
இந்தநிலையில் அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) மாலையில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து 14-ந்தேதி மாலையில் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். 16-ந் தேதி காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதையொட்டி நேற்று காலையில் அழகர்கோவிலில் இருந்து 3 வாகனங்களும் தனித்தனியே லாரி போன்ற வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் வைகையில் இறங்குவதற்காக தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்காக கருடவாகனமும், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனமும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த 3 வாகனங்களும் மதுரை சித்திரை திருவிழா காலங்களில் மட்டும் பயன்படுத்தப்படும். அதன்பிறகு மீண்டும் அழகர்கோவிலுக்கு திரும்ப கொண்டு செல்லப்படும்.