என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஹயக்ரீவர் வழிபாடும் பலன்களும்
    X

    ஹயக்ரீவர் வழிபாடும் பலன்களும்

    • ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது.
    • ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.

    படைப்புக் கடவுளான பிரம்மனிடம் இருந்த வேதங்கள் எழுதப்பட்ட சுவடிகளை, அசுரர்கள் திருடிச் சென்றனர். அவர்களிடம் இருந்து வேதங்களை மீட்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே, 'ஹயக்ரீவர்' அவதாரம் ஆகும். ஆகாயமும், பாதாளமும் அவருடைய காதுகளாகவும், கண்களைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய சூரிய ரேகைகள் பிடரி மயிர்களாகவும், பூமி நெற்றியாகவும், கங்கையும், சரஸ்வதியும் அழகிய புருவங்களாகவும். சந்திரனும் சூரியனும் இரு கண்களாகவும், சந்தியா தேவதை மூக்காகவும், பித்ரு தேவதைகள் பற்களாகவும், கோலோகம், பிரம்ம லோகம் இரண்டும் உதடுகளாகவும், காலராத்ரி கழுத்தாகவும் விளங்கும் சத்வ மூர்த்தியான ஹயக்ரீவர் குறித்த சில அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    • ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.

    • ஹயக்ரீவர் எழுப்பும் 'ஹலஹல' என்ற கனைப்பு சத்தம், எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாகச் சொல்கிறார்கள்.

    • ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாகச் சொன்னால், ஹயக்ரீவர் நம் அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை.

    • ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.

    • பக்தர்கள் நல்வழி பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

    • உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாகக் கூறப்படுகிறது.

    • தேவர்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

    • ஹயக்ரீவர் 'ஓம்' எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

    • பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

    • புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும் என்கிறாாக்ள்.

    • ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

    • ஹயக்ரீவரின் பாத கமலங்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலையெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

    • ஹயக்ரீவரை தினமும் மலர் தூவி வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×