search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lalitha sahasranamam"

    லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

    சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

    தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

    கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

    இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

    ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது “ என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

    லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

    அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக்கூறினார் ஹயக்கிரீவர். இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.

    அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.
    ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து வந்தால் நம்முடைய முன்னேற்றம் நம் கண் கூடாகத் தெரியவரும்.
    பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன. அவளுக்கு மிகமிகப் பிரியமான பெயரால் அவளை அழைப்பதேகூட ஒரு வழிதான். அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன.

    ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம்.

    முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சகஸ்ரநாமம் உண்டு. அம்பிகைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட சஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. லலிதா, புவனேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, பாலா போன்றவை அவை.

    அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியது தான் லலிதா சகஸ்ரநாமம்.  இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சகஸ்ர நாமம் சொல்லப்பட்டுள்ளது.

    பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள்.

    அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

    அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சகஸ்ரநாமம். இந்த ஆயிரம் பெயர்களுடன் கூடிய மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள்.

    ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும்.

    இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம்.



    ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.

    ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் சொல்லலாம். சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட சொல்லலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.

    செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய நாட்களில் சொல்வது சிறப்பு. ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தை ஸ்தோத்திரமாகவும் பாராயணம் செய்யலாம். அல்லது நாமாவளியாகவும் அர்ச்சனை செய்யலாம்.இது மகத்தான பலனைத் தரவல்லது. இந்த லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களும் சகல செல்வங்களையும் கொடுத்து அபாரமான நல்ல வாழ்வினை தரவல்லது.

    வடமொழி எழுத்துக்கள் இருப்பதால் உச்சரிப்பு தவறாகிவிடுமோ தவறாக சொல்லிவிடுவோம் என்று பயப்பட வேண்டாம். அன்னை நம்மை குழந்தையாக பாவித்து நம் உச்சரிப்பை ஏற்றுக்கொள்வாள். பழக பழக உச்சரிப்பு கை கூடும்.சகஸ்ர நாமத்தை ஸ்ரீ கணபதியை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொண்டு தொடங்குதல் வேண்டும். சங்கல்பம் என்பது நமது வேண்டுதல்களை நிறைவேற்றித்தருமாறு அம்மனை வேண்டுதல் ஆகும்.

    அர்ச்சனை செய்வதாக இருந்தால் அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் தொன்னை அல்லது சிறு கிண்ணம் வைத்து அதில் கட்டைவிரல் மோதிரவிரலால் குங்குமம் எடுத்து நம என்று முடியும் போது அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

    பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன் தங்களது பாராயணத்தின் பலன்முழுவதையும் தந்தருளி ஏற்றுக்கொள் என்று அன்னைக்கே சமர்ப்பணம் செய்ய வேண்டும். நமது அர்ச்சனையிலோ பாராயணத்திலோ பிழைகள் இருந்தால் மன்னித்தருள வேண்டி இதை சொல்லி முடிக்க வேண்டும்.

    இந்த பாராயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபடுதல் சிறப்பு. மேலும் லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வந்தால் மிகச்சிறப்பு ஆகும்.

    அம்மனுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் சர்க்கரைப்பொங்கல், பாயாசம், சர்க்கரை கலந்த பால் போன்றவை நிவேதனம் செய்து வழிபடுதல் கூடுதல் பலன்களைத் தரும்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து வந்தால் நம்முடைய முன்னேற்றம் நம் கண் கூடாகத் தெரியவரும். அம்பிகைக்கு பிரியமான ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து சகல சக்திகளையும் பெறுவோம்.
    ‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம்.
    எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர். பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் நம்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு முறை நீண்ட கால பாரம்பரியம் கொண்டது. புராணங்கள், வேதங்கள் இவற்றினை தான் ஆணி வேராகக் கொண்டது. மாத விழாக்கள், வருட விழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறை வந்தது.

    கணபதி வழிபாடு, சுப்ரமணிய வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, அம்பிகை வழிபாடு, கிராம முறை வழிபாடு என பல பிரிவுகளை கொண்டது. இதில் அம்பிகை வழிபாடு முறை நம் நாட்டின் மிகப்பெரிய கலாசார முறையாகும். எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர்.

