search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hayagriva"

    • சரஸ்வதிக்கே, குருவாக திகழ்பவர், ஹயக்ரீவர்.
    • ஹயக்ரீவரை ஞானத்தின் அதிபதியாக புராணங்கள் சொல்கின்றன.

    செல்வம் என்றாலே அது அழியும் ஒன்றுதான். அழியாத செல்வமாக இந்த உலகத்தில் இருப்பது கல்வி மட்டுமே. ஒருவரிடம் இருந்து தட்டிப்பறிக்க முடியாத விஷயமாகவும் கல்விதான் இருக்கிறது. அந்த கல்வியின் அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. அந்த சரஸ்வதிக்கே, குருவாக திகழ்பவர், ஹயக்ரீவர். இவரை ஞானத்தின் அதிபதியாக புராணங்கள் சொல்கின்றன.

    பிரம்மதேவர் படைப்புத் தொழிலின் அதிபதி. அவர் நான்கு வேதங்களின் துணை கொண்டு அந்தப் பணியை செய்து வந்தார். அந்த நான்கு வேதங்களையும், குதிரை வடிவில் வந்த மது, கைடபர் என்ற அசுரர்கள் திருடிச் சென்றனர். இதனால் பிரம்மனின் படைப்பு தொழில் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்.

    அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்க நினைத்த மகாவிஷ்ணு தானும், குதிரை முகம் கொண்டவராக அவதாரம் பூண்டார். குதிரை முகம், மனித உடல், இரு கண்களாக சூரியன்-சந்திரன், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதியை பெற்றிருந்தார். அவரது உடல் முழுவதும் சூரியனை விடவும் பன்மடங்கு ஒளி பொருந்தியதாக பிரகாசித்தது.

    அசுரர்களுடன் போரிட்டு அவர்களிடம் இருந்து வேதங்களை மீட்டு வந்தார், ஹயக்ரீவர். ஆனால் போரின் உக்கிரம் அவரது உடலை விட்டு தணியாமல் இருந்தது. இதையடுத்து தேவர்கள் அனைவரும், லட்சுமி தேவியை ஹயக்ரீவரின் மடியில் அமரச் செய்தனர். இதையடுத்து கோபம் தணிந்த அவர் 'லட்சுமி ஹயக்ரீவர்' என்று அழைக்கப்பட்டார்.

    அசுரர்களின் கைபட்டதால், தங்களின் பெருமை குன்றியதாக வேதங்கள் கருதின. எனவே தங்களை புனிதமாக்கும்படி அவை, ஹயக்ரீவரிடம் வேண்டின. இதையடுத்து ஹயக்ரீவர், நான்கு வேதங்களையும் உச்சி முகர்ந்தார். இதனால் அவை புனிதமாக மாறின. வேதங்களையே மீட்டு வந்தவர் என்பதால் ஹயக்ரீவர், ஞானத்திற்கும், கல்விக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது.

    சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

    மந்திரம்

    ஞானானந்தமயம் தேவம்

    நிர்மல ஸ்படிகாக்கிருதிம்

    ஆதாரம் ஸர்வவித்யானாம்

    ஹயக்ரீவ முபாஸ்மஹே

    பொருள்:- ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை, மனதார பாராயணம் செய்யும் மாணவர்களுக்கு, தாம் விரும்பும் மேல் படிப்புக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.
    லக்ஷ்மீகராம் போருஹ ஹேமகும்ப
    பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
    வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி
    ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே

    - ஹயக்ரீவ கவசம்

    பொதுப் பொருள்: மஹாலக்ஷ்மியின் தாமரை போன்ற மென்மையான கரத்தில் உள்ள ஸ்வர்ண குடத்திலிருக்கும் அமுதத்தால் அபிஷேகம் செய்யப் பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின் முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தரித்திருக்கிற ஹயக்ரீவப் பெருமாளே நமஸ்காரம்.
    லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார்.
    லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார். அவர் கூறி இருப்பதாவது:-

    “ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவிக்கு மிகப் பிரியமானது. காலைக்கடன் முடித்து, ஸ்ரீசக்ரத்தைப் பூஜித்து, மூல மந்திரத்தை ஜபித்துத் தினந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது எல்லா நன்மைகளையும் அளிக்கும். நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.

    ஜ்வரம் உள்ளவன் தலையைத் தொட்டுப் பாராயணம் செய்தால் ஜ்வரம் அகலும். விபூதியை ஜபித்து இட்டால் நோய்கள் நீங்கும். கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.

    ஸ்ரீவித்தைக்குச் சமமான மந்திரமும், ஸ்ரீ லலிதாவிற்குச் சமமான தேவதையும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் சமமான ஸஹஸ்ர நாமமும் கிடையாது. ஸ்ரீ சக்கரத்தை ஆயிரம் நாமங்களால் தாமரை, துளசிப்பூ, செங்கழுநீர்ப்பூ, கதம்பம், சம்பகம், ஜாதி, மல்லிகை, அலரி, நெய்தல், பில்வம், முல்லை, குங்குமப்பூ, பாடலி, தாழை, வாஸந்தி முதலிய புஷ்பங்களாலும், பில்வ பத்திரத்தாலும், ஒன்றாலோ, பலவற்றாலோ அர்ச்சிக்க வேண்டும்.

    நவராத்திரி மஹா நவமியிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆசையுடன் அர்ச்சிப்பவர் அம்பிகையின் அருளை விரைவில் பெற்று ஆசைகளின் பூர்த்தி எய்துவர். ஆசையின்றிப் பாராயணம் செய்பவர் ஆத்ம ஞானம் பெற்றுப் பேரின்பமடைவர்.

    தேவி ஸஹஸ்வ நாமங்களில் சிறந்தது பத்து:- கங்கா, காயத்ரீ, சியாமளா, லஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேசுவரீ, ஸரஸ்வதீ, பவானீ, அவற்றுள் இது மிகச் சிறந்தது.

    அகஸ்தியரே! இங்ஙனம் உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன்” என்றார்.
    சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
    சித்திரை 24 (07.05.2018) திங்கள்
    வைகாசி 21 (04.06.2018) திங்கள்
    ஆனி 17 (01.07.2018) ஞாயிறு
    ஆடி 12 (28.07.2018) சனி
    ஆவணி 08. (24.08.2018) வெள்ளி
    புரட்டாசி 05 (21.09.2018) வெள்ளி
    ஐப்பசி 01 (18.10.2018) வியாழன்
    ஐப்பசி 28 (14.11.2018) புதன்
    கார்த்திகை 26 (12.12.2018) புதன்
    மார்கழி 24 (08.01.2019) செவ்வாய்
    தை 21 (04.02.2019) திங்கள்
    மாசி 20 (04.03.2019) திங்கள்
    பங்குனி 17 (31.03.2019) ஞாயிறு

    சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும்.

    இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும் துவாதசியன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.
    ×