம் தரிசிக்க முக்தி’’ என்கிறார்கள்.

    சித் எனும் ஞானமும், அம்பரம் எனும் ஆகாசமும் இணைந்தே ‘‘ஞானாகாசம்’’ எனும் சிதம்பரம் ஆகியது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடி உள்ளார். அவர் ஆடலால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று சிவனடியார்கள் கூறுகிறார்கள்.

    இதை உறுதிபடுத்துவது போல அமெரிக்க பெண் விஞ்ஞானி ஒருவரின் ஆய்வு முடிவு இருந்தது. இந்த உலகின் மையப்புள்ளி எது என்று அவர் கடும் ஆராய்ச்சிகள் செய்து முடித்த போது, அந்த மையப்புள்ளி சிதம்பரம் தலத்தில் கருவறையில் உள்ள நடராஜரின் காலடிக்குள் இருப்பது தெரிந்தது. இப்படி எண்ணற்ற ரகசியங்கள் சிதம்பரம் தலத்தில் புதைந்து கிடக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சிதம்பரம் ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும் ரகசியம் நிறைந்ததாக உள்ளது.

    உலகத் தொழில் ஐந்தினையும் குறித்து உயர்ந்த தோற்றமே நடராஜரின் திருவுருவமாகும். சிவ பெருமான் ஆன்மாக்களின் இரு வினைகளையும் தாமே ஏற்று அவைகளைப் போக்கி, முத்தி அளிக்க வேண்டி தனு, கரண, புவன யோகங்களை அளித்துள்ளான். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்து தொழில்களையும் அப்பெருமான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறான். இந்த ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே நடராஜரின் திருவுருவமாகும். ஐந்தொழில் புரியும் நடனம் பஞ்ச கிருத்திய நடனம் என போற்றப்படுகிறது.

    நடராஜர் நான்கு திருக் கரங்களைக் கொண்டிருக்கிறார். ஒரு கரத்தில் தமருகமும், ஒரு கரத்தில் அனலும், ஏந்தி ஒரு கரம் அபயம் அளிக்க அதற்கு நேரான இடக்கரம் கீழ்நோக்கிச் சாய்ந்திருக்க வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி அவிர்சடையுடன் நடனம் ஆடுகிறார்.

    உலக உயிர்களின் தோற்றம் தமருக ஒலியில் உள்ளது. அபயமளிக்கும் கரம் காத்தல் தொழில் புரிகிறது. அனலேந்திய கரம் அழித்தல் தொழி லுக்கு உரியது. ஊன்றியுள்ள திருப்பாதம் மறைத் தலையும் உயர்த்திய திருப்பாதம் அருளையும் குறிக்கிறது. சிதம்பரம் சென்று வழிபடுகின்றவர்களுக்கு ஆனந்தமயமான வளமான பொன் பொருள் மிக்க வாழ்வு கிடைக்கும். வானோங்கும் புகழ் சேரும். மீண்டும் வந்து பிறவாத பேரின்ப முக்தியும் உண்டாகும். பசி பகை போன்றவை விலகும். மெய்ஞானம் உண்டாகும். எண்ணிய எண்ணம் ஈடேறும்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர். இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக் கூத்து காண விரும்பினார்கள். பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர். தில்லையம்பலத்தை பொன்னம் பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர். திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார். ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார். ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்தி பாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள். லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார். இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.
    மாணிக்கவாசகர் சிவபெருமானின் கோவில்களுக்குச் சென்று அவரை பாடி மகிழ்கிறார். அவைகள் திருவாசமாக தொகுக்கப்பட்டு பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.
    சிவமும் சக்தியும் சேர்ந்ததுதான் உலகம் என்பார்கள். சக்தி தவமிருந்து சிவத்துடன் ஒடுங்கிய நாள் ஆருத்ரா தரிசன நாளாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மகாதீபமாக சிவன் தோன்றிய நாளில் இருந்து சக்தி, ஜோதியை நோக்கி தவமிருந்து சிவனிடம் இடப்பாகம் பெற்று அவருடன் ஒடுங்கும் நாள்‌ஆருத்ரா தரிசன நாளாகும்.

    அன்றுதான் உலகில் உயிர்கள் தோன்றி பிரபஞ்சமானது. ஆண், பெண் என உயிரினங்கள் தோன்றி உலகம் செயல்பட தொடங்கியது என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும் பெண்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். ஆருத்ரா தரிசனம் வரை இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். பெண்கள் நோன்பு இருப்பதை தெரிவிக்கும் வகையில் தான் திருவெம்பாவை பாடல்களை மாணிக்கவாசகர்.திருப்பள்ளி யெழுச்சி என்றழைக்கப்படும் அந்த பாடல்கள் அடி அண்ணாமலை பகுதியிலிருந்து மாணிக்கவாசகர் இயற்றியவையாகும்.

    அவர் தங்கியிருந்த இடத்தில் தற்போது மாணிக்கவாசகர் கோவில் அமைந்துள்ளது. சிவ புராணம் உள்ளிட்ட மனதை உருக்கும் பாடல்களைப் பாடியவர் மாணிக்கவாசகர். அவரை திருவாதவூரார் என்று அழைப்பார்கள். மந்திரியாக இருந்த அவர் சிவனால் ஆட்கொள்ளப்பட்டு குதிரை வாங்க கொடுக்கப்பட்ட பொற்காசுகளை அறந்தாங்கி அருகில் உள்ள திருப்பெருந்துறை கோவில் திருப்பணிக்கு செலவு செய்து விடுகிறார்.