    பொதுவில் செவ்வாய், வெள்ளி என்ற வார நாட்களில் அநேக இந்து குடும்பங்கள் அம்பிகை பூஜை, அம்பிகை கோவில், விளக்கு பூஜை, மாவிளக்கு, நாகவழிபாடு, எலுமிச்சை விளக்கு என அம்பிகையின் வழிபாடு ஊரே களைகட்டி விடும்.

     ‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம். லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.

    லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் விவாதமாக இடம் பெற்றுள்ளது. ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றார். ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.

    பஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதா சகஸ்ரநாமத்தினைப் பற்றிகூறவில்லை. அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதி லிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா.

    ஒரு சமயம் லலி தாம்பிகை வாசினி மற்றும் வாக்கு தேவ தைகளை நோக்கி ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர் கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.

    அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதை கள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.

    கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள். ‘ குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்கி, நன்மைகளைப்பெற வைக்கும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.

    பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும் ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.
    உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தை யும் ஒன்றே.

    லலிதாம்பிகையின் வழி பாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழி படலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழி படலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

    ‘லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்’லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தினை மேலும் கூறும் பொழுது
    * லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.
    * இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.

    * உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்
    *குழந்தைவரம் வேண்டு வோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.
    * அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும்.
    *பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.

    * அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.
    * கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.
    * எதிரிகள் நீங்குவர்.
    * வெற்றி கிட்டும்.
    * பொன், பொருள், புகழ் சேரும்.
    * லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.

    * இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.
    * தன்னம்பிக்கை கூடும்.
    * லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
    * ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
    படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒரு குரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.

    நாமத்தை யாருக்கு சொல்லி கொடுக்கலாம்?

    அகத்தியருடைய குருவான ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரத்தை யாருக்கும் சொல்லலாம் எனக் கூறி உள்ளார்.  தேவியிடம் பக்தியில்லாதவனுக்கு இந்த தோத்திரத்தை சொல்லக்கூடாது.

    குருவை மிஞ்சியவனாக தலைக்கனத்துடன் பேசுபவன், குரு சொல்லும் போதே எல்லாம் எனக்கு முன்பே தெரியும் என்பவன், இதை இன்னும் நன்கு விளக்கி இருக்கலாம், நீர் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை என்று இப்படிச் சொல்வது சீடனுக்கு உபதேசிப்பது, மகா பாவம். இவர்களுக்குச் சொல்ல வேண்டாம் என்ற ஹயக்ரீவர் கூறியுள்ளார்.
    ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல்லாம் தீரும். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்வதாகும்.
    ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல்லாம் தீரும். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்வதாகும்.

    ஆரோக்கியம், பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலிய உபாதைகளிலிருந்து விடுதலை, விஷ தோஷங்களிலிருந்து நிவாரணம், திருமணம், அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கை, தன, தான்ய, ராஜ்ய வசியம் போன்ற பலப்பல காரியங்கள் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணத்தால்’’ கைகூடி வருவது அனுபவ பூர்வமான உண்மையாகும்.

    காலை நித்ய கர்மாக்களைச் செய்து முடித்த பிறகு ஸ்ரீசக்ர பூஜையும் மூல மந்திர நாம ஜபங்களும் பின் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணமும்’’ செய்தால் விசேஷ பலன்களைப் பெறலாம். இதை எந்நாளும் காலை, மாலை பாராயணம், ஜபம் செய்யலாம். தக்க குரு மூலம் உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும். குரு கிடைக்காவிட்டால் ‘ஸ்ரீதட்சிணாமூர்த்தியை’ குருவென பாவித்து பிழையின்றி பாராயணம் செய்ய வேண்டுமென்பது சான்றோர் கருத்து.

    இதன் ஒவ்வொரு நாமாக்களும் அதிசயமான அரிய பல அனுகூல பலன்களை தர வல்ல தாரக மந்திரங்களாகும். எனினும் முழுமையாக ‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’ செய்ய முடியாதவர்கள் அவரவருக்கு உகந்த நாமாவைத் தேர்ந்தெடுத்து குறைந்தது 108 முறையாவது தினசரி பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூட உதவும்.

