என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மாரியம்மன் கோவில் அபிஷேக பூஜைகளும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகளும் நடந்தன.
    ஆடிமாத வெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள மகா மாரியம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், பழவகைகள், விபூதி சந்தனம் ஆகிய வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மேட்டுப்பாளையம் அருண் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அதுபோன்று பாக்குகார தெரு மாகாளி யம்மன் கோவில், எல்.எஸ்.புரம் பேட்டை மகா மாரியம்மன் கோவில், காட்டூர் தவிட்டு மாரியம்மன் கோவில், கெண்டையூர் கருமாரியம்மன் லிங்கேஸ்வரர் கோவில், மைதானம் மாரியம்மன் கோவில், குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் பூஜைகள் நடந்தன.

    துடியலூர் அருகில் உள்ள வெள்ளக்கிணர், கவுண்டம்பாளையம், என்.ஜி.ஜி. காலனி, பன்னிமடை, தொப்பம்பட்டி, சின்னதடாகம், கணுவாய், இடையர்பாளையம் காளப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பேரூர் அருகே உள்ள பச்சாளையம் வீரமாஸ்தி அம்மன் கோவிலில் அலங்கார பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை வழிபாடுகள் நடந்தன.

    இதேபோல், மாரியம்மன் கோவில் அபிஷேக பூஜைகளும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகளும் நடந்தன. இதில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் ஆகியன வழங்கப்பட்டது.

    மேலும், இங்குள்ள மாகாளியம்மன் கோவிலில் அபிஷேக வழிபாடு, திருவிளக்கு வழிபாடு மற்றும் அலங்கார பூஜைகள் அம்மன் கோவிலை சுற்றி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று வடிவேலம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது.
    ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.
    காத்யாயனி! மஹாமாயே!
    மஹாயோகின்யதீஸ்வரி!
    நந்தகோபஸுதம் தேவி
    பதிம்மே குருதே நமஹ:

    - ஆண்டாள் சொன்ன தேவி துதி.

    பொதுப் பொருள்: அனைவரையும் காத்தருளும் கருணைமிக்க காத்யாயனி தேவியே உனக்கு நமஸ்காரம். எல்லாவகை மாயைகளையும் பொருளுணர்த்தி விளங்க வைப்பவளே உனக்கு நமஸ்காரம். மகத்தான யோக சித்திகளை அடைந்தவளே உனக்கு நமஸ்காரம். நந்தகோபருடைய புத்திரரான கண்ணனே எனக்குக் கணவனாக அமைய வேண்டும். அந்த பாக்கியத்தை தேவி நீ எனக்கு அருள்வாயாக.கண்ணனை ஆண்டாள் கணவராக அடைய உதவிய இந்த மகத்தான ஸ்லோகத்தை, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சொல்லலாம். தம் மனதில் தாம் கணவனாக வரித்திருக்கும் ஆண்மகனையே தன் வாழ்க்கைத் துணையாகப் பெறுவதும் சாத்தியமாகும். முக்கியமாக ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.

    முதல் கருட சேவை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் கருட சேவை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட இரு கருட சேவை நிகழ்ச்சிகளில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறப்பிடம் பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறப்பிடம் பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் 30, 31-ந்தேதி கருத்தரங்கு நடந்தது. அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள், தொல்லியல் துறை அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள், தகவல்கள் பற்றிய விவரங்களை புத்தகமாக வெளியிடுவோம்.

    ஜபாலி தீர்த்தத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அது சார்ந்த முன்மொழிவுகளை வருவாய்த்துறைக்கு அனுப்பி உள்ளோம். அங்கு, ஆஞ்சநேயர் சிலை அமைப்பதுடன் ஒரு பூங்கா உருவாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சித்தூர் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சித்தூர் மாவட்டம் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா 2 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், யாக சாலையில் ஹோம பூஜை நடக்கிறது. மாலை ஊஞ்சல் சேவை, சீதா-ராமர் சன்னதியில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு அனுமந்த வாகனத்தில் உற்சவர் பட்டாபி ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வருகிறார்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், யாக சாலையில் ஹோம பூஜை, இரவு ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி, ஊஞ்சல் சேவை, கருட சேவை ஆகியவை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.
    பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.

    ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.

    உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.

    எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.

    நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது. வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.

    சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.

    இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.
    கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது.
    அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அவிநாசி வாழ் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் மிராசு மற்று பக்தர்கள் சார்பில் கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் மனு வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும் உபகோவில்களான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவில், ஆகாசராயர் கோவில் ஆகிய கோவில்களில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டு வந்தது.

    தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டதால் தங்கள் தலைமையில் அறநெறிகளின்படி பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அறநிலையத்துறை மூலம் அனுமதி பெற்று, கும்பாபிஷேக விழாவை நடத்தி தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், கொரோனா நோய் தொற்று 3-ம் அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று ஆணை வெளியிடப்பட்டது.

    தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கான தரிசனம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

    பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பலாம். மேலும்
    வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை.

    எனவே நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்து வருகிறது.

    ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகள் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றன.

    நேற்று காலையில் ‘நாரைக்கு முக்தி கொடுத்த லீலை’ நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நாரைக்கு முக்தி அளித்த சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    மதுரைக்கு தெற்கே ஒரு குளத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அப்போது அந்த குளத்தில் முனிவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மேலும் அந்த குளத்தில் இருந்த மீன்கள் முனிவர்கள் மீது புரண்டு விளயாடியது. அதை கண்ட நாரை அந்த மீன்களை உண்ணக்கூடாது என்று நினைத்து சாப்பிடாமல் இருந்தது.

    அப்போது அங்கிருந்த முனிவர்கள் பேசும் போது, மதுரையை பற்றியும் அங்கிருந்த பொற்றாமரை குளத்தின் சிறப்பை பற்றியும் தெரிவித்தனர். உடனே நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது.

    அப்போது நாரை இறைவனிடம், “பொற்றாமரைக்குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் பொற்றாமரைக்குளத்தில் இருக்கக்கூடாது” என்று கேட்டு இறைவனிடம் வரம் வாங்கியது.

    நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று புராணம் கூறுகிறது. இந்த திருவிளையாடலை குறிக்கும் வகையில்தான், நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.
    பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருள, விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    விருத்தாசலத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், கடந்த 10-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலையில் விநாயகர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருள, விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் கருடாழ்வாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.
    இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும். உங்களை அறியாமலேயே, ஒரு சக்தி உங்களுக்குள் வந்து சேரும், என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான கருடாழ்வார் மந்திரம் இதோ.

    ஓம் ஸ்ரீ காருண்யாய
    கருடாய வேத ரூபாய
    வினதா புத்ராய விஷ்ணு
    பக்தி பிரியாய அமிர்த
    கலச ஹஸ்தாய பஹு
    பராக்ரமாய பக்ஷி ராஜாய
    சர்வ வக்கிர சர்வ தோஷ,
    விஷ சர்ப்ப விநாசனாய
    ஸ்வாஹா

    தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.
    திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் 2-வது ஆண்டாக நேற்றும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழா நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருக்கல்யாண வைபவங்கள் அனைத்தும் கோவிலின் உள்ளேயே நடந்து வருகின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதையொட்டி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெற்கு கோபுரம் அருகே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு வேத மந்திரங்கள் முழங்க இரவு 7.40 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் ராஜாகுமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், ககாரின் ராஜ், மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், காசாளர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் 2-வது ஆண்டாக நேற்றும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
    ×