    இதனால் அரச தண்டனைக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டபோது சிவன் நரிகளை பரிகளாக்கி திருவிளையாடல் செய்தார். இந்த உண்மைகள் பின்னர் தெரியவந்ததும் அரசன், மாணிக்க வாசகரை மன்னித்து விடுகிறார். அதன் பின்னர் மாணிக்கவாசகர் சிவபெருமானின் கோவில்களுக்குச் சென்று அவரை பாடி மகிழ்கிறார். அவைகள் திருவாசமாக தொகுக்கப்பட்டு பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன. மாணிக்கவாசகர் பாடல்களைச் சொல்ல, அவைகளை சிவன் எழுதியதாக வரலாறு உள்ளது.

    திருவாசகம் படிப்பவர் மனதை உருக்கும் ஆற்றல் பெற்றது. எனவே திருவாசகத்திற்கு உருகாதார் ஓரு வாசகத்திற்கும் உருகார் என்ற முதுமொழி ஏற்பட்டது.
    திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்திய நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். முன்னதாக மாணிக்க வாசகர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அப்போது மாணிக்க வாசகர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆருத்ரா தரிசன தினத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் முடிவடைந்ததும் மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்படும்.

    நடராஜரின் நடன கோலத்தை மாணிக்கவாசகர் கண்டு மகிழ்ந்த படி வருவார். திருவண்ணாமலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதன் பின்னர் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாடவீதிகளில் உலா வருவார். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். அப்போது பக்தர்கள் புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபடுவார்கள்.

    திருமஞ்சன கோபுரம் தெற்கு வாசல் வழியாக நடராஜர் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருவாதிரை நாளில் மட்டுமே அந்த வழியாக வருவார். மற்ற திருவிழா நாட்களில் திட்டி வாசல் வழியாகத்தான் வெளியில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.
    திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும்.

    சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் வீரராகவர் பிரதிஷ்டை தினம் என்பதால் அன்று அவதார தினமாக கொண்டாப்படுகிறது.

    கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு தற்போது சித்திரை மாதத்தில் இரண்டு முறை சித்திரை நட்சத்திரம் வருகிற 16-ந் தேதி, அடுத்த மாதம் 14-ந் தேதி வருகிறது.

    இதில் சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.

    லட்சார்ச்சனை காலை 5.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

    இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு திரு மஞ்சனம், மாலை உற்சவர் வீரராகவப்பெருமாள் ராஜவீதி புறப்பாடு நடைபெறும்.

    சித்திரை மாத பிரமோற்சவ விழா மே மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் வெவ்வேறு வாகனத்தில் வீரராகவப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை மாத இறுதியில் பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான வருகிற 14-ந் தேதி சித்திரை நட்சத்திரத்தில் காலை 10.30 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா வழக்கம்போல் நடத்தப்படவில்லை. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
    மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். விழா தொடங்கியதில் இருந்தே மதுரை விழாக்கோலம் பூண்டுவிடும். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெறும். இதில் பக்தர்கள், சுவாமி வேடமணிந்த சிறுவர்-சிறுமிகள் என ஏராளமானோர் அணி வகுத்து செல்வார்கள்.

    மேலும் பல்வேறு வேடமணிந்த சிறுமிகள் கோலாட்டம் ஆடிய படியும், பாட்டு பாடியபடியும் செல்வார்கள். இதனைக் காண மதுரை மாநகர பகுதிகள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமி வீதிஉலா நடைபெறும் மாசி வீதிகளில் திரண்டு விடுவார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா வழக்கம்போல் நடத்தப்படவில்லை. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    மதுரை மக்களை பொருத்தவரை சித்திரை திருவிழாவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பு கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

    இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மதுரை சித்திரை திருவிழாவை வழக்கம்போல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்து வருகிறது.

    கடந்த 5-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    சுவாமி வீதி உலா 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கம்போல் கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் நடைபெறும் சுவாமி வீதிஉலாவில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி வேடத்தில் வந்து பார்ப்போரை வியக்க வைக்கிறார்கள்.

    குழந்தைகள் என்றாலே அழகு. அதுவும் தெய்வங்களின் வேடத்தில் பார்ப்பது தனி அழகுதான். வீதிஉலா வரும் சுவாமிகளை பார்ப்பதற்கும், வேடமணிந்து வரும் சிறுவர்-சிறுமிகளை பார்ப்பதற்கும் தினமும் மாசி வீதிகளில் ஏராளமானோர் திரளுகிறார்கள். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழா களை கட்டியிருக்கிறது.

    சித்திரை திருவிழாவின் முதல் நாளிலேயே வீதி உலா நடைபெற்ற மாசி வீதியில் சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்றார்கள். அடுத்தடுத்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.சாலையே தெரியாத அளவுக்கு மாசி வீதி முழுவதுமாக மக்கள் திரண்டு நின்றார்கள்.

    அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவும் இறைவன் மாசிவீதியில் வலம் வருகிறார் என்பது ஐதீகம். அதன்படியே சித்திரை திருவிழாவின்போது மாசி வீதியில் நடக்கும் சாமி வீதி உலாவை பார்க்க மக்கள் திரள்கிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 14-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரள்வதுண்டு. இதற்காக டிக்கெட் வினியோகம் நடந்துவருகிறது.

    15-ந்தேதி மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதேபோல் அன்றைய தினம் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் (16-ந்தேதி) வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இதையும் படிக்கலாம்...வீடு கட்ட மனையடி சாஸ்திரம்
    ×