    தன் விருப்பத்திற்கேற்ற கணவனை அடைய

    நாமா    : ஓம் சுவாதீன வல்லபாயை நம:
    தாத்பர்யம்    : ஓம் தன் வயப்பட்ட அன்புமிக்க நாயகனையுடையவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேன் கலந்த பால்

    மூவகை சித்திகளைப் பெற (இச்சா, க்ரியா, ஞான)

    நாமா    : ஓம் மகாசக்தியை நம
    தாத்பர்யம்     : ஓம் பெரும் உற்சவமெனக் கொண்டாடும் வழிபாட்டிற் கிசைபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : சர்க்கரை பொங்கல், நெய் கலந்த பலவித பட்சணங்கள்.

    தெய்வீக அன்புடன் சகல சவுபாக்கியங்களும் பெற

    நாமா    : ஓம் பக்த சவுபாக்கிய தாயின்யை நம
    தாத்பர்யம்    : பக்தர்களுக்கு சவுபாக்கியத்தை வழங்கும் தேவிக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேங்காய், திராட்சை, கல்கண்டு.

    செல்வம் பெற

    நாமா    : ஓம் ஸ்ரீகர்யை நம
    தாத்பர்யம்    : ஓம் செல்வத்தை தருபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : குங்குமப்பூ, சர்க்கரை கலந்த பால்.

    விருப்பத்திற்கேற்ற பொருள் கிடைக்க

    நாமா    : ஓம் புருஷார்த்தப்ரதாயை நம
    தாத்பர்யம்    : ஓம் நான்குவித நலன்களை அருள்பவளுக்கு நமஸ்காரம். (அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கு வித புருஷார்த்தங்களை அளிப்பவள், இச்சைகளைப் பூர்த்தி செய்பவள்).
    நைவேத்யம்    : வெல்லம், தேங்காய், தேன், பருப்பு.

    ஏற்ற காரியம் தடங்கலில்லாமல் நிறைவேற

    நாமா    : ஓம் விக்ந நாசின்யை நம
    தாத்பர்யம்    : ஓம் இடையூறுகளை நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : வாழைப்பழம், தாம்பூலம்.

    வியாதிகள் விலகவும், வராமல் தடுக்கவும்

    நாமா    : ஓம் சர்வ வியாதிப்ரசமந்யை நம
    தாத்பர்யம்    : ஓம் எல்லா நோய்களையும் அடக்குபவளுக்கு நமஸ்காரம்
    நைவேத்யம்    : இளநீர், பழம், பால்.

    கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாக

    நாமா    : ஓம் தயாமூர்த்தியை நம
    தாத்பர்யம்    : ஓம் தயை வடிவானவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : திராட்சை, முந்திரி, கல்கண்டு.

    நிலம், வீடு, மனை வாங்க கட்ட, தோஷங்கள் விலகி, வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் நிலவ

    நாமா    : ஓம் சாம்ராஜ்ய தாயின்யை நம
    தாத்பர்யம்    : ஓம் சாம்ராஜ்யத்தை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேங்காய், சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பதார்த்தம், தாம்பூலம்.

    விருப்பங்கள் நிறைவேற

    நாமா    : ஓம் சர்வ லோக வசங்கர்யை நம
    தாத்பர்யம்    : ஓம் உலகமனைத்தையும் தன்னுள் வசப்படுத்தி ஆள்பவளுக்கு நமஸ்காரம். (இந்நாமாவைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும்.
    நைவேத்யம்    : சர்க்கரை பொங்கல், நெய் கலந்த ஹரவிஸ்சு (வடிக்க)

    வழக்குகள் இல்லாமல் சுமுகமாக இருக்க

    நாமா    : ஓம் சாமரஸ்ய பராயணாயை நம
    தாத்பர்யம்    : ஓம் சமஸத்தை நிலையாகக் கொண்டவளுக்கு நமஸ்காரம்
    நைவேத்யம்    : சித்திரான்னம், தேன் கலந்த பசும்பால்.

    சுக பிரசவம் உண்டாக

    நாமா    : ஓம் பிராண தாத்தர்யை நம
    தாத்பர்யம்    : ஓம் பிராண சக்தியை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : பஞ்சாமிர்தம்

    அறுவகைச் செல்வங்கள் பெருக

    நாமா    : ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம
    தாத்பர்யம்    : ஓம் செல்வத்தையும் தான்யத்தையும் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : ஆறுவகை பட்சணங்கள் (அறுசுவை அடங்கியவை)

    சுவாசம் சம்பந்தமான ரோகங்கள் குணமடைய

    நாமா    : ஓம் நாதரூபிண்யை நம
    தாத்பர்யம்    : ஓம் நாத வடிவானவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேன் கலந்த பால், கருணைக் கிழங்கினால் செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தம்.

