search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாணிக்கவாசகர்
    X
    மாணிக்கவாசகர்

    சக்தி சிவத்துடன் ஒடுங்கும் திருவிளையாடல் நிகழ்ந்த திருவண்ணாமலை

    மாணிக்கவாசகர் சிவபெருமானின் கோவில்களுக்குச் சென்று அவரை பாடி மகிழ்கிறார். அவைகள் திருவாசமாக தொகுக்கப்பட்டு பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.
    சிவமும் சக்தியும் சேர்ந்ததுதான் உலகம் என்பார்கள். சக்தி தவமிருந்து சிவத்துடன் ஒடுங்கிய நாள் ஆருத்ரா தரிசன நாளாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மகாதீபமாக சிவன் தோன்றிய நாளில் இருந்து சக்தி, ஜோதியை நோக்கி தவமிருந்து சிவனிடம் இடப்பாகம் பெற்று அவருடன் ஒடுங்கும் நாள்‌ஆருத்ரா தரிசன நாளாகும்.

    அன்றுதான் உலகில் உயிர்கள் தோன்றி பிரபஞ்சமானது. ஆண், பெண் என உயிரினங்கள் தோன்றி உலகம் செயல்பட தொடங்கியது என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும் பெண்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். ஆருத்ரா தரிசனம் வரை இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். பெண்கள் நோன்பு இருப்பதை தெரிவிக்கும் வகையில் தான் திருவெம்பாவை பாடல்களை மாணிக்கவாசகர்.திருப்பள்ளி யெழுச்சி என்றழைக்கப்படும் அந்த பாடல்கள் அடி அண்ணாமலை பகுதியிலிருந்து மாணிக்கவாசகர் இயற்றியவையாகும்.

    அவர் தங்கியிருந்த இடத்தில் தற்போது மாணிக்கவாசகர் கோவில் அமைந்துள்ளது. சிவ புராணம் உள்ளிட்ட மனதை உருக்கும் பாடல்களைப் பாடியவர் மாணிக்கவாசகர். அவரை திருவாதவூரார் என்று அழைப்பார்கள். மந்திரியாக இருந்த அவர் சிவனால் ஆட்கொள்ளப்பட்டு குதிரை வாங்க கொடுக்கப்பட்ட பொற்காசுகளை அறந்தாங்கி அருகில் உள்ள திருப்பெருந்துறை கோவில் திருப்பணிக்கு செலவு செய்து விடுகிறார்.

    இதனால் அரச தண்டனைக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டபோது சிவன் நரிகளை பரிகளாக்கி திருவிளையாடல் செய்தார். இந்த உண்மைகள் பின்னர் தெரியவந்ததும் அரசன், மாணிக்க வாசகரை மன்னித்து விடுகிறார். அதன் பின்னர் மாணிக்கவாசகர் சிவபெருமானின் கோவில்களுக்குச் சென்று அவரை பாடி மகிழ்கிறார். அவைகள் திருவாசமாக தொகுக்கப்பட்டு பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன. மாணிக்கவாசகர் பாடல்களைச் சொல்ல, அவைகளை சிவன் எழுதியதாக வரலாறு உள்ளது.

    திருவாசகம் படிப்பவர் மனதை உருக்கும் ஆற்றல் பெற்றது. எனவே திருவாசகத்திற்கு உருகாதார் ஓரு வாசகத்திற்கும் உருகார் என்ற முதுமொழி ஏற்பட்டது.
    திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்திய நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். முன்னதாக மாணிக்க வாசகர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அப்போது மாணிக்க வாசகர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆருத்ரா தரிசன தினத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் முடிவடைந்ததும் மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்படும்.

    நடராஜரின் நடன கோலத்தை மாணிக்கவாசகர் கண்டு மகிழ்ந்த படி வருவார். திருவண்ணாமலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதன் பின்னர் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாடவீதிகளில் உலா வருவார். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். அப்போது பக்தர்கள் புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபடுவார்கள்.

    திருமஞ்சன கோபுரம் தெற்கு வாசல் வழியாக நடராஜர் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருவாதிரை நாளில் மட்டுமே அந்த வழியாக வருவார். மற்ற திருவிழா நாட்களில் திட்டி வாசல் வழியாகத்தான் வெளியில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×