என் மலர்

  வழிபாடு

  சூலாயுதம் போல் காட்சியளிக்கும் சூரிய வெளிச்சம்
  X
  சூலாயுதம் போல் காட்சியளிக்கும் சூரிய வெளிச்சம்

  நெல்லையப்பர் கோவிலில் சூலாயுதம் போல் விழும் சூரிய வெளிச்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காந்திமதி அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள கணபதி சிலை அருகே உள்ள தூணில் சூரிய வெளிச்சம் படர்ந்து சூலாயுதம் போல் காட்சியளிக்கிறது.
  புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் வீற்றிருக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள கணபதி சிலை அருகே உள்ள தூணில் சூரிய வெளிச்சம் படர்ந்து சூலாயுதம் போல் காட்சியளிக்கிறது. இந்த காட்சிகள் தற்போது நெல்லை மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, இது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். ஆனால் யாரோ ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கலாம் என்றனர்.
  Next Story
  ×