என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தல விருட்சமாக நாவல் மரம் உள்ளது. இந்த மரத்தடியில் நாகசாமி உள்ளது. நேற்று மாலை நாகசதுர்த்தியையொட்டி இங்குள்ள நாவல் மரத்தடி நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது.
இதேபோல செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நாகராஜா சாமிக்கு நாகசதுர்த்தி விழா நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. இதையடுத்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. அன்று மாலை கோவிலில் சகஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து தங்கத் திருச்சி வாகனத்தில் திருமலையில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு, உற்சவா்களுக்கு நிவேதனம் நடந்தது. பின்னர் பகட மரத்துக்கு சேஷஆரத்தி காண்பிக்கப்பட்டது. சடாரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
விழாவில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, அதிகாரி டாலர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பெருமாளின் வாகனமாக கருடபகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி தினம். அந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.
கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.
கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

கீழே குறிப்பிட்ட நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையின்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 11-ந்தேதி (ஆடிபூரம்) மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளான 13, 14, 15, 20, 21, 25 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
எனினும் வழக்கமான பூஜைகள் ஆகம முறைப்படி அந்தந்த நேரத்தில் நடைபெறும். இந்த குறிப்பிட்ட நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி காசி விசுவநாதர் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழா நடைபெறுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
காசியை விட வீசம் அதிகம் எனக்கூறப்படும் இத்தலத்தின் பெருமையை அறிந்த பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இத்தலத்தில் வழிபாடுகள் செய்வதில் இருந்து இத்தலத்தின் பெருமை விளங்கும்.
இக்கோவிலில் தற்சமயம் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுவதாக இப்பகுதியில் உள்ள பக்தர்கள் கூறுகின்றனர். கோவில் முழுமையாக சிதிலமடைந்து காணப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும், கோவில் முழுமையாக சேதமடைந்து உள்ளதால் எந்தவித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.
எனவே, இனியும் தாமதிக்காமல் திருப்பணி வேலைகள் செய்து தமிழக அரசு குறிச்சி காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகளையும் ெதாகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார்மற்றும் குறிச்சி கிராம மக்கள், பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன. அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடித்திருவிழாவின் 10-வது நாள் மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10-ம்தேதி பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து சிவதீர்த்தத்தில் அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.
திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் கோவிலின் தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டபத்தில் வைத்து வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 2-வது ஆண்டாக மாலை மாற்றும் நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
தித்திக்கும் மாங்கனிக்கு புகழ்பெற்ற சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோயில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் பிரதான வாசல், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் கவனம் ஈர்க்கிறது. வடக்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து வசந்தமண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள விதானத்தில் சிவலிங்கம், கோமுகம் போன்றவையும் காணப்படுகிறது. அதில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மையே பார்க்கும் வண்ணம் சிங்கவாகனத்துடன் வாளேந்தி நிற்கும் பத்ரகாளியம்மன் உருவம் பஞ்சவர்ணத்தில் ஓவியமாக வரையப்பட்டிருப்பது பக்தர்களின் கவனம் ஈர்க்கிறது.
மகாமண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அஷ்டலட்சுமிகள், தில்லைநடராஜர், மீனாட்சி அம்மன் ஆகிய கருங்கல் சிற்பங்கள் பழங்கால சிற்பக்கலையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்த மகாமண்டபத்தின் நடுவில் நின்று தரிசனம் செய்தால் ராஜகோபுரத்தையும், மூலவர் விமானத்தையும் பத்ரகாளியம்மனையும் ஒரு சேர தரிசனம் செய்யலாம். இது தமிழகத்தில் வேறு எந்தக் ேகாயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இவ்வாறு தரிசனம் செய்வதால் முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதமும், காளியின் ஜெயமங்களயோக சித்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. இதற்கடுத்து கருவறைக்கல் மண்டபம் எனப்படும் மூலஸ்தானம் உள்ளது. இந்த மூலஸ்தான கர்ப்ப கிரகத்தில் அகிலபுவன மாதாவாக, அஷ்ட புஜங்களுடன், அர்த்த பத்மாசனத்தில் வலது காலை மடக்கி, இடதுகாலை மகிஷாசூரனின் மார்பில் வைத்து அழுத்தி தீயோரை தண்டித்து நல்லோரை காக்கும் நாயகியாக, கொற்றவையாக, வெற்றியைத்தரும் வீரதுர்க்கையாக அன்னை பத்ரகாளியம்மன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது.
பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஐப்பசி தீபாவளி அமாவாசை அன்று பிரத்தியங்கராதேவி அலங்காரமும், குபேரர்பூஜையும் நடைபெறும். அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால் மக்கள் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர்.
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான திருவோண திருவிழா வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கேரளாவை ஆண்ட மாவேலி மன்னன், மக்களை பார்க்க வரும் நாளே ஓணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு, மன்னனை வரவேற்பார்கள்.10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று தொடங்கியது. அதன்படி அஸ்தம் திருவிழா இன்று நடந்தது.
ஓணப்பண்டிகையையொட்டி மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவார்கள். இந்த நாட்களில் மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் இம்முறை மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால் மக்கள் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர்.

ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நட்சத்திரம் என்பதால் புகழ் பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 1008 கலசாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நட்சத்திரம் என்பதால் புகழ் பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 1008 கலசாபிஷேக விழா நடைபெற்றது. அம்மனை சுற்றிலும் 1008 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை 1008 கலசாபிஷேகம் செய்யப் பட்டது.
பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.
மந்திரம்
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்கிருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
பொருள்:- ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பெற்ற ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந்தேதி தேதி வரை நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம். ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிவார். இத்தகைய சிறப்பு பெற்ற ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந்தேதி தேதி வரை நடக்கிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழாக்கள் கோவிலுக்குள் நடந்து வருகின்றன. ஆவணி மூல திருவிழாவில் முக்கியமானதாக கருதப்படும் 'திருவிளையாடல் லீலைகள்' நேற்று தொடங்கின. முதலாவதாக கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடந்தது. இது குறித்த புராண வரலாறு வருமாறு:-
ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலும் சிறிது பாவமும் செய்தமையால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று, ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன்னுடைய நிலையை எண்ணி மிகவும் வருந்தியது.
அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர் மதுரையை பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வணங்கினால் எண்ணியது நடக்கும் என்றும் பேசிக்கொண்டிருந்தனர். அதை கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரைக்குளத்திலேயே நீராடி இறைவனை வணங்கியது.
அதை கண்ட இறைவன் கருங்குருவியின் பக்திக்கு மனம் இறங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்துக்கான எளியான் என்னும் பெயரை மாற்றி வலியான் என வழங்கினார் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
இந்த திருவிளையாடல் லீலையை எடுத்துரைக்கும் வகையில் கருங்குருவிக்கு உபதேசம் அளிக்கும் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் எழுந்தருளினர். இந்த திருக்காட்சியை காண கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று இரவு 7 மணிக்கு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வந்தனர். கொரோனா காலகட்டம் இல்லாமல் இருந்தால் சுவாமி-அம்மன் ஆவணி மூலவீதி, கீழபட்டமார் தெருவழியாக வடக்கு, கிழக்கு சித்திரை வீதி வழியே பவனி வந்திருப்பார்கள். 2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. தினமும் 15 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற ஆவணி மாத பூஜைகளுக்காக 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
16-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று காலை 5.55 முதல் 6.20 வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்கான நேரத்தை பந்தளம் ராஜகுடும்பத்தினர் குறித்து கொடுத்தனர். இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிறை புத்தரிசி பூஜை நடைபெறும் நேரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த பூஜையை தந்திரி கண்டரரூ ராஜிவரரு நடத்துகிறார். இப்பூஜையில் மாளிகைபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நெற்கதிர்கள் எடுத்து வரப்படுகிறது.
நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கோவிலில் இருந்து நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இதனை வீடுகளில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எனவே இந்த பூஜையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே இம்முறை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் 15 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும். இல்லையேல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
15-ந்தேதி திறக்கப்படும் கோவில் நடை வருகிற 21-ந் தேதி ஓணம் பண்டிகை வரை திறந்து இருக்கும்.