    தூய்மையான மனப்பக்குவம் பெற

    நாமா    : ஓம் சுத்த மானசாயை நம
    தாத்பர்யம்    : ஓம் தூய மனமுள்ளவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : இளநீர், தேங்காய்.

    தம்பதிகளிடையே உறவு நிலவ, தோஷங்கள் விலக

    நாமா    : ஓம் சிவ சிக்தியைக்ய ரூபிண்யை நம
    தாத்பர்யம்    : ஓம் சிவனும் சக்தியும் ஒன்றெனக் காட்சி தருபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : இனிப்பு பதார்த்தங்கள், பழங்கள், தாம்பூலம்.


    உரை எழுதியவர்

    லலிதா சகஸ்ர நாமத்திற்கு முதல் முழு உரை எழுதியவர் சாக்தமகான் ஸ்ரீபாஸ்கர ராயர். இவர் உரையையும், பிரயோகங் களையுமே பெரும்பகுதி இன்று உபாசகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
    தமிழில் இதற்கு சொல் விளக்கம் செய்தவர், ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா என்ற வேத புராண விற்பன்னர் ஆவார். இவர்களைத் தவிர ஸ்ரீ சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் ஸ்ரீமான் அண்ணா போன்றவர் களின் உரைகள் இன்று வழக்கில் உள்ளன.
    மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. அவர் அந்த சக்தியை பெற ஸ்ரீலலிதா சகரஸ்நாமம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் அவதரித்த பெண் சித்தர்களில் மிகுந்த தனித்துவம் கொண்டவர் ஸ்ரீசக்கரத்தம்மாள். இவரது இயற்பெயர் அனந்தாம்பாள். 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர்.

    குழந்தை ஞானச் செறிவுடன்வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.

    லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்ப சிவனுடன் திருமணம் நடந்தது.

    மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந் தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார். ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம் பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்து அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.

    “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர். தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

    இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901-ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். அவருக்கு சென்னை திருவான்மியூரில், கலாசேத்ரா அருகே ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

    பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. அவர் அந்த சக்தியை பெற ஸ்ரீலலிதா சகரஸ்நாமம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.


    வாழ்க்கையில் சுகம் என்ன என்பதை மறந்தும்கூட காணாதவர்கள் லலிதா சகஸ்ரச நாம ஜெபத்தின் மூலம் சுகத்தை நிச்சயமாக அடையலாம். ஓம் க்லீம் சர்மதாயின்யை நம என்பது மந்திரம்.

    லலிதா சகஸ்ரநாமத்தில் ஒளிவிடும் இந்த மந்திரம் மந்திரங்களின் ஆணிவேர் என்றும் கூறலாம். சுக்ல சதுர்தசியில் மாலை வேளையில் நாம பாராயண பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீசக்ர மேரு, பூபுரசக்கரம் இவைகளில் அருச்சிக்கலாம். சிறப்பாக நுனிகிழியாத ‘தாய் வாழை’ இலையின் நடுப்பகுதியில் கைப்பிடி அளவு சந்தன உருண்டையை வைத்துக் கொள்ள வேண்டும்.

    அல்லது திரிகடிகை பிரமாணம் சந்தன உருண்டையை வைத்துக் கொள்ளலாம். இதைத் திரிகோணாகாரமாக கோபுரம் போல் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூந்தளிர் திரிதளவில்வத்தின் மீது இதை வைக்க வேண்டும்.

    ஆவாகன உபசாரங்கள் செய்து அர்ச்சனையில் ஸ்ரீமத் லலிதா சகஸ்ர நாம அருச்சனை செய்ய வேண்டும். இந்த பூஜை முடித்த பிறகு அந்த சந்தனத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் நெற்றியில் பஞ்சதசாட்சதி சொல்லித் தரித்துக் கொள்ள வேண்டும். இது முகவசீகரம் தரும். காரிய வெற்றி தந்து உதவும். செய்யும் பணியில் செல்வாக்கைத் தரும்.

    பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு லலிதா சகஸ்ர நாமத்தை படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

    இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் கயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

    லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
    லலிதாம்பிகை தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள். இது குறித்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.

    பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார்.

    1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.

    திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார்.

    மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.

    பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை.

    இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

    அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.

    திருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார். தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார்.

    ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

    ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.

    அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.

    ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.

    ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறாள்.

    லலிதா சகஸ்ர நாமம் அஞ்ஞானத்தை விரட்டி மெய் ஞானத்தைத் தரக்கூடியது. பொதுவாக லலிதா சகஸ்ர நாமம் குரு பரம்பரையில் ஞான தீபமாக விளங்கக் கூடியது.
    லலிதா சகஸ்ர நாமம் அஞ்ஞானத்தை விரட்டி மெய் ஞானத்தைத் தரக்கூடியது. பொதுவாக லலிதா சகஸ்ர நாமம் குரு பரம்பரையில் ஞான தீபமாக விளங்கக் கூடியது.

    மூல தேவியான லலிதை, அவளுடைய அங்க தேவதைகள், உப தேவதைகள் இவர்களைப் பற்றியும், அந்தத் தேவிகளின் குணாகுணங்கள், அணுக்கிரக, நிக்கிரக தன்மை இவைகளை மிக தெளிவாக விளக்குகின்றன. ஒரு மரம் என்றால் அந்த மரத்திலே காய்க்கும் காயோ, பழுக்கும் பழமோ அந்த மரத்தின் இயல்புப்படி ஒத்த ஒரு குணம் கொண்டதாக இருக்கும்.

    அதனுடைய சுவை புளிப்போ, துவர்ப்போ, இனிப்போ, உறைப்போ, கரிப்போ ஏதோவொரு சுவை உடையதாக மட்டும் இருக்கும். ஆனால் லலிதா சகஸ்ர நாமமாகிய மகா விருசத்தில் கனிந்த கனிகளாகிய மந்திர நாமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வொரு தேவதையையும் ஒவ்வொரு பலனையும் தருவதாக விளங்குகிறது. இதுவே இதன் மகத்தான சிறப்பு.'

    லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார்.
    லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார். அவர் கூறி இருப்பதாவது:-

    “ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவிக்கு மிகப் பிரியமானது. காலைக்கடன் முடித்து, ஸ்ரீசக்ரத்தைப் பூஜித்து, மூல மந்திரத்தை ஜபித்துத் தினந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது எல்லா நன்மைகளையும் அளிக்கும். நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.

    ஜ்வரம் உள்ளவன் தலையைத் தொட்டுப் பாராயணம் செய்தால் ஜ்வரம் அகலும். விபூதியை ஜபித்து இட்டால் நோய்கள் நீங்கும். கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.

    ஸ்ரீவித்தைக்குச் சமமான மந்திரமும், ஸ்ரீ லலிதாவிற்குச் சமமான தேவதையும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் சமமான ஸஹஸ்ர நாமமும் கிடையாது. ஸ்ரீ சக்கரத்தை ஆயிரம் நாமங்களால் தாமரை, துளசிப்பூ, செங்கழுநீர்ப்பூ, கதம்பம், சம்பகம், ஜாதி, மல்லிகை, அலரி, நெய்தல், பில்வம், முல்லை, குங்குமப்பூ, பாடலி, தாழை, வாஸந்தி முதலிய புஷ்பங்களாலும், பில்வ பத்திரத்தாலும், ஒன்றாலோ, பலவற்றாலோ அர்ச்சிக்க வேண்டும்.

    நவராத்திரி மஹா நவமியிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆசையுடன் அர்ச்சிப்பவர் அம்பிகையின் அருளை விரைவில் பெற்று ஆசைகளின் பூர்த்தி எய்துவர். ஆசையின்றிப் பாராயணம் செய்பவர் ஆத்ம ஞானம் பெற்றுப் பேரின்பமடைவர்.

    தேவி ஸஹஸ்வ நாமங்களில் சிறந்தது பத்து:- கங்கா, காயத்ரீ, சியாமளா, லஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேசுவரீ, ஸரஸ்வதீ, பவானீ, அவற்றுள் இது மிகச் சிறந்தது.

    அகஸ்தியரே! இங்ஙனம் உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன்” என்றார்.
    அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.
    அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.
    உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல.

    உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிவம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

    சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான்.

    ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்?

    அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.

    பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது.

    ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப்படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுகிறார்கள்.

    லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
    சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

    தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

    கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

    இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

    ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
    பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது “ என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

    லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

    அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக்கூறினார் ஹயக்கிரீவர். இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.

    அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.
    ×