search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓணம் பண்டிகை
    X
    ஓணம் பண்டிகை

    கேரளாவில் 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை இன்று தொடங்கியது

    மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால் மக்கள் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர்.
    கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான திருவோண திருவிழா வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கேரளாவை ஆண்ட மாவேலி மன்னன், மக்களை பார்க்க வரும் நாளே ஓணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு, மன்னனை வரவேற்பார்கள்.10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று தொடங்கியது. அதன்படி அஸ்தம் திருவிழா இன்று நடந்தது.

    ஓணப்பண்டிகையையொட்டி மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவார்கள். இந்த நாட்களில் மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

    இந்த ஆண்டும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் இம்முறை மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால் மக்கள் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர்.
    Next Story
